மெய்யான திராட்சச்செடியும், கள்ள திராட்சச்செடியும் THE TRUE VINE AND FALSE VINE 55-0607 மாலை வணக்கம் நண்பர்களே. இந்த சாயங்கால நேரத்திலே நம்முடைய கர்த்தருடைய நாமத்தில் இங்கே ஊழியம் செய்ய மீண்டும் வந்திருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அந்த சூறாவளி மேகங்கள் எல்லாரையும் பயமுறுத்திவிடும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது பயமுறுத்தவில்லை. வானிலை எப்படி இருந்தாலும் நீங்கள் உத்தமமாக வருவதை பார்க்கும் போது. அது உங்களை நான் மிகவும் உயர் வாக எண்ண செய்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பாக பில்லி வந்து கதவை தட்டியது என்னை ஆச்சரியபடவைத்தது. வழக்கமாக அவன் கதவை தட்டும் போது நான் பதிலளிக்கவில்லையென்றால், நான் ஜெபத்தில் இருக்கிறேன் என்பதை அறிந்து அவன் சென்று விடுவான். பின்பு நானே வரும்வரை அவன் காத்திருப்பான். ஆனால் சில சமயங்களில், அவனுடன் யாராவது வந்து விட்டால் சின்ன பையன் தட்டிக் கொண்டே இருப்பான், அவன் சத்தமாக, "அப்பா" என்றான். நான்“ என்ன?" என்றேன். "நீங்கள் இப்பொழுதே வந்து விட்டால் நல்லது; ஏனெனில் நீங்கள் தான் இன்றிரவும் பிரசங்கம் செய்ய வேண்டும்; சகோதரன் ஜாக் வரவில்லை." என்றான். எனவே நான் உடனடியாக அங்கிருந்து வந்துவிட்டேன். அங்கிருந்து கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நான் உள்ளே வருகிறேன் ,அந்நேரத்தில் அவர் வருவதை நான் விரும்பவில்லை – நீங்கள் அப்படியாக பாடிக் கொண்டிருந்தீர்கள், சகோதரன் தோம்(Thom) வேதம் வாசித்துக் கொண்டிருந்தார். 2. நல்லது, என்னவாயினும் இங்கிருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். ஏன் எதற்காக என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னிடம் மேலாளராக வேலை செய்தவர் இராஜினாமா செய்து விட்டார், யாருக்காவது வேலை வேண்டுமா? நான் வேலை கொடுக்க தயாராக இருக்கிறேன், ஏனெனில் கூட்டங்களில் நான் பேச வேண்டியிருக்கும் போது, பேசிவிட்டு கூட்டங்களுக்குள் செல்வது என்பது மிகவும் கடினமாயிருக்கிறது. ஏனெனில் ஆரம்பத்திலேயே நீங்கள் அசதியாகிவிடுவீர்கள் (பாருங்கள்?), அது நிச்சயமாகவே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நிச்சயமாக, வேலையை விட்டு இராஜினாமா செய்யாதவரை அவர் உடனே வந்து விடுவார் என நான் நம்புகிறன. பல வருடங்களாக என்னிடம் மேலாளராக ஒருவர் வேலை செய் தார், அது சகோதரன் பாக்ஸ்டர். பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த அவரை உங்களில் பலருக்கு தெரியும். இப்பொழுது அவர் என்னுடன் இல்லை; அவருக்கு மிகவும் அதிகமான வேலை இருக்கிறது. அவர் ஏதோ ஒரு குழுவிற்கு, எதோ ஒரு ஐக்கியத்திற்கு சென்று விட்டார் மேலும் ரஷ்யாவிற்கு ஏதோ ஒளிபரப்பு செய்கிறார். அவர் பற்பல வேலைகளில் ஈடுப்பட்டிருக்கிறார். அவரால் போதுமான கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது. 3. என்னுடைய கூட்டங்கள் சிறிது வித்தியாசமானவைகள்; கர்த்த ருடைய ஆவியானவர் வழிநடத்தும் விதமாகவே நான் செல்ல வேண்டும். அவர் எங்கெல்லாம் என்னை அழைக்கிறாரோ அங்கெல் லாம் நான் உடனே சென்று விடுவேன். ஏனெனில் அதை நான் உடனே செய்தாக வேண்டும். மேலாளருக்கு அது ஒரு விதத்தில் மிகவும் கடினமான வேலை; எந்த வழியாக செல்வது என்று மேலாளருக்கு தெரியாது, எனவே அவர்கள் எல்லா கூட்டங்களை பற்றிய பட்டியலை வைத்துக் கொள்வார்கள். ஒரு வேளை எழுதி வைத்து கொள்ளலாம். அன்றொருநாளில், அமெரிக்காவை சேர்ந்தநானூறு முக்கிய நகரங் களில் ஆராதனைக்கான அழைப்பு இப்பொழுதே இருக்கிறது என்று கூறினார்கள். அப்பொழுது, அவர்கள் அப்படி கூறும் போது, நான் ஆவியினால் வழி நடத்தப்பட்டு சிக்காகோ அல்லது இந்த பக்கமாக வழி நடத்தபடுவேன். "அந்த இடங்களில் ஏதேனும் கூட்டங்கள் இருக்கிறதா?" என்றுகேட்பேன். "நல்லது ,யாரையாவது ஆயத்தம் செய்வோம்" "நல்லது, ஒழுங்கு செய்து விடுங்கள்; உடனே நாம் அங்கு செல் வோம்." ஆகவே அப்படிதான் நாங்கள் செய்து வருகிறோம். 4. அந்த விதத்தில் பார்த்தால் மிகவும் திட்டவட்டமான மாற்றவே முடியாத கூட்டங்கள் என்று எதுவும் இல்லை; நாங்கள்குவாக்கற் (Quakers) போன்றவர்கள்; ஆவியானவர் எப்படி அசைகின்றாரோ, அப்படியே நாங்களும் அசைவோம். அது ஒரு நல்ல யோசனை என்று நான் நினைக்கிறேன், நீங்கள்அப்படி நினைக்கவில்லையா? சில நாளைக்கு முன்பு இங்கே ஒரு குறிப்பிட்ட நகரத்தில் நான் ஒரு பெரிய கூட்டத்தை ஒழுங்கு செய்தேன்... கர்த்தர் வழிநடத்தி னபடி நான் செல்லாததால், ஆப்ரிக்காவில் இருந்த போது நான் ஒரு சில பிரச்னைக்குள்ளானேன்; அப்பொழுது நான் இது போன்று மீண்டும் செய்யவே மாட்டேன் என்று அவருக்கு வாக்களித்தேன். ஒரு மிக பெரிய அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, ஒரு மத்தியான வேளையில் எதிர்பாராத நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் என்மீது அசைவாடி இன்னொரு நகரத்திற்கு என்னை அனுப்பினார். நல்லது, நீங்கள் எதுவும் பிரச்சனை என்று பேசினால், அன்று எங்களு க்கு இருந்ததுதான் உண்மையான பிரச்சனை. அந்த மிக பெரிய கூட்டத்தை அவர்கள் முடித்தனர். ஒரு ஊழியக்காரர், ஒரு சார்மேன் (chairman) தரையிலிருந்து குதித்து, "சகோதரன் பிரன்ஹாமே, நீர் ஒரு அடிப்படைவாதி என்று உரிமை கோருகிறீரே, இது போன்ற காரிய த்தை நீர் வேதாகமத்தில் எங்கே பார்த்திருக்கிறீர்?" என்றார். "நல்லது, அது... அது வேதாகமத்தில் இருக்கிறது" என்றேன். "எங்கே?" என்றார். "பிலிப்பு சமாரியாவில் மிக பெரிய ஒரு எழுப்பதல் கூட்டத்தில் இருந்த போது, பரிசுத்த ஆவியானவர் அவனை அங்கிருந்து வெளியே அழைத்து, பாலைவனத்தில் ஒரு மனிதனிடம் அனுப் பினார்" என்றேன். அது சரி தானே? நமக்கு தெரிந்தவரை, அவன் மீண்டுமாக சமாரியாவிற்கு செல்லவே இல்லை. ஆனால் அந்த கீழ்ப்படிதல், எத்தி யோப்பியாவிற்கு சுவிசேஷத்தை கொண்டு சென்றது. (அப்போஸ்தலர் – 8:5,6....40) 5. ஓ, பரிசுத்த ஆவியோடு கூட நகர்ந்து செல்வது மிகவும் அருமை யானதல்லவா? இங்கே எத்தனை பேர், தெய்வீக பிரசன்னத்தினால் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை நான் பார் க்கட்டும், எல்லா விடங்களிலும், மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? ஓ, என்னே, அது அற்புதமாக இல்லையா? இங்கே நாம், பலதரப்பட்ட ஸ்தாபனங்களில் இருந்து கூடியிருக் கிறோம். என்று நினைக்கிறன். மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரெஸ் பிட்டேரியன், யாத்திரை பரிசுத்தவான்கள், நசரேன்ஸ், பெந்தெகொ ஸ்தே, தேவனின் சபை மற்றும் அசெம்பிலிஸ் ஆப் காட் மற்றும் ஓ, வேறென்னன. நாம் பரலோகத்திற்கு செல்லும் போதும் அது அப்படிதான் இருக்கப்போகிறது. எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருப் போம்; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக, அவர்கள் மெத்தோடி ஸ்ட்டுகள் இங்கேயும் பாப்டிஸ்ட்டுகள் இங்கேயுமாக கொண்டிருக்கப்போவதில்லை. 6. நான் நியூ அல்பானியில் வாழ்ந்த ஒரு பழைய மனிதன், எனக்கு கீழாக ஒரு நல்ல மனிதன் இருந்தார். அவர் மெத்தோடிஸ்ட் சபை போதகர் .நான் பாப்டிஸ்ட் சபையில் போதகனாயிருந்தேன். எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல ஐக்கியம் இருந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக் கிண்டல் அடித்துக் கொள்வோம். அவர் யாரோ ஒருவரை கொண்டு வருவார்; தெளிப்பு ஞானஸ்நானம் பெறவிரும் பும் யாரோ ஒருவரை நான் அங்கு கொண்டு செல்வேன். "நல்லது, என்னுடைய தாயார் தெளிப்பு ஞானஸ்நானம் பெற்றார்கள், எனவே நானும் அதையே விசுவாசிக்கிறேன்" என்பார்கள்.. எப்படியாயினும் அவர்கள் என் சபையில் ஒரு நல்ல அங்கத்தினராக இருக்கமாட்டார் கள். எனவே எனக்கு ஒரு நல்ல மெத்தோடிஸ்ட் சபை தெரியும், தெளிப்பு ஞானஸ்நானம் பெற வருபவரை சகோதரன் ஜான்சனிடம் நான் அழைத்து செல்வேன். நான் "இப்பொழுது, சகோதரன் ரான் அவர்களே, தெளிப்பு ஞானஸ்நானம் பெறுவதற்காக ஒரு மனிதன் இங்கே இருக்கிறார். போதுமான தண்ணீரை குறித்து அவருக்கு போதிக்க என்னால் முடியவில்லை. ஆகவே நீங்கள் இவருக்கு தெளிப்பு ஞானஸ்நானம் கொடுங்கள்" என்பேன். மேலும், "இப்பொழுது என்னுடைய இடத்தில் மிகவும் வறட்சியாயிருக்கிறது. நீங்கள் யார் மீதாவது தெளிக்க விரும்பினால், எனக்கு தெரிந்ததிலேயே இவர்தான் சிறந்த மனிதர்" என்பேன். அதேபோல், அவரிடம் யாரவது முழுக்கு ஞானஸ்நானம் பெறவ ந்தால், அவர், "இப்பொழுது, நான் உங்களை பில்லியினிடம் கூட்டி செல்வேன் ஆனால் நிச்சயமாக அவர் உங்களை மூழ்கடித்துவி டுவார்" என்பார். எங்களுக்கிடையில் ஒரு நல்ல ஐக்கியம் இருந்தது. அதே போன்ற ஐக்கியத்தைத்தான் நாமும் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? எப்படியாயினும் நம்முடைய சிறு சிறு வேறுபாடுகள் எந்தவொருமாற்றத்தையும் கொண்டு வர முடியாது. "ஒரு மனிதன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்." என்று இயேசு கூறினார். அதுதான் மிகவும் முக்கியமான காரியம். நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறந்தி ருந்தால், நீங்கள் என் சகோதரரும் என் சகோதரிகளுமாயிருக்கிறீர் கள். நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சார்ந்தவர்கள் என்பது பொருட்ட ல்ல, மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், ரோமன் கத்தோலிக் அல்லது எந்த ஸ்தாபனமாயிருந்தாலும் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதரரும் சகோத ரிகளுமாயிருக்கிறோம், ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே ஆவியினால் பானம் பண்ணுகிறோம். ( யோவான் – 3:5) 7. நல்லது, என்னிடம் பேசுவதற்கு எந்த பொருளும் இல்லை. கர்த்தர் எனக்கு என்ன கொடுக்க போகிறாரோ அதையே நான் சார்ந்திருக்கிறேன். ஏனெனில், இந்த இரவு சகோதரர் மூர் இங்கே இருப்பார் என்று எந்தவிதமான சந்தேகமுமின்றி நினைத்தேன். இவ்வளவு நேரம் அவருக்காக காத்திருந்தேன் அவர் திங்கள் கிழ மையே இங்கே இருப்பேன் என்று வாக்களித்தார், ஆனால் இன்று செவ்வாய் கிழமை, இன்னும் அவர் இங்கே வரவில்லை. இந்த முறை அவரை நான் மன்னிக்கிறேன். ஆனால் அவர் மட்டும் நாளை இங்கே வரவில்லை என்றால், நாளைக்கு அவரை தொலைபேசியில் அழைத்து என்ன நடக்கிறது என்று பார்க்க போகிறேன். நாம் வேதவசனத்திற்கு திரும்புவோம், இங்கே – கொஞ்சம் பழைய ஏற்பாட்டிற்க்கு திரும்புவோம். நான் சற்றே... சிறிது நேரத்தி ற்கு முன்பு ஏதோவொன்று என் நினைவில் வந்தது. ஒருவேளை, அதை நாம் யோவேலின் புஸ்தகத்தில் பார்க்கலாம். கர்த்தருக்கு சித்தமானால், நாம் அதை வாசிப்போம், சிறிது நேரத்திற்க்கு அதை வாசிப்போம். பில்லி என்னை பயமுறுத்த நினைத்தான். அவன் கூறினான், "அப்பா, சீக்கிரம் வாருங்கள், அவர்கள் உங்களுக்காக காத்திருப்பா ர்கள், 8:15க்கு ஆரம்பிக்க வேண்டும்" என்றான். "அவர்களிடம்... சகோதரன் மூர்.." என்றான். 8. இதோ இங்கே, யோவேல் முதலாவது அதிகாரம், ஒரு சிறு வேத வாக்கியத்தை வாசித்து விட்டு சிறிது நேரம் பேச விரும்புகிறேன், பரிசுத்த ஆவியானவர் நாம் என்ன செய்ய வேண்டும் என கூறுகிறார் என்று பாப்போம். நான்காம் வசனத்தை வாசிப்போம்: பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது… வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைப்புழு தின்றது…; பச்சைப்புழு விட்டதை பச்சைக்கிளி தின்றது… பச்சைக்கிளிவிட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது இப்போது, அடுத்தது, 20--ஆம் வசனம் என்று நம்புகிறேன், 25-ஆம் வசனம். நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். ( யோவேல்-1:5, 2:20-15) 9. இப்பொழுது, ஒரு நிமிடம் ஜெபத்திற்காக நம்முடைய தலை களை தாழ்த்துவோம். எங்கள் பரலோக பிதாவே, நாங்கள் இன்றிரவு இந்த ஆகாயத்தின் கூடார மறைவிலே ஒன்று கூடியிருக்கிறோம், எங்களுக்கு இந்த சிலாக்கியத்தை தந்த வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரை மகிமைபடுத்தவும் துதிக்கவும் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். இன்றிரவு நாங்கள் நன்றியோடு கூடியி ருக்கிறோம், இங்கே இருப்பதற்காகவும், நாங்கள் ஆரோக்கியத் தோடும் சந்தோஷத்தோடும் இருப்பதற்காகவும் நன்றி கூறுகிறோம். கர்த்தாவே, இங்கே அநேக வியாதியஸ்தர் இருக்கிறார்கள்,, நாங்கள் கூடியிருக்கும் நோக்கம், இன்றிரவு இங்கே பெலவீனமாக இருப்பவ ர்கள், இந்த இடத்தை விட்டு கடந்து செல்லும் போது ஆரோக்கிய மாகவும் சந்தோஷத்துடனும் செல்லட்டும். இதை அருளும் கர்த் தாவே. இங்கே பாவிகள் இருந்தால், அவர்கள் இங்கே இருந்து செல்லும் போது ஆவிக்குரிய ஆரோக்கியத்தோடும் தேவ ஆவியால் நிரப்பபட்டவர்களாய் செல்லட்டும். இதை அருளும் கர்த்தாவே. பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது போன்று தேவனுடைய ஆவி எங்கள் மீது இறங்கி வந்து எங்களை ஆசிர்வதிக்கட்டும்.தேவனே அந்த காரியத்தை மறுபடியும் செய்யும். உம்முடைய ஆசீர்வாதங் களை எங்கள் மீதும் பொழியும்; நாங்கள் இங்கே ஒரு குடையை எங்கள் மேல் பிடித்து கொண்டு உட்காராமல், கீழே விழவிருக்கும் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு ஆயத்தமாய் பாத்திரத்தை நேராக மேலே உயர்த்தி பிடித்தவாறு உட்காரட்டும். இப்பொழுதும், என்ன கூறுவது என்று தெரியாத ஒரு எதிர்பார்ப்பு டன் இங்கே இருக்கிறோம். ஆனால் நீர் எங்களுக்கு வாக்களித்து ள்ளீர், "உன் வாயை விரிவாய் திறந்தால், நான் அதை நிரப்புவேன்" என்று. (சங்கீதம்-81:10) நீர் அதை செய்வீர் என்று நாங்கள் விசுவாசிக் கிறோம். இன்றிரவு சகலத்தையும் உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கி றோம். பிதாவே, உமக்கு சித்தமானால், நீர் வார்த்தைக்குள்ளாக வாரும். பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் பேரில் போஷிக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை எடுத்து, எங்களுடைய தேவைக்கேற்ப ஒவ்வொரு இருதயத்திற்கும் அதை அளிக்கட்டும். மேலும் ஒரு மகத்தான சுகமளித்தல் கூட்டம் இருக்கட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 10. இப்பொழுது, கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டு வாராக. உங்களால் நான் பேசுவதை கேட்க முடிகிறதா? உங்களு டைய கரங்களை உயர்த்துங்கள், எல்லாராலும் கேட்க முடிந்தால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எனக்கு... எதிரொலிப்பது போன்று தெரிகிறது, எனக்கு தெரியவில்லை. ஆனால் யாரோ ஒருவர், புத்தக விற்பனையாளர்களில் யாரோ ஒருவர் கூறினார், மேலேயும் அங்கே ஓரத்தை சுற்றியும் நன்றாக இருக்கிறதென்று, அப்படியானால் அது இங்கே வந்து விடுகிறது. இந்த வழியாகத்தான் எதிரொலி வருகிறது. ஆனால் நீங்கள் இப்பொழுது அருகாமையில் இருக்கிறீர்கள். மேலும் இப்பொழுது, நாம் மெத்தோடிஸ்ட்டுகள் அல்லது நாம் பாப்டிஸ்டுகள் அல்லது நாம் பிரஸ்பிடேரியன்கள் அல்லது பெந்த கோஸ்த்தேயினர் என்பதையெல்லாம் நாம் மறந்து விடலாம். சிறிது நேரம் இப்பொழுது நாம் ஐக்கியத்தோடு கர்த்தருக்குள் களிகூர் வோம். இப்பொழுது ஒருவேளை, நாளைய தினத்தில் சகோதரன் மூர் வந்து இது போன்ற ஆரம்ப காரியங்களை கவனித்துக்கொண்டு செய்தி கொடுப்பாரானால், நான் நேரடியாக மேடைக்கு வந்து வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பேன். பாருங்கள்? இங்கே ஜெபத்தி ற்காக நூற்றுக் கணக்கான ஜனங்கள் இருக்கின்றனர். 11. நான் பிரசிங்கிப்பதற்கு முன்பாக இதை கூற விரும்புகிறேன். அமெரிக்கா ஜனங்கள் வெளிநாட்டு ஜனங்களை போன்று கிடை யாது. நல்லது, நீங்கள் வெளிநாடுகளில் இருக்கும் ஜனங்களை சந்தித்தால், ஆப்பிரிக்காவில் அல்லது வேறெங்காவது சந்தித்தால் அவர்கள் அமெரிக்கர்களை போன்று கிடையாது. ஆப்பிரிக்கர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். சகோதரன் தோம் அங்கிருந்துதான் வருகிறார். நல்லது, அவர்கள் இயற்கைக்கு மேம்ப ட்ட அசைவை ஒரு முறை பார்த்து விட்டால் போதும், அது அசலான இயற்கைக்கு மேம்பட்ட அசைவு என்று பார்த்து விட்டால் போதும், அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. நீங்கள் வெறுமனே அவர்களிடம், "எழுந்து வீட்டிற்கு போ" என்று சொல்லி விட்டால் போதும். ஒவ்வொரு ஊனமுற்றவர்களும் எழுந்து நடந்து சென்று விடுவார்கள். ஒவ்வொரு செவிடரும் செவித்திறனை பெற்றுக்கொள்வார்கள், மேலும் ஒவ்வொரு குருடரும் பார்வைய டைவார்கள். அவர்கள் எல்லா ஊன்று கோல்களையும் மற்ற உபகர ணங்களையும் கட்டி மூலையில் வீசி விடுவார்கள். ஸ்வீடனில் நாங்கள் இருந்த போது, அங்கே அவர்களுடைய மொழியை எப்படி பேசுவதென்று கூட தெரியாமல் அங்கே அமர் ந்திருந்தேன். பரிசுத்த ஆவியானவர் ஜனக்கூட்டத்தின் மத்தியில் அசைவாடி யாருக்காவது கூறுவார், அவர்களின் பெயர் வேறு என்னவாக இருக்கும் என்று ஆங்கிலத்தில் கூறுவார், மொழி பெயர் ப்பாளர். அவர்களுடைய பெயர்கள் வாயில் நுழையாது, அவர்கள் யார் என்றும், அவர்களிடம் என்ன பிரச்சனை என்றும், அவர்கள் எங்கே இருந்து வருகிறார்கள் என்றும் பரிசுத்த ஆவியானவர் கூறுவார். (எபி-4.12) அங்கு சுற்றியிருக்கும் அத்தனை நபர்களும், எல்லாருமே உடனே எழுந்து ஊன்று கோல்களையும் மற்றவைக ளையும் வீசி விட்டு நடந்து செல்வார்கள். அவர்கள்--அவர்கள்... அவர்கள் எப்படி உணர்ந்தனர் என்று எனக்கு கவலை இல்லை. என்னவாயினும் அவர்கள் விசுவாசித்தனர். தேவன் அவர்களோடு அவ்வளவு அருகாமையில் இருப்பாரானால், அவர்கள் நடந்து சென்று. அதை விசுவாசிக்கிறார்கள் எப்படியாயினும் அதை விசுவா சிக்கிறார்கள். அவர்கள் சாட்சி கொடுத்துக் கொண்டே சென்றார்கள். 12. அது உண்மை, நாமும் அதைதான் செய்ய வேண்டும். ஆனால் அமெரிக்கர்களாகிய நாம், நம்மிடையே உள்ள காரியம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா? நாம் ஒவ்வொரு வேதபாட பள்ளி களாலும் மருந்தேற்ற பட்டிருக்கிறோம், ஒருவர் மற்றவருக்கு நேர் எதிராக. இங்கே அமர்ந்திருக்கும் ஒருவர் இப்பொழுது கூறுவார், "அது ஒரு மனதை வாசிக்கும் காரியம் என்று டாக்டர் ஜோன்ஸ் கூறினார்" என்று. "நல்லது, என் பாஸ்டர் கூறினார், அந்த மனிதன் ஒரு பெயெல் செபூல்; அவன் ஒரு பிசாசு" இன்னொருவர், "நல்லது, அது கர்த்தரே கிடையாது; என்னால் அதை சொல்ல முடியும்" என்று. மேலும் ஜனங்களுக்கு தெரியாது எதை விசுவாசிப்பது என்று. நீங்கள் தேவனுடைய வேதத்தை விசுவாசியுங்கள்; அதுதான் சரியான ஒன்று. அது எந்த சூழ்நிலையாய் இருந்தாலும் "எல்லா மனிதரும் பொய்யர்; நானே சத்தியபரர்" என்று தேவன் கூறுகிறார். ஒரு உணவு பண்டத்தின் சுவையை நிரூபிக்க வேண்டுமானால் (பழையபழ மொழி) அதை ருசித்து பார்ப்பதே அதை நிரூபிக்கும் வழியாகும். அது தன்னுடைய வார்த்தையில் இருக்கிறதென்று தேவன் கூறி, அதை உற்பத்தி செய்வாரேயானால், அதை விசுவாசி த்து முன்னேறி செல்லுங்கள். மற்ற எல்லாவற்றையும் மறந்து விடு ங்கள், தேவன் ஒருவர் தான் சத்தியபரர். (ரோமர்-3:4) இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால் இன்றிரவு நாம் சிறிது பேசப் போகிறோம். ஒரு பழைய சுவிசேஷ செய்தியை, கர்த்தர் நமக்கு உதவி செய்வாரானால், "மெய்யான திராட்சச்செடி மற்றும் கள்ள திராட்சச்செடி" என்ற பொருளின் பேரில் பேசப் போகிறோம். 13. கூறப்பட்டதிலேயே மிக பெரிய கதையை நீங்கள் அறிவீர்கள், கூறப்பட்டதிலேயே மிகவும் பெரிதான அந்த பொய்யை நீங்கள் அறிவீர்கள், அந்த பொய்யினுள் முழு உண்மை அடங்கி இருந்தது. இப்பொழுது, கூறப்பட்டத்திலேயே மிகவும் பெரிய பொய் எது வென்றால், சாத்தான் ஏவாளுக்கு கூறிய பொய்யே ஆகும். பாருங் கள், அதில் முழு உண்மையும் இருந்தது. நீங்கள் அப்படியாக வந்து ஒரு நேரடியான பொய்யை கூறுவீர்களானால், நீங்கள் அதை விசுவா சிக்க மாட்டீர்கள்; உங்களுக்கே எது சரியென்று தெரியும். ஆனால் தொண்ணூற்று ஒன்பது (99%) சதவீதம் உண்மையும் ஒரே சதவீதம் பொய்யும் இருக்கும் இடத்தை நீங்கள் காண்பீர்களானால், அது வஞ்சனையாகும். அது போன்ற காரியங்களை தான் நீங்கள் கவனிக்க வேண்டும், அந்தவிதமான காரியங்களை கவனித்தே ஆக வேண்டும். மேலும் அது போன்ற காரியங்களில் பிசாசு மிகவும் திறமைசாலியாக இருக்கிறான். அவன் ஏவாளிடம் கூறியதில் ஒரே ஒரு பொய்யை தவிர மற்ற எல்லா முமே உண்மையாக தான் இருந்தது.பாருங்கள்? அவன் கூறினான், "எது நன்மை தீமை என்று உனக்கு தெரியாது; உனக்கு தீமைக்கும் நன்மைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆகவே இப்பொழுது, நீ இந்த பழத்தை புசித்தால், உன் கண்கள் திறக்கப் பட்டு, நன்மை தீமை எதுவென்று அறிந்துக்கொள்வாய். நீ ஞானம் அடைந்து, தேவனை போன்று அறிந்துக்கொள்வாய்" என்றான். நல்லது, அதெல்லாம் உண்மைதான். சரியாக, அது எல்லாம் உண்மை தான். "நாங்கள் சாகவே சாவோம் என்று தேவன் கூறியிருக்கிறார்" என்று அவள் கூறினாள். அவன் கூறினான் "ஓ, நிச்சயமாக நீங்கள் சாகவே சாவதில்லை" என்றான். அவன் அறிவார்ந்த முறையில் காரணங்களை கூறி அவளை இணங்க செய்தான். இப்பொழுது, அங்கே இருந்து தான் பொய்யானது வருகிறது. நாம் எல்லாவற்றையும் பிரசங்கித்து விட்டு மிகவும் முக்கியமான அடிப்படையான வார்த்தையின் மூலத்தை விட்டுவிட கூடும். அங்கி ருந்துதான் பொய்யானது வருகிறது. பாருங்கள்? அங்கிருந்துதான் பிர ச்சனையே ஆரம்பிக்கிறது. (ஆதியாகமம்-3:3,4) 14. இப்பொழுது, நாம் திரும்ப சென்று திராட்சை செடியை பற்றி ஒரு சில நிமிடங்கள் பார்ப்போம். தேவன் தன்னுடைய சபையை திராட்சை செடிக்கு ஒப்பிடுகிறார். அவர், "நானே மெய்யான திராட்சைசெடி. நீங்கள் கொடிகள்" என் கிறார்.(யோவான்–15:5)அந்த கொடி திராட்சை கொடியாயிருந்தால் அது திராட்சையின் ஜீவனை கொண்டு வரும். அந்த கொடி திராட்சை பழத்தை உற்பத்தி செய்தே ஆக வேண்டும். அது சரிதானே? கிறிஸ் துவில் இருந்த ஜீவன் அந்த ஒவ்வொரு கொடியிலும் இருந்தே ஆக வேண்டும். அவருக்குள் இருந்த கிறிஸ்துவின் ஜீவன், தேவனுடைய இராஜ்யத்தை பிரசங்கித்துக் கொண்டும், வியாதிகளை சுகமாக்கிக் கொண்டும் இருந்தது. அதேபோன்று ஒவ்வொரு கொடியும் வளர்ந்து வரும் போது அதே சாரத்தை கொண்டதாகவே இருக்கும். அதை தவிர வேறேதும் இருக்காது. கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது... இன்றிரவு ஜான் டல்லலிங்கரின் ஜீவன் எனக்குள்ளாக இருக்கிறது என்று கூறுவேனே யானால், பெரிய துப்பாக்கிகளோடு நான் வருவேன் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். அந்த மனிதனின் ஆவி எனக்குள்ளாக இரு ந்தால், நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். நீங்கள்... எனக்குள்ளாக ஓவியரின் ஆவி இருக்கிறது என்று நான் உங்களிடம் கூறினால், அதாவது ஒரு பெரிய, மகத்தான ஓவியரின் ஆவி எனக்குள்ளாக இருக்கிறதென்று கூறினால், நான் ஒரு நல்ல காட்சியை, அதாவது அந்த ஓவியன் வரைவது போன்றே நானும் வரைவேன் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஏனெனில் அவனின் ஆவி எனக்குள்ளாக இருக்கிறது. 15. பரிசுத்த ஆவி எனக்குள்ளாக இருக்கிறதென்று நான் கூறினால், பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருந்த போது அதாவது இயேசு கிறிஸ்துவில் பிரத்தியட்சமாய் இருந்தபோது அவர் செய்த கிரியை களை நானும் செய்வேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அது போன்ற ஜீவியம் செய்ய வேண்டும் என்றும், அதுபோன்றே சுவிசே ஷத்தை பிரசங்கிக்க வேண்டும் என்றும், அவர் செய்த காரியங்க ளையே நானும் செய்ய வேண்டும் என்று என்னிடம் எதிர்பார்ப்பீ ர்கள். ஏனெனில் கொடியானது அது எந்த செடியில் இருக்கிறதோ அந்த ஜீவனையே எப்பொழுதும் கொண்டு வருகிறது. இயேசு கூறினார், "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்". அதுசரிதான், அவர்களுடைய கனிகளினாலே அவர் களை அறிவீர்கள். (மத்தேயு-7:20) இப்பொழுது, ஒரு மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அது பார்ப் பதற்கு அத்தி மரத்தின் பட்டையை கொண்டதாய் இருக்கிறது, ஆனால் அது ஆப்பிளை உற்பத்தி செய்கிறது; அது எந்தவிதமான மரப்பட்டையை கொண்டிருக்கிறது என்று எனக்கு கவலை இல்லை; என்னை பொறுத்தவரை அது ஒரு ஆப்பிள் மரம்தான். ஏனெனில் அது ஆப்பிளைதான் உற்பத்தி செய்கிறது. அது அந்த மரத்தில் இருக்கும் ஜீவன் ஆப்பிள் மரத்தின் ஜீவன் தான் என்பதை காண்பிக்கிறது. அது ஆப்பிளைதான் உற்பத்திசெய்யும். அதே போன்று நீங்கள் ஆவியின் கனிகளை கொடுக்கும் வரை நீங்கள் எவ்விதம் உடை உடுத்தி இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதெல்லாம் பொருட்டேயல்ல. அது கிறிஸ்துவின் ஆவியை காண்பிக்கிறது, அது கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்பதை காண்பிக்கிறது. 16. சகலமும் ஆதியாகமத்தில் உண்டானது. சகோதரர்களே, ஊழியக் காரர்களே நீங்கள் ஆதியாகமத்தை வாசிக்க விரும்புகிறீர்களா? ஓ, அது வேதாகமத்தில் இருக்கக் கூடிய ஒரு மகத்தான புஸ்தகம் என்று நான் நினைக்கிறன். இன்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும் ஆதியா கமத்தில்தான் உண்டானது. "ஆதியாகமம்" என்றால் "ஆரம்பம்" என்று அர்த்தம். இன்று பூமியில் காணப்படும் எல்லா மனித கோட்பாடுகளும் ஆதியாகமத்தில்தான் ஆரம்பித்தது. இன்று பூமியில் இருக்கும் எல்லா உண்மையான சபையும் ஆதியாகமத்தில்தான் ஆரம்பித்தது. நாம்பார்க்கும் அனைத்தும், எல்லா அறிவியலும் கூட ஆதியாகமத்தி ல்தான் ஆரம்பித்தது. இயேசுவும் அதையேதான் சுட்டிக் காட்டினார் என்பதை கவனித் தீர்க்களா? அவர், "நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகு மாரனுடைய நாட்களிலும் நடக்கும்" என்றார். (லூக்-17:26) அவர்கள் என்ன செய்தனர் பாருங்கள்; அவர்கள் சிறந்தகட்டுமான பணி செய்பவர்களாக இருந்தனர். இங்கே உங்கள் நகரங்கள் எப்படி கட்டு கிறது என்பதை நீங்கள் பாருங்கள். அவர்கள் உலோகங்களை வடிவமைக்க ஆரம்பித்தனர்; அறிவி யல் சிறந்ததாயிருந்தது. அவர்கள் ஸ்பின்க்ஸை (sphinx), பிரமிடுகளை மற்றும் எல்லாவற்றையும் கட்டினர். அது போன்ற கட்டிடங்களை நம்மால் கட்ட முடியாது. சரியாக, அந்த காலம் மீண்டும் வந்திருக்கி றது. அவர்களிடம் மனித கோட்பாடுகள் இருந்தது; நம்மிடம் இருக் கும் எல்லாமுமே அவர்களிடமும் இருந்தது. இது கடைசி காலத்தை சிறப்பாக சுட்டிக் காட்டுகிறது. 17. இப்பொழுது கவனியுங்கள். இன்றிரவு நாம் தொடங்குவதற்காக, நாம் பின்னே சென்று மெய்யான திராட்சை செடி மற்றும் கள்ள திராட்சை செடியை ஒப்பிட்டு பார்க்க போகிறோம். இந்த இரண்டு மைக்குகளையும் எடுத்துக் கொள்கிறேன்; சிறிது நேரத்திற்கு முன்பாக இவைகளை இங்கே வைத்த மனிதன் யார் என்று எனக்கு தெரியாது, அந்த மனிதன் என்ன செய்தாரென்று அவருக்கே தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதைத்தான் அவர் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனெனில் ஒரு உதாரணத்திற்காக இவைகளில் ஒன்றை நான் சரியான திராட்சை செடியாகவும் மற்றொன்றை தவறான திராட்சை செடியாகவும் எடுத்துக் கொண்டு, அவைகளை ஒப்பிட போகிறேன். இப்பொழுது, ஏதேன் தோட்டத்தில் இருந்த முதல் மனிதன் ஆதாம் என்று நாம் பார்க்கிறோம். தேவன் அவனுக்கு உதவி செய்ய ஒருத்தியை உண்டாக்கினார், அவள் தான் ஏவாள். பின்பு காயீன் வந்தான் அதன்பின் ஆபேல் வந்தான். நாம் சரியாக அங்கே ஆரம்பிப்போம். இப்பொழுது, ஆவியானது மரிப்பதில்லை. மனிதன் மரிப்பான், ஆனால் ஆவியோ மரிக்காது. தேவன் தன்னுடைய மனிதனை எடுத்துக் கொள்கிறார், ஆனால் அவன் ஆவியையோ ஒருபோதும் எடுத்துக் கொள்வதில்லை. தேவன் எலியாவை எடுத்துக் கொண்டார் ஆனாலும் எலியாவின் ஆவி எலிசாவின் மீது இரட்டிப்பாக வந்தது. எண்ணூறு ஆண்டுகள் கழித்து அதே ஆவி யோவான்ஸ்நானன் மீது வந்தது. மேலும் இந்த கடைசி காலத்தில் மீண்டும் வருமென முன்னறிவிக்கப்பட்டிருக் கிறது. தேவன் கிறிஸ்துவை பூமியில் இருந்து எடுத்துக்கொண்டார், ஆனா லும் பரிசுத்தஆவி திரும்பவும் வந்தது. (11இரா2:9,10..15,லூக்கா1:17,மல்கியா, 4:5,6) 18. பிசாசும் தன்னுடைய மனிதனை எடுத்துக் கொள்கிறான், ஆனால் அந்த ஆவியோ மாறாமல் அப்படியே இருக்கிறது. இயேசு "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்" என்றார். "வருகி றவராகிய அந்த ஒருவரை காண்பித்த தீர்க்கதரிசிகளை, உங்கள் பிதாக்கள் கல்லெறியவில்லையா?" என்றார். பரிசேயர்களை பற்றி பேசினார். அது… (யோவான்-8:44,மத்தேயு-23:31) இதை நினைவு கூர்ந்து சிந்தையில் வைத்துக் கொள்ளுங்கள்: கம்யூ னிசம் அந்திகிறிஸ்துவின் ஆவி கிடையாது. அந்திகிறிஸ்துவின் ஆவி மதம் சார்ந்ததாயிருக்கிறது. இயேசு "கூடுமானால் தெரிந்து கொள்ள ப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அது அவ்வளவு நெருக் கமாயிருக்கும்" என்றார். (மத்தேயு-24:24) அது எதோ கம்யூனிசம் சார்ந்த தேவனுக்கு எதிரான தொடர்புக ளல்ல; அது மதம் சார்ந்த ஆவி. யோவான் அதை வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் கண்டான், அது தேவனுடைய சபையை போன்றே அமர்ந்திருப்பதையும், கர்த்தராகிய இயேசுவிற்காக கொல் லப்பட்ட ஒவ்வொரு இரத்த சாட்சியினுடைய இரத்தத்தையும் அது தனக்குள்ளாக கொண்டிருப்பதையும் கண்டு மிகவும் ஆச்சரியப்பட் டான். 19. இப்பொழுது, ஏதேன் தோட்டத்திலே, நாம் ஆதாமையும் ஏவா ளையும் போகவிட்டு விட்டு, அந்த இரண்டு பையன்களோடு ஆரம்பிப்போம், காயீன் மற்றும் ஆபேல். சில தினங்களுக்கு முன்பு நாம் அவர்களை பற்றி பேசினோம். அந்த பையன்கள் ஒவ்வொருவ ருமே ஆவிகள்தான். என்னுடைய கருத்தின்படி, சரியாக அங்கேதான் யூதாசும் இயேசுவும் முன்னடையாள படுத்தப்படுகின்றனர். எப்படி காயீன் ஆபேலை பலிபீடத்தின் மீது கொலை செய்தானோ, அப்ப டியே யூதாசும் இயேசுவை நம்பிக்கை துரோகத்தின் மூலமாகவும் அவரை மறுதலித்ததின் மூலமாகவும் அவரை பலிபீடத்தில் கொலை செய்தான். சில ஜனங்கள் கொல்கதாவில் மூன்று சிலுவைகளை மட்டுமே பார்க்கின்றனர்; ஆனால் நான்கு சிலுவைகள் இருந்தது. சிலுவை ஒரு மரத்தை குறிக்கிறது. அங்கே கிறிஸ்து இருந்தார், இரண்டு பக்கங்களி லுமாக இந்தப் பக்கம் ஒரு கள்ளனும் அந்த பக்கம் ஒரு கள்ளனும் அறையப்பட்டார்கள். யூதாஸ் அத்தி மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டான். இயேசு எப்படி சிலுவையில் அறையப்பட்டாரோ அப் படியேதான் யூதாசும் கிட்டத்தட்ட சிலுவையில் இருந்தான், ஏனெ னில் மரத்தின் மீது தூக்கிப் போடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவ னாயிருக்கிறான். 20. கவனியுங்கள், இங்கே தேவனுடைய குமாரன் மகிமையிலிருந்து கீழே இறங்கி வந்து, மனம்திரும்பிய பாவியை தன்னுடன் மீண் டுமாக மகிமைக்கே கொண்டு சென்றார். இங்கே கேட்டின் மகன் நரகத்திலிருந்து வந்து, தன்னுடன் கூட அவிசுவாசியை கூட்டிக் கொண்டு திரும்பவும் நரகத்திற்கே சென்றான். "நீர் தேவனுடைய குமாரனேயானால்" என்றான். பாருங்கள், சரியாக பொருந்துகிறது. ஆனால் அந்த பையன்களும், காயீன் மற்றும் ஆபேல், இருவருமே பக்தியுள்ளவர்களாய் இருந்தார்கள். அவர்கள் உண்மையாகவே பக்தியுள்ளவர்களாய் இருந்தார்கள்...?...காயீன் அங்கிருந்து வெளியே வந்து, தான் ஒரு அழிவுள்ளவன் என்பதை உணர்ந்தான், உத்தமம் இல்லாதவனாக உலகிற்கு வெளியே செல்ல வேண்டும் என்பதை அறிந்து. அவனால் வெளியே சென்று மரணத்தை நேரடியாக சந்திக்க முடியாமலிருந்தது. உத்தமத்தை தேவன் கேட்பதில்லை. உத்தமம், அது சரியானது தான் ஆனால் அது மட்டுமே போதாது. ஒருவேளை இன்றிரவு நாம் கங்கை நதிக்கு செல்வோமானால், அங்கிருக்கும் தாய்மார்களை கவனித்து பாருங்கள், அவர்கள் தங்களுடைய கருப்பு குழந்தைகளை முதலைகளுக்கு போடுவதை பார்க்கலாம். அந்த முதலைகள் தங்கள் வாயில் அக்குழந்தைகளை நசுக்கி கொன்று விடும், அது அவர்கள் தேவனுக்கானபலி. அது உத்தமம். 21. நீங்கள் ஏன் என்னுடன் இந்தியாவிற்கு வந்து, அங்கிருக்கும் ஜன ங்கள் தங்கள் காலணிகள் இல்லாமல் நெருப்பில் நடப்பதை பார்க்க கூடாது, அவர்களுடைய பாதங்களில் எரிகொப்புளங்கள் வந்து விடும். என்னுடன் கூட சீனாவிற்கு வந்து, அந்த சிறு பாதங்கள் உடைக்கப்பட்டு அவர்கள் தங்கள் கால் விரல்களால் நடப்பதை பாருங்கள். அவர்கள் எப்படியாய் பலி செலுத்துகிறார்கள் என்று பாருங்கள். மற்றும் எல்லாவற்றிலும், மிகவும் ஆழமான உத்தமம். ஆனால் அது இரட்சிப்பு இல்லை. உத்தமத்திற்கும் இரட்சிப்பிற்க் கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. பல சமயங்களில் அஞ்ஞானிகள் தங்களை வெட்டிக் கொள்வதும், ஈட்டிகளால் தங்களை குத்திக் கொள்வதும், கிறிஸ்துவத்தில் எப்பொ ழுதுமே செய்யப்பட்டதை காட்டிலும் மிகவும் ஆழமான, அதாவது நீங்கள் பார்த்ததிலேயே மிகவும் ஆழமான காரியங்களாயிருக்கும்... ஏன், கிறிஸ்தவர்கள் தெருக்களில் எழுப்புதலுக்காக நடந்து செல் வதே அரிதாயிருக்கிறது. அதுசரி. ஆனால் அந்த ஜனங்களோ எதை வேண்டுமானாலும் செய்வார் கள், தங்கள் பிள்ளைகளை கூட பலி கொடுப்பார்கள். ஆனால் அது அவ்வளவுதான், உத்தமம் அவர்களை கொண்டு வராது. "மனிதர்களு க்கு தோன்றுகிற செம்மையான வழிகள் உண்டு, ஆனால் அதன் முடிவோ மரணம்" (நீதி-14:12, நீதி-16:25) 22. அது இப்பொழுது நம்மை சரி பார்க்க செய்கிறது, நாம் எங்கே நிற்கிறோம் என்பதை சரி பார்க்க செய்கிறது. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். விளையாடுவதற்கு நேரமில்லை; சரியாவதற்கான நேரம் இது, நீங்கள் சரியாகத்தான் இருக்கிறீர்கள் என்ற நிச்சயத்து டன் இருங்கள். நீங்கள் இங்கே எங்காவது ஒரு கடைக்கு சென்று அல்லது ஒரு உணவு விடுதிக்கு சென்று ஒரு கோப்பை சூப் வாங்கி வருகிறீர்கள். அந்த சூப்பில் ஈ இருந்தால், நீங்கள் அதை திரும்ப கொடுத்து விடுவீர்கள். நீங்கள் நிச்சயமாக அதை குடிக்கவே மாட்டீர்கள். இந்த மாம்ச சரீரத்திற்குள் எதை அனுப்புகிறோம் என்பதில் நீங்கள் கவன மாயிருக்கிறீர்கள், ஆனால் உங்கள் ஆத்துமாவிற்குள் எதை வேண் டுமா னாலும் அனுப்புகிறீர்கள், அது என்னாவாயிருந்தாலும் பொரு ட்டல்ல, எந்த விதமான கோட்பாடாயிருந்தாலும் அல்லது எந்த வித மான உபதேசமாயிருந்தாலும் ஏற்றுக் கொள்கிறீர்கள். கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையை கொண்டு நீங்கள் உங்களை சரி பார்த்து க்கொள்வது நல்லது. நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், இந்த சரீரத்தை நீங்கள் எப்படி பார்த் துக் கொள்ளுகிறீர்கள் என்பது பொருட்டல்ல. ஒரு நூற்று ஐம்பது பவுண்ட் எடை கொண்ட மனிதனின் மதிப்பு வெறும் எண்பத்து நான்கு செண்டுகளே. அது சரி தான். ஆனால் உங்களிடம் பத்தாயிரம் உலகங்களுக்கு சமமான ஆத்துமா இருக்கிறது. நீங்கள் எண்பத்து நான்கு செண்டுகளை கவனித்துக் கொண்டு அந்த பத்தாயிரம் உலக ங்கள் எப்படி வேண்டுமானாலும போக அனுமதிக்கிறீர்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 23. இப்பொழுது, என்னோடு கூட ஆதியாகமத்திற்கு வாருங்கள். அங்கே தொழுதுக்கொள்ள அந்த இரண்டு பையன்களும் வருவதை கவனியுங்கள், இருவருமே தொழுது கொள்கிறார்கள். இப்பொழுது, காயீன் தேவனை தன் முழு இருதயத்தோடும் தொழுதுகொண் டான்; அவன் கர்த்தருக்கென்று ஒரு பலிபீடத்தை கட்டி பலியை செலுத்தி, (ஆதி-4:3) தனக்கு தெரிந்த விதத்தில் மிகவும் உத்தமமாக தொழுது கொண்டான். சபையை சேர்ந்த உத்தமும், பலிபீடங்களும் அவர்களை கொஞ்சம் கூட இரட்சிப்புக்கு கொண்டு வராது. பின்பு ஆபேல் வந்தான், சௌந்தரியம் இல்லமால் வந்தான். இதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதை எப்பொழுதுமே புரிந்து கொள்ளுங்கள்; குறிப்பாக சில சமய ங்களில் இங்கே இருக்கும் ஜனங்கள்... அதுதான்... என்னுடைய கூட் டங்களுக்காக பணம் செலவழிக்கும் என்னுடைய பெந்தேகோஸ்தே சகோதரர்களே உங்களுக்குத்தான் நான் பிரசங்கிக்க போகிறேன். பாருங்கள்? கவனியுங்கள் ... நாம் ... எப்படியோ அங்கே ஏதோ தவறாயிருக் கிறது. அதுசரி. நாம் மிகவும் அதிகமாக மற்ற சபைகளை போன்று நடக்க ஆரம்பித்து விட்டோமோ என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் அதை கீழே விடுகிறீர்கள். சகோதரரே, அது ஏற்றதாயிருக்கி றது... நாம் ...இன்றிரவு நமக்கு தேவையாயிருப்பது பழைய பாணியி லான எழுப்புதல் கூட்டமே. அந்த கடினமனதை உடைத்து ஜனங் களை வெளிக்கு கொண்டு வரும் எழுப்புதல் கூட்டமே தேவையாயி ருக்கிறது. 24. இப்பொழுது, உங்களுக்கு தெரிந்த முதல் காரியம், அதுபோன்ற ஒருகாரியம் தான் இஸ்ரவேலை தொல்லைக்குள்ளாக்கியது: புறஜாதிகளில் அல்லது மற்ற தேசங்களில் இருக்கும் ராஜாக்களை போன்று தங்களுக்கும் ராஜாவேண்டும் என இஸ்ரவேலர் விரும்பினர். (1சாமு–8:5) அதினால் அவர்கள் தொல்லைக்குள்ளானா ர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எதையுமே மாதிரியாக வைத்துக் கொள்ளாதீர்கள்; நீங்கள் தேவனிடம் நெருங்க அவர் மட்டுமே உங்களுக்கான மையமாயிருக்கட்டும். இதை புரிந்து கொள்ளுங்கள்... இந்த காரியங்களை அப்பால் எறிந்து விடுங்கள்; எல்லா பாரமான சுமையையும் தள்ளி வைத்து விடுங்கள். மீண்டுமாக சுவிசேஷத்தில் ஆரம்பியுங்கள். (எபி-12:1) ஜனங்கள் அங்கத்தினர்களாக ஏற்று கொள்ளப்படுவதை நீங்கள் உணருகிறீர்களா; அவர்கள் அதை செய்தனர். மெத்தோடிஸ்டு எழுப் புதல் வந்தபோது, அங்கே மிக பெரிய பிளவு ஏற்பட்டது. அவர்க ளுக்கு உண்மையான எழுப்புதல் இருந்தது. ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே பிரிந்து போனார்கள், பின்பு புதிய ஜனங்கள் உள்ளே வந் தார்கள், அவர்கள் குளிர்ந்து போக ஆரம்பித்து சராசரியான நிலைக்கு வந்தார்கள். மெத்தோடிஸ்டுகளிடம் தெய்வீக சுகமளித்தலிருந்தது; அவர்களிடம் தேவனுடைய வல்லமையிருந்தது. ஏன், ஜான் வெஸ்லியின் சொந்த சடங்காச்சாரங்கள், என்னுடைய வீட்டில் ஜான் வெஸ்லியின் புஸ்தகத்திலிருந்து ஒரு சில குறிப்புகள் இருக்கிறது. அவர் அமெரிக்காவில் இருந்தார். அவரும் அஸ்பரியும் அமெரிக்காவில் இருந்தார்கள். ஒருஸ்திரிக்கு ஜெபிப்பதற்காக அவர் குதிரையில் சென்று கொண்டிருந்தார்; குதிரை கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டது. அவர் கீழே இறங்கி, எண்ணெயை வைத்து கர்த்தருடைய நாமத்தில் அந்த குதிரையை அபிஷேகம் பண்ணினார். பின்பு அதின் மேலாக ஏறி அதை ஒட்டி சென்றார். இப்பொழுது நீங்கள் மெத்தோடிஸ்ட் சபையில் தெய்வீக சுகமளித்தலை பிரசங்கித் தால் அவர்கள் உங்களை வெளியே துரத்திவிடுவார்கள். 25. ஜான்ஸ்மித், பாப்டிஸ்ட் சபையை தொடங்கியவர், என் சொந்த சபை அது. அவர் இரவு நேரத்தில் மிகவும் அதிகமாக அழுது ஜெபித் ததால் அவருடைய கண்கள் வீங்கி அவரால் தன்னுடைய கண்களை கூட திறக்க முடியவில்லை. அவரின் மனைவி அவரை மேஜைக்கு நடத்தி சென்றால். ஆனால் இனிமேல் உங்களால் பாப்டிஸ்ட் சபை யாரின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரைகூட வரவழைக்க முடியாது. என்னதான் நடக்கிறது? ஏதோவொன்று தவறாயிருக்கி றது. ஏனெனில் அது ... மெத்தோடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் சபை க்கு எதிராக நான் எதுவும் கூறவில்லை; அவர்கள் என் சகோதரர்கள். ஆனால் சகோதரனே அதை பற்றின காரியம் என்ன வென்றால், தொடக்கத்திலே அப்போஸ்தலர்களை போன்றவர்கள் இருந்தனர், நீங்கள் அந்த உயர்ந்த காரியங்களை கீழே விட ஆரம்பித்து, கீழே விட்டு விடுகிறீர்கள், இதுமிக அதிகமான வேதபாடத்திலிருந்து வந்தது, இது அதிக கல்வியிலிருந்து வந்தது என்று சொல்லி தேவனை வாசலுக்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். அந்த காரியங் கள் எதுவும் தேவனுடைய வல்லமைக்கு ஈடாகாது. பெருமை, ஏதோ பெரிய காரியங்கள், பெரிய சபை கட்டிடங் களை கட்டுவது, பெரிய பெயரை கொண்டிருப்பது, இது போன்ற வைகளில் தான் நம்முடைய சபைகள் இன்று நடந்து கொண்டிரு க்கிறது. நாம் அதிகமான ஜனங்களை பெற்றிருக்க முயற்சிக்கிறோம், ஒவ்வொரு சபையும் தங்கள் ஸ்தாபனங்களுக்காக வம்பு சண்டையி ட்டு தங்களிடம் ஜனங்களை இழுத்துக் கொள்ளவே முயற்சிக்கின் றனர். அது எல்லாம் சரிதான். இது சிறிய தீப்பொறி போன்றது ஆனால் நன்மையானது என்பதை நான் அறிவேன். புரிகிறதா? அதுசரி. அது நல்லது. ஆனால் அசெம்பிலிஸ் தாங்கள் ஒரு பெரியவர்களாய் இருக்க விரும்புகிறார்கள் ... ஒன்னெஸ் (Oneness) தாங்கள் பெரியவர்களாய் இருக்க விரும்புகிறார்கள் – தாங்கள் தான் பெரியவர்களாகவே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். எல்லாருமே அதையே தான் விரும்புகின்றனர். நீங்கள் இப்படி இருக்கும் போது தேவனுக் கானதை எப்படி செய்ய முடியும். நாம் கனத்தை எதிர்பார்க்கி றோம்—ஒருவரிடத்திலிருந்து ஒருவர் கனத்தை எதிர்பார்க்கிறோம். சகோதரனே, நாம் வெறும் ஆறு அடி அழுக்கு அவ்வளவுதான். தேவன் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை எடுத்துக்கொள் வார். உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை தேடுங்கள். இருக்க ட்டும்... சபைகள் அதெல்லாம் சரிதான், எல்லா சபையும். யாருக்கும் விரோதமாக என்னிடம் எதுவும் இல்லை. அது எல்லாம் நல்லது தான். ஆனால் கிறிஸ்து அந்த சபைகளில் இருப்பதே நம்முடைய தேவையாயிருக்கிறது. கிறிஸ்து இருப்பதுதான் முக்கியமான காரி யம், நீங்கள் அந்த முக்கியமான காரியத்தையே விட்டு விடுகிறீர்கள். அதுசரி. 26. இப்பொழுது, காயீனை பாருங்கள்; அவன் உத்தமத்தோடு வந் தான். ஆனால் பாருங்கள், பின்னணியில் அவன் பிதா யாரென்றால் பிசாசு. அவன் யார்... அவன் தன் பிதாவினால் பாதிக்கப்பட்டவனாயி ருந்தான். காரணம் என்ன வெனில் பரலோகத்தில் ... பிசாசு அங்கே இருந்த போது, மிகாவேலின் ராஜ்ஜியத்தைவிட, மிகவும் அழகான, மிகவும் நேர்த்தியான, பார்ப்பதற்கு இனிமையான ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி இருந்தான். அவன் மகத்தான ராஜ்ஜியத்தை பெற முயற்சி தான். அதனால் தான் அவன் வெளியே உதைத்து தள்ளப்பட்டான்; அவனிடம் பெருமை, அழகு, தற்பெருமை இருந்தது. அவன் இங்கே வந்த போது, அவனுடைய குணாதிசயம் அவன் மகனுக்குள்ளும் இருந்தது. அந்த குணாதிசயம் இன்றும் மரிக்காமல் தான் இருக்கி றது. அதுசரி. ஓ, பெரிய சபை. "நான் நகரத்தில் இருப்பதிலேயே மிக வும் பெரிய சபையை சார்ந்தவன் என்று நீங்கள் கூறலாம்". அது ஒரு, ஒரு பொருட்டே அல்ல. (ஏசாயா-14:13..15,எசே-28:13..17,வெளி-12:7) அது என்ன; இன்றிரவு தேவனிடம் உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது ? அது தான் அடுத்த காரியம். அது தான் கேள்வியாயிருக் கிறது. 27. நாம் பெரிய சபைகளை கட்டுவதால் இயேசு ஒரு போதும் நம்மி டம் வரமாட்டார். இங்கே கவனியுங்கள், நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன்; அது அந்த பக்கத்தை சார்ந்தது. இயேசு நம்மிடம் ஒரு சபையை நியமிக்கவோ அல்லது ஏற்படுத்தவோ கூறவில்லை. நாம் சபையை கட்ட வேண்டுமென அவர் ஒரு வார்த்தை கூட கூறவி ல்லை; நாம் ஸ்தாபனங்களை கொண்டிருக்க வேண்டுமென அவர் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. நாம் வேத பாடசாலைகளை கொண்டிருக்க வேண்டுமென அவர் ஒரு வார்த்தை கூட கூறவி ல்லை. மருத்துவ மனை கட்டுங்கள் என்று அவர் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. பள்ளிக்கூடங்கள் அல்லது கல்வியை பற்றி அவர் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஆனால் அவர் சபையிடம் இதைத்தான் கூறினார், "உலகெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள், அப் பொழுது நான் மீண்டும் வருவேன்" என்றார். (மாற்கு-16:15) ஸ்தாபனங்களுக்கு விரோதமாகவோ, சபைக்கு விரோதமாகவோ, மருத்துவமனைக்கு விரோதமாகவோ எதுவுமில்லை. அது எல்லாம் சரிதான்; ஆனால் உலகிற்கு சுவிசேஷத்தை கொண்டு செல்வதற்கு பதிலாக அவற்றையே நாம் மிகைபடுத்தி வலியுறுத்திக் கொண்டிரு க்கிறோம். அதாவது இன்றிரவு உலகில் மூன்றில் இரண்டு பங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கேள்விப்படாத நேரத்தில் நாம் அந்த காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். அவரால் எப்படி வர முடியும் ? சுவிசேஷம் பிரசங்கிக்கபட்ட பின்தான் அவரால் வர முடியும். துண்டுப் பிரதிகளை கொடுப்பதனால் மட்டுமல்ல .. அது சரி தான், துண்டுப் பிரதிகளை கொடுப்பது சரிதான், ஆனால் "சுவிசே ஷத்தை பிரசங்கியுங்கள் என்பதின் அர்த்தம் எல்லா தேசங்களுக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையை செயல்படுத்தி நிரூபித்து காட்டுங் கள் என்பதே அதின் அர்த்தம். அதைத் தான் நான் சாட்சியென்று அழைப்பேன்" ஆமென், அதுதான் சரி. (மாற்கு-16:17,18) 28. கவனியுங்கள், மீண்டுமாக காயீன் அங்கு, அவன் தன்னால் எவ் வளவு முடியுமோ அவ்வளவு பக்திமானாயிருந்து, நடந்து சென்று ஒரு அழகிய பலிபீடத்தை கட்டி அவனுடைய பலியை செலுத்தி, அவனுடைய பிதாவை போலவே எல்லா ஆடம்பரங்களுடன் முழங்கால்படியிட்டான். அவன் ஒரு நாத்திகன் இல்லை; அவன் ஒரு அவிசுவாசி இல்லை. இல்லை ஐயா, அவன் ஒரு விசுவாசியாயிருந் தான். கனகட்சிதமாக அதுசரி. ஆகவே ஒருவன் விசுவாசியாயிருந் தும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட முடியும் என்பது தெரிகிறது. பிசாசும் விசுவாசித்து நடு நடுங்குகிறான். (யாக்கோபு-2:19) பிசாசுகள் இயேசுவை பார்த்த போது, பொதுவான இடங்களிலே இயேசுதான் தேவனுடைய குமாரன் என்று அவைகள் அறிக்கை செய்து, அவரி டம் இரக்கத்திற்காக கேட்டது. அது சரி. அங்கே காயீன் முழங்கால் படியிட்டு, தொழுது கொண்டான். அந்த பெரிய லில்லி புஷ்பங்களை அடுக்கி வைத்து, நான் கற்பனை செய்து பார்க்கிறேன், நிலத்திலிருந்து பழங்களை எடுத்து வந்து அங்கே வைத்து, மண்டியிட்டு, கூறினான், "இப்பொழுது, யேகோ வாவே, இந்த பலிபீடம் எவ்வளவு அழகாயிருக்கிறது என்று பாருங் கள்; அங்கே இருக்கும் அந்த பரிசுத்த உருளைகளுடைய பழைய பொதுவான பலிபீடத்தை பாருங்கள். அவர்கள் தொழுது கொள்ளும் அந்த சிறிய பழைய பொதுவான இடத்தை சற்றே பாருங்கள்; அந்த ஆபேலை, அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் அந்த நாற்ற மெடுத்த ஆட்டை பாருங்கள். ஆனால் இங்கே நான் உங்களுக்காக என்ன செய் திருக்கிறேன் பாருங்கள். நான் இந்த மகத்தான சபையை கட்டி யிருக்கிறேன்; நான் எல்லாவற்றையும் இதிலே வைத்திருக்கிறேன். நான் யாரென்று தெரிகிறதா? நான்... நான் எதோவொரு பெரிய காரியத்தை செய்து விட்டேன். அது – அது மனோதத்துவதை காண்பி க்கும். அது – அது ஜனங்களை உள்ளே கொண்டு வரும்." ஓ, என்னே, அதுதான் பிசாசின் செய்கையாய் இருக்கிறது. அதுசரி. அவன் கூறி னான், "இப்பொழுது, யேகோவாவே என்னை ஏற்றுக்கொள்ளும், நான் அதை விசுவாசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்." ஆனால் தேவன் அவனை நேரடியாக நிராகரித்தார். அதுசரி. 29. இங்கே சிறிய பழைய ஆபேல் வருகிறான், அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தியது பழம் இல்லை என்கிற ஆவிக்குரிய வெளிப்பாட்டினை பெற்றவனாய், அந்த ஆட்டை இழுத்துக் கொண்டு ஆபேல் வருகிறான்; அது இரத்தம் என்பதை அவன் அறிந்திருந்தான். (எபிரெயர்-11:4) செடி கொடிகளில் ஜீவன் இருப்பதில்லை; அது இரத்தத்தில் இருக்கிறது. இங்கே அவன் ஒரு கயிற்றை கட்டி அல்லது ஒரு திராசை கொடியை அந்த சிறிய ஆட் டின் மீது சுற்றி கட்டி அதை இழுத்து வந்து, அங்கே பலிபீடத்தின் மேல் அதை போட்டு, "கர்த்தாவே, அவ்வளவுதான்" என்றான். தேவன், "அதுதான் நீதிமானாக்கப்படுதல்" என்றார். ஆமென். அப்பொழுது பாருங்கள், அவன் சகோதரன் அவன் மேல் பொறா மைப் பட்டான். அந்த பொறாமையின் தொடர்ச்சி மேல்தட்டு ஜனங் களை ஒரு போதுமே விடுவதில்லை. இல்லை, ஐயா. இன்னமும் அது இருக்கிறது. ஆமென். இன்னமும் இருக்கிறது, அது போகவே போகாது; அது தன்னுடைய வேரையும் படுக்கையையும் நரகத்தில் ஏற்படுத்தும். கவனியுங்கள், அவன் அங்கே இருந்து மேலே வந்து, தன்னுடைய சகோதரனை கொலை செய்தான். 30. அங்கிருந்து அந்த இரண்டு ஆவிகளும் புறப்படுவதை கவனி யுங்கள். அவைகள் எப்படியாய் உலகத்தை ஆளுகை செய்தது பாரு ங்கள். இங்கே அவை ஆதியாகமத்தில் இருந்து வெளியே வந்தது. நீங்கள் எதை வேண்டுமானாலும் கவனித்து பாருங்கள்; உலக ஒழுங்கை கவனித்து பாருங்கள்; எல்லாவற்றையும் கவனித்து பாருங்கள். அது ஆதியாகமத்திலிருந்து வந்து, அது செயல் முறையில் வளர்ந்து, இப்பொழுது, அது இங்கிருந்து மேலே போய், தன்னு டைய வித்திலிருந்து மலர்ந்து, ஆதியாகமத்தில் என்ன இருந்ததோ அதையே உற்பத்தி செய்கிறது. இங்கே கள்ள திராட்சை செடியிருக்கிறது; இங்கே மெய்யான திராட்சை செடி இருக்கிறது. அவை இரண்டும் பக்கத்து பக்கத்தி லேயே வளர்கிறது. யூதாஸ்காரியோத் சபையின் பொக்கிஷக்காரன் என்பதை உணருகிறீர்களா? கர்த்தராகிய இயேசு எந்த கோத்திரத்தி லிருந்து வந்தாரோ அவனும் அதே கோத்திரத்திலிருந்து வந்தான். அவன் ஒரு பெரிய மனிதனாயிருந்தான், மற்றவர்களோடு சகோதர னாயிருந்தான், அவர்கள் அமரும் அந்த அதே நீளமான தேவாலய இருக்கையில் அமர்ந்தான், அவர்கள் பாடின அதே பாடல்களை பாடினான், அவர்கள் தொழுதுகொண்ட அதே தேவனை அவனும் தொழுது கொண்டான், அவர்கள் பிரசங்கித்த அதே பிரசங்கத்தை அவனும் பிரசங்கிதான் ஆனால் அவன் யூதாசாகவே இருந்தான்? அதே ஆவி சபையில் உலாவுகிறது என்பதை உங்களால் உணரமுடிகி றதா? ஆனால் யூதாஸ் தன்னுடைய உண்மையான நிறத்தை எங்கே காண்பித்தான்? பெந்தேகோஸ்தேவில் காண்பித்தான், சரியாக பெந் தேகோஸ்தேக்கு முன்னர் காண்பித்தான், அதாவது அவர்கள் உண்மையாகவே மறுபடியும் பிறப்பதற்கு முன்னர் அவன் தன் உண்மையான நிறத்தை காண்பித்தான். மறுபடியும் பிறத்தலின் அனுபவம் என்கிற ஒன்று இருப்பதை பல ஜனங்கள் விசுவாசிப்பதில்லை, இன்றிரவு ஜனங்கள் அதை விசுவாசிப்பதில்லை. அவர்கள் "அது எல்லாம் உங்கள் மனதை பொறுத்தது" என்கிறார்கள். இல்லை சகோதரனே, அது உன் இருதய த்திலிருக்கிறது. அது சரி. 31. கவனியுங்கள், இங்கே இந்த திராட்சை செடிகள் வளர்ந்து வருகி றது; இப்பொழுது அந்த இரண்டு ஆவிகளையும் பின்தொடரு வோம். உங்களுக்கு தெரிந்த முதல் காரியம், நாம் அவைகளை பார்போம்...முதலாவது பேழைக்குள் பார்போம்; அங்கே ஒரு புறா வும், ஒரு காகமும் இருந்தது. அவை இரண்டுமே பறவைகள்; ஒன்றி னால் எந்த இடம்வரை பறக்க முடிந்ததோ அந்த இடம் வரை தான் இன்னொன்றும் பறந்து சென்றிருந்தது, அவை இரண்டுமே ஒரே கூண்டில் இருந்தன -- அநேகமாய், அந்த இரண்டு பறவைகளும் ஒரே தளத்தில் இருந்தன, பேழையின் இரண்டாம் தட்டிலிருந்தன. ஒன்று எங்கே பறக்கமுடியுமோ அங்கேயேதான் மற்றொன்றும் பறக்க முடியும். அவைகளில் ஒன்று கிறிஸ்துவின் ஆவி, மற்றொன்று அந்தி கிறிஸ்துவின் ஆவி ... அவைகளை நீங்கள் இனங்கண்டுக்கொள்ளக் கூடிய ஒரே வழி, அவைகளின் ஆகாரத்தை வைத்தே அவைகளை இனங்கண்டுக்கொள்ள முடியும். அவர்கள் காகத்தை வெளியே விட்டபோது, காகத்திற்கு பழைய இறந்த பிணங்களை சாப்பிடுவது திருப்த்தியாயிருந்தது. ஒரு பிணத் திலிருந்து மற்றொரு பிணத்திற்கு மாறி மாறி பறந்து சென்று தன் நகங்களால் அவைகளை கிழித்து சாப்பிடுவது அதற்கு திருப்தியாயி ருந்தது. அவன் வந்து ... அங்கே வெளியே இருக்கும் உலகப்பிரகார மான காரியங்களில் அவன் திருப்த்தியடைந்திருந்தான். ஆனால் புறவானது வெளியே பறந்து சென்றபோது, தன் பாதத் தை வைத்து இளைப்பாற இடமில்லாமல், அது மீண்டும் வந்துவிட் டது. (ஆதி-8:9) சகோதரனே, உனக்கு ஒன்றை கூறுகிறேன், நீ எப்போ தாவது ஒரு முறை தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தி ருந்தால், இந்த உலகம் உனக்கு நாற்றமாயிருக்கும், உலகத்தின் காரிய ங்கள் போய்விட்டு இருக்கும். அது சரி. உன்னால் அதை கொண்டு உன் வயிற்றை நிரப்பிக்கொள்ள முடியாது. புறவினால் ஏன் அதை சாப்பிட முடியவில்லை? ஏனெனில் புறவானது பித்தப்பை இல்லாத ஒரு பறவையாகும்; அதினால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியாது. தேவனுடைய ஆவியினால் பிறந்த மனிதனோ அல்லது பெண் ணோ உலகபிரகாரமான காரியங்களை செய்ய மாட்டார்கள். அவர் கள் உலகத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். அவர்கள் வேறுப ட்ட ஜீவியதற்கென பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களால் அதை ஜீரணிக்க முடியாது ... அவர்களுடைய ஜீரணி க்கும் திறன் மாறிவிட்டது, அது மாற்றப்பட்டுவிட்டது; தேவனு டைய காரியங்களே அவர்களுக்கு பசியாயிருக்கிறது, அதாவது மேலான காரியங்கள், ஜெப கூட்டங்கள் மற்றும் அது போன்றவை களே அவர்களின் பசியாயிருக்கிறது. அவர்களுக்கு சறுக்கி விளையா டுவதற்கும், நடனம் ஆடுவதற்கும், பந்து மற்றும் மற்ற விளையாட் டுகளை விளையாடுவதற்கும் நேரமே இல்லை. அவர்கள் மரணத்தி லிருந்து நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள், ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லை -- அதுபோன்ற காரியங்களை இனிமேல் அவர்கள் வாஞ்சிப்பதில்லை. 32. ஆனால் நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன். ஒரு பிணத்தை நீங்கள் நிலத்தில் போட்டால், புறவானது அந்த பிணத்திற்கு அருகில் கூட செல்லாது; புறா இங்கே அமர்ந்து கோது மையை சாப்பிடும். ஆனால் காகமோ, அந்த பிணத்தினருகில் அமர்ந்து பிணத்தையும் சாப்பிடும், மீண்டும் வந்து கோதுமையை யும் சாப்பிடும். உண்மையாகவே அது சரி. எனவே நீங்கள் அந்த மனி தனை கவனிக்க வேண்டும். பாருங்கள், அவன் ஆரம்பத்திலேயே ஒரு மாய்மாலகாரனாயிருக்கிறான். அது சரி. அந்த வரிசையின் தொடர்ச்சி வந்து கொண்டிருப்பதை கவனித்து பாருங்கள். அவை இரண்டையும் நாம் தொடர்ந்து கடைசி வரை ஒப்பிட்டு கொண்டே செல்ல முடியும். அதே விதமாக ஏசா மற்றும் யாக்கோபிடம் வாருங்கள். அதை இஸ்ரவேலோடு ஒப்பிட்டு பார்போம். அது ஒரு அருமையான முன் மாதிரி. இப்பொழுது, எகிப்திலிருந்து வெளியே வந்து தன்னுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்க்கு சென்று கொண்டிரு க்கும் இஸ்ரவேலை பாருங்கள். இன்றைய சபைக்கு இஸ்ரவேல் ஒரு பரி பூரண முன்மாதிரியாயிருக்கிறது. அது எகிப்திலிருந்து தனக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் பாதையில், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்றது, இந்த தேசத்தை நான் அவர்களுக்கு கொடுப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். அந்த ஆசிர்வதிக்கப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அவர்கள் மோவாபி யரிடம் தொடர்பில் வந்தார்கள். மோவாப் அவர்களின் சகோதரன், இஸ்ரவேலுக்கு சகோதரன். மோவாபியரின் தேசம், அந்த கோத்திரம் ஆரம்பகாலத்தில் லோத்தின் மனைவியினிடத்திலிருந்து அல்லது லோத்தின் பிள்ளைகளிடத்திலிருந்து வந்தது. லோத்து தன் சொந்த குமாரத்திகளால் பிள்ளை பெற்றான், அவர்கள் தான் மோவாபி யர்கள். (ஆதியாகமம்-19:31-38) 33. இப்பொழுது, நீங்கள் அனைவரும் ஆயத்தமாயிருக்கிறீர்களா? கர்த்தருக்கு சித்தமானால், நான் ஒன்றை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். கவனியுங்கள், உங்களுக்கு தெரியும், இன்றைக்கு ஜனங்கள் "நல்லது, எங்கள் சபை அடிப்படை மூலாதாரத்தை கொண் டது. நாங்கள் அந்த மகத்தான சுவிசேஷ அடிப்படையை கொண்டிரு க்கிறோம்" என்கிறார்கள். அது சரிதான், ஆனால் நீங்கள் இன்னமு மாக தவறாயிருக்க முடியும். நீங்கள் மிகவும் அடிப்படை தவறாத உத்தமமான அடிப்படைவாதிகளாக இருந்தும், நீங்கள் நரகத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கக் கூடும். நீங்கள் அதை விசுவாசிக் கவில்லையா? ஒரு நிமிடம் இந்த வார்த்தையை கவனியுங்கள். அவர்கள் தங்கள் பாதையில் வந்துகொண்டிருந்தபோது, தங்கள் சகோதரர்களை சந்தித்து, இந்த வார்த்தையை அனுப்பினர், "உங்கள் தேசத்தின் வழியாய் நாங்கள் கடந்து செல்லட்டுமா?" அவன் "நிச்சயமாக முடியவே முடியாது. நாங்கள் அந்த ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள் இங்கே வருவதை அனுமதிக்கமாட் டோம்" என்றனர். அவர்கள் அப்படிதான் இருந்தனர். நல்லது, கவனி யுங்கள். மோவாப் முழுவதுமாக ஒழுங்கு செய்யப்பட்ட தேசமாயிரு ந்தது, அவர்கள் இளவரசர்களையும், இந்த மற்றவர்களையும், பாலா க்கையும், சிறந்த ராஜாக்களையும், கொண்டிருந்த ஒரு மகத்தான தேசமாயிருந்தனர். ஆனால் இஸ்ரவேலோ எந்த ஸ்தாபனத்தையும் சேராதிருந்தது; அவர்கள் இங்குமங்கும் சிதறிய சிறிய கூடாரங்களிலி ருந்த ஜனங்கள் ... ? ... தேவனுடைய ஆவியின் நடத்துதலின்படி யாத் திரை செய்த ஜனங்கள். ஆனால் மோவாபோ முழுவதுமாக ஒழுங்கு செய்யப்பட்ட, மிகவும் பெரிய, தேசங்களிலேயே மிகவும் பெரிய ஒரு தேசமாயிருந்தது. அவன் கூறினான், "அந்த ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள் இந்த வழியாக கடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம். அவர்கள் செய்யும் காரியங்களை பாருங்கள்" என்றான். (எண்ணாகமம்-20:17-20) நீங்கள் "சகோதரன் பிரான்ஹாமே பரிசுத்த உருளைகள் என்றா கூறுகிறீர்கள்?" என்று கேட்க்கலாம். ஆம், ஐயா, அவர்கள் பரிசுத்த உருளைகளாக இருந்தனர் என்று நான் விசுவாசிக்கிறேன். முற்றிலு மாக. அவர்கள் எகிப்திலிருந்து வெளியே வந்து சிவந்த சமுத்திர த்தை கடந்த போது, அவர்களிடம் எல்லைக்கப்பாற்பட்ட அற்புதங் கள் இருந்தது -- அவர்களுக்கு முன்பாக ... தேவன் பரலோகத்திலிரு ந்து பலத்த காற்றை அனுப்பி செங்கடலை இரண்டாக பிளந்தார். அவர்கள் உலர்ந்த தரை வழியாய் கடந்து சென்றனர். விருத்தசேதன மில்லாத எகிப்தியர்களும் அதே போன்று செய்ய முயற்சித்தபோது, தேவனுடைய ஆவியை பரியாசம் செய்ய முயற்சித்தபோது, அவர் கள் எல்லாரும் மூழ்கி போனார்கள். (யாத்திராகமம்-14:23-26) 34. மிரியாம் ஆவிக்குள்ளாகி, ஒரு தம்புருவை எடுத்து வாசித்துக் கொண்டே கடற்கரையில் சென்றாள்; இஸ்ரவேலின் குமாரத்திகள் அனைவரும் தம்புருவை வாசித்து நடனமாடினபடியே அவளை பின்தொடர்ந்தார்கள். மோசே தன் கரங்களை மேலே உயர்த்தி ஆவியில் பாடினான். அது ஒரு பரிசுத்த உருளைகளின் கூட்டம் இல்லையென்றால், பின்பு நான் என்னுடைய ஜீவியத்தில் பரிசுத்த உருளைகளின் கூட்டத்தை கண்டதேயில்லை. அது சரி. அவர்கள் நிச்சயமாக கடற்கரையிலே களிகூர்ந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் அடையாளங்களும் அற்புதங்களும் இருந்தது. (யாத்திராகமம்-15:19-21) அவர்களுக்கு தாகமெடுத்த போது, தேவன் கன்மலையின் தண் ணீரை அவர்களுக்கு கொடுத்தார். அவர்களுக்கு பசியெடுத்தபோது, தேவன் வானத்திலிருந்து அவர்களுக்கு மன்னாவை வருஷிக்க பண் ணினார். அவர்கள் இந்த மன்னாவை புசித்தபோது, அவர்கள் "இது தேனைப்போல் மதுரமாயிருக்கிறதே" என்றனர். (யாத்-16:13-18) உங்களுக்கு தெரியுமா, அந்த மன்னா பரிசுத்த ஆவிக்கு முன்னடை யாளமாயிருந்தது. அது சரி. ஒவ்வொரு விசுவாசியும் அந்த சிவந்த சமுத்திரத்தை கடந்து வந்த பிறகு, அந்த சிவந்த சமுத்திரம் இரத்தத்தை குறிக்கிறது, நான் நேற்றைய இரவில் கூறியவாறு, அவன் பரிசுத்த ஆவியினால் ஐக்கியத்திற்குள் வருகிறான். 35. கவனியுங்கள், அவர்கள் சிவந்த சமுத்திரத்தை கடந்தவுடனே, அவர்கள் தங்கள் யாத்திரையிலிருந்தார்கள், அந்த யாத்திரை முடியும் வரை தேவன் அவர்களுக்கு மன்னாவை வருஷிக்கப்பண்ணினார், அது பரிசுத்த ஆவிக்கு மாதிரியாய் இருக்கிறது. அவர்கள் யூதமார்க்க த்திலிருந்து வெளியே வந்து, பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியை பெற்றபோது, பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் மேல் பொழியப்பட்டது. (அப்போ-2:1-6) மேலும் அன்றிலிருந்து அது பொழிந்து கொண்டே இருக்கிறது, இந்த காலம் முடியும்வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும். அது சரி. நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன், மன்னாவின் மழை பொழிய ஆரம்பித்தவுடன், அவர் ஆரோனிடம் "நீ வெளியே போய் பல ஓமர் நிறைய எடுத்து, மகா பரிசுத்த ஸ்தலத் தில் வை" என்றார். இந்த சந்ததிக்கு பிறகு வரும் எல்லா சந்ததியும்... இதற்கு பின்னாக வரும் ஒவ்வொரு சந்ததியிலும், ஒவ்வொரு முறையும் ஒருவன் ஆசாரியனாகும்போது, அவன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, ஆதியில் விழுந்த அந்த உண்மையான மன்னாவை ஒரு வாயளவு எடுத்துக்கொள்ளலாம். (யாத்-16:33,34) பெந்தேகோஸ்தே நாளில் அது ஒரு எவ்வளவு அழகான காட்சியாய் இருந்தது. நம்முடைய ஆவிக்குரிய மன்னா (அது இயற்கையான மன்னாவாயிருந்தது), ஆவிக்குரிய மன்னா சபையை முழுவதுமாக பார்த்துக்கொண்டது -- அது ஆவிக்குரிய எல்லா சத்துக்களையும் விட் டுவிடுவதெற்கென -- அதை கொண்டு ஜீவிக்கும்படி கொடுத்தது. 36. ஏன், பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கீழே இறங்கி வந்தபோது; அவர்களில் புருஷர்களும் ஸ்திரிகளும் தள் ளாடி குடித்து வெறிகொண்டவர்கள் போல் வெளியே வந்தனர். ஆம். பேதுரு கூறினான் "இது அதுதான், இதைத்தான் தீர்க்கதரிசி யோவேல் உரைத்தார்; இது அது தான்" என்றான். (அப்போ-2:14-21) சகோதரனே, இது அது இல்லையென்றால், அது வரும்வரை இதை நான் வைத்துக் கொள்கிறேன். எனக்கு -- எனக்கு என்னவாயினும் இது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் அதற்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் வெளியே வந்தபோது, அவர்கள் மீது பரிசுத்த ஆவியான வரின் வல்லமை அசைவாடியது. மேலும் பேதுரு ... அவர்கள் அனைவரும், "புருஷர்களே சகோதரர்களே நீங்கள் பெற்றிருக்கும் இதையே நாங்களும் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? " என்று கேட்டனர். பேதுரு அவர்களை நோக்கி: "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொரு வரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவி யின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவ ழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். அதுப்போன்று இருக்கும் ஏதோ ஒன்றையோ, அதுபோன்று நடித்து க்காட்டும் ஏதோ ஒன்றையோ நாம் பெற்றுக்கொள்ளாமல், ஆனால் ஒரு ... ஒரு வாயளவு அல்ல, ஆனால் இருதயம் முழுவதுமாக அந்த மூல பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்கிறோம். பெந்தேகோஸ்தே நாளில் விழுந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நான த்தை அதே அடையாளங்களுடன், அதே அற்புதங்களுடன், அதே கிரியைகளுடன் பெற்றுக் கொள்கிறோம். (அப்போ-2:38) 37. புருஷர்களும் ஸ்திரீகளும் தங்கள் ஜீவியங்களை ஒப்புக்கொடுத் தபோது, அது கன்மலையின் தேனை போன்று மதுரமாயிருக்கிறது. தாவீது கன்மலையின் தேனை குறித்து மிக அதிகமாக பேசியிருக்கி றான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் ஒரு மேய்ப்பனாயிருந் தான். அவன் எப்பொழுதும் ஒரு தொங்கு பையை வைத்திருப்பான்; மேய்ப்பர்கள் அப்படிதான் வைத்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களுடைய ஆடுகள் நோய்வாய் பட்டு அலையும்போது, நல்லது, மேய்ப்பன் அதனிடம் சென்று அதற்கு கொஞ்சம் தேனை தன்னுடைய தொங்கு பையிலிருந்து எடுத்து பாறையின் மீது தடவி விடுவான். ஆடு வந்து அந்த பாறையை நக்கும். ஆடுகள் தேனை நக்கும் போது, ஏன், அது சுண்ணாம்புக்கல்லையும் சேர்த்து நக்கி விடும். அந்த சுண்ணம் புக்கல் நோய்வாய்பட்ட ஆட்டை குணமாக் கிவிடும். ஓ, என்னே ஒரு காட்சி. கவனியுங்கள், சகோதரரே, இன்றிரவு என்னிடம் தொங்கு பை முழுவதுமாக தேன் இருக்கிறது. அந்த தேனை நான் சரியான கல்லின் மேல் தடவ போகிறேன். கிறிஸ்து இயேசுவின் மீது, எந்த சபையின் மீதும் அல்ல, அது கிறிஸ்துவுக்கு உடைமையாய் இருப் பதால் கிறிஸ்துவின் மீதே தடவ போகிறேன்; நோய்வாய் பட்ட ஆடுகளாகிய நீங்கள் சீக்கிரமாக நக்கிக்கொள்ளுங்கள்; உங்களுக்கு தெரிந்த முதல் காரியம், உங்களுக்கு சுண்ணாம்பு கல்லில் கொஞ்சம் கிடைக்கும், அது உங்கள் சுகவீனத்தை குணமாக்கும். அப்போது நீங்கள் பாவ ஜீவியத்திலிருக்கும் புருஷர்களையும் ஸ்திரீகளையும் வெளியே கொண்டு வரும் பரிசுத்த ஆவியின் வல்லமையை அல்லது நோய்வாய்பட்ட ஜீவியத்திலிருந்து ஆரோக்கியமான ஜீவிய த்திற்கு மாற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையை கண்டறிவீர்கள். கட்டிலில் இருப்பவர்களே, நாற்காலிகளில் இருப்பவர்களே, பார் வையில்லாமால் இருப்பவர்களே, காது கேளாதோரே மற்றும் ஊமையரே நீங்கள் அதை நக்கி கொள்ளுங்கள், பின்பு ஒரு மனித னின் ஜீவியத்தை மாற்றி அவனை புது சிருஷ்டியாக்கும் வல்லமை பரிசுத்த ஆவியிலிருக்கிறதா என்பதை கண்டறியுங்கள். அது நிச்சய மாக செய்யும்; அது உங்களை மரணத்திலிருந்து நீக்கி ஜீவனுக்குட் படுத்தும். 38. இஸ்ரவேலரின் யாத்திரையை என்னால் காண முடிகிறது; அவர்கள் அங்கே இருந்தனர்; அது உண்மை. நீங்கள் எப்போதாவது அவர்கள் கூறுவதை கேட்டிருக்கிறீர்களா. ஓ, சபையை பற்றி, அவர் கள் "ஓ, அங்கே இருக்கும் இஸ்ரவேலரை பாருங்கள்" என்றனர். பாலாக் "ஏன், நீ ஆளை அனுப்பி பீலேயாமை என்னிடத்தில் அழைத்து வா" என்றான். மேலும் "பீலேயாம் இங்கே வந்தவுடன்..." என்றான். அவர்களுக்கு ஒரு பழைய அடிப்படைவாதியான, பாதி பின்வாங்கி போன பிரசங்கியார் இருந்தார். எனவே அவர்கள் "அவனை இங்கே அழைத்து வா, அவன் இந்த ஜனங்களை எனக்காக சபிப்பான்" என்றான். ஆகவே, அவர்கள் சென்று இந்த பழைய தீர்க்கதரிசியை அழை த்து வந்தார்கள். அவன் அங்கே வந்து, அவன் இப்படியாக நினைத் தான், "இப்பொழுது, இந்த காரியத்தை நான் பார்க்கட்டும். இப்பொ ழுது, அவர்கள் எல்லாவற்றையும் செய்தனர் என்பதை நான் அறி வேன். அவர்கள் மற்றவர்களுடைய மனைவிகளுடன் வாழ்ந்தனர் என்பதை நான் அறிவேன். அவர்கள் -- அவர்கள் தவறு என்னும் கால அட்டவணையிலிருக்கும் எல்லாவற்றையும் செய்தார்கள். இப்பொ ழுது, பரிசுத்த தேவன் அந்த ஜனங்களை சபிப்பார்" என்று நினைத் தான். எனவே, இந்த மகத்தான தேசத்திற்காக அந்த ஜனங்களை சபிக்கும் எண்ணத்துடன் அவன் அங்கே சென்றான். ஏனெனில் அந்த தேசத்தில் அவனுக்கு சிறப்பான சபையிருந்தது, அதிலிருந்து அவனுக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. ஏன், அவன் லஞ்சம் வாங் கினான். நிச்சயமாக, அவன், "நான் அங்கே சென்று அதை செய் வேன்" என்றான். அவன் போய்க்கொண்டிருந்தபோது, தேவன் ஒரு பழைய கழுதையை அவனிடம் அந்நிய பாஷையில் பேசும்படி செய்து, நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய்விடு என்று கூற செய்தார். அதை அறிந்துகொள்ளும் அளவுக்கு போதுமான புத்திகூர்மை அவனுக்கு இல்லை. அது சரி. ஆமென். (எண்ணா - 23:7-10) மேலும் அங்கே, மேல் … அது அந்நிய பாஷையில் பேசவில்லை என்கிறீர்களா; அது மனித குரலில் பேசியது. கழுதைகள் மனித குரலில் பேசாது; ஆனால் அந்த கழுதை மனித குரலில் பேசியது. நிச்சயமாகவே பேசியது. அது வருவதை நான் உணர்ந்தேன்; யாரோ ஒருவர் கழுதை அந்நிய பாஷையில் பேசவில்லை என்றார். ஆனால் அது பேசியது; நிச்சயமாக அது பேசியது. நீங்கள் எப்பொழுதாவது… கழுதை அவனிடம் தன்சொந்த பாஷையில் பேசவில்லை; பேசியிரு ந்தால் அவனுக்கு புரிந்திருக்காது. பாருங்கள்? ஆனால் அவன் – அவன் இதை புரிந்துகொண்டான். . (எண்ணா-22:28-31) 39. கவனியுங்கள், அங்கேதான் அவர்கள் இருந்தார்கள். அவன் அங்கே சென்றபோது, அப்பால் போய் இஸ்ரவேலை பார்த்தான். அது எவ்வளவு மாய்மாலமாய் இருந்தது பாருங்கள். ராஜா அவனை அழைத்து சென்று, நீ இந்த வழியாக சென்று பார்க்கலாம் என்று சொல்லி இஸ்ரவேலின் கடைசி பகுதியை, இஸ்ரவேலின் மிக மோசமான பகுதியை காண்பித்தான். இப்பொழுது, கவனியுங்கள். அது இந்த திராட்சை செடி. இப்பொது, இங்கிருக்கும் இந்த திரா ட்சை செடி, இந்த திராட்சை செடியை சபிக்க முயற்சி செய்கிறது. இப்பொழுது, கவனியுங்கள். அவன் அவனிடம் நான் கடையாந்திர பகுதியை காண்பிக்கிறேன் என்றான். பிசாசும் அந்த விதமாகத்தான் தேவனுடைய ஜனங்களுக்கு செய்கிறான். அவர்கள் வேறெதுவும் சொல்லாமல், “யாரேனும் சுகமானவர்களை எனக்கு யார் காண்பித் தாலும் அவர்களுக்கு நான் ஆயிரம் டாலர் கொடுப்பேன். என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்” என்கிறார்கள். ஒருமுறை அவர்களில் ஒருவனுக்கு நான் சவால்விட்டேன். அவன் “நான் ஒரு சிறு பெண்ணின் கையில் வெட்டுகிறேன். நீ அங்கே நின்று அதை சுகமாக்கு, அப்பொழுது நீ ஒரு சுகமளிப்பவன் என்பதை நான் விசுவாசிபேன்” என்றான். நான், “எனக்கு தெரிந்ததிலேயே, எல்லரைவிடவும் உனக்குத் தான் சுகமளித்தல் அதிகமாய் தேவையாயிருகிறது. அது உன் தலைக் கான சுகமளித்தல்” என்றேன். “உன்னிடம் ஏதோ தவறாயிருக்கிறது” என்றேன். அது சரி. 40. இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் கடையாந்திர பகுதிகளை காண்பித்தனர். “நல்லது, ஜெபம் செய்து சுகமாகாத நபரை எனக்கு தெரியும். நிச்சயமாக, அல்லது அதிகமாக பிரசங்கத்தை கேட்டும் இரட்சிக்கபடாதவர்களை எனக்கு தெரியும்” என்கிறார்கள். அது சரிதான். பாருங்கள், ஆனால் அவர்கள் கடையாந்திர பகுதிகளை, பின்னான பகுதிகளை, மோசமான பகுதிகளை காண்பித்தனர். அந்த விதமாகத்தான் பிசாசு செய்கிறான். அது எப்படி நடக்கிறது என்று கவனியுங்கள். அவனை அழைத்து சென்று அதின் பின்பக்கத்தை காண்பித்தான். அதை கவனியுங்கள். எல்லாவற்றையும் ஓன்றாக பெற்றுவிட்டோம் என்று அவன் சொன்னபோது ... இப்பொழுது, இதோ அந்த காட்சி. சகோதரர்களே இதை கவனியுங்கள்; இதை கவனியுங்கள். இங்கிருக்கும் இந்த திராட்சை செடியையும் மற்றும் இந்த திராட்சை செடியையும் கவனியுங்கள். இதில் ஆபேல் வளர்ந்து வருகிறான், இதில் காயீன் வளர்ந்து வருகிறான். காயீன் தேவபக்தியு ள்ளவனாயிருந்தான்; இதுவும் தேவபக்தியுள்ளதாயிருந்தது. காயீன் அடிபடைவாதி யாயிருந்தான்; அவர்கள் அடிபடைவாதிகளாயிருந்த னர். ஆபேல் வெளிப்பாட்டினாலும், அற்புத அடையாளங்களினா லும் சரியான வழியை கொண்டிருந்தான். தேவன் தன்னுடைய சபை யையும் தன்னுடைய ஜனங்களையும் அற்புத அடையாளங்களி னால் எப்பொழுதுமே உறுதிபடுத்தினார், எப்பொழுதுமே உறுதிபடு த்தி கொண்டிருக்கிறார். வரலாற்றில் நடந்த எழுப்புதல் கூட்டங் களில் ஏதேனும் ஒன்றிலாவது அற்புத அடையாளங்கள் பின்தொட ராத எழுப்புதல் கூட்டம் இருந்தால் எனக்கு காண்பியுங்கள். இன்றை க்கான காரியம்தான் என்ன சகோதரர்களே, அது என்னவெனில்; நாம் அதை கீழே விட்டுவிடுகிறோம். நாம் அதை அறிவு சார்ந்த வேதபா டமாக இறக்கி கொண்டோம். தேவன் ஜன கூட்டத்தின் மத்தியில் அசைவாடி நமக்காக ஏதோவொன்றை செய்யும்வரை ஜெபிக்க வேண்டியவர்களாகிய நாம், அதை அறிவு சார்ந்த விசுவாசத்திற்கு கீழே இறக்கி கொண்டோம். 41. நான் இந்தியாவிற்கு சென்றிருந்தபோது, இந்தியர்கள் என்னை அங்கே சந்தித்து என்னிடம், “இப்பொழுது, பாருங்கள், சகோதரன் பிரான்ஹாமே, அது வேதபாடமாக இருக்கும்வரை, அந்த புத்தக த்தை புரிந்துகொள்ள உமக்கு யாரும் அமெரிக்காவில் இல்லை” என் றனர். அது சரிதான். ஏனெனில் அது கிழகத்திய புத்தகம்; அது – அது மேற்கத்திய புத்தகம் அல்ல. அது முற்றிலுமாக வேறுபக்கம் சார்ந் தது. “எங்களுக்கு வேதாகமம் தெரியும்; நீங்கள் ஒரு நாடாவதர்க்கு முன்னரே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாகவே எங்களுக்கு வேதாகமம் தெரியும்” என்றனர். அதுவும் மிக சரியான உண்மை தான். புனித தோமா அங்கே சென்றிருந்தார். தோமா எந்த சபையில் பிரசங்கித்தாரோ அந்த சபையில் நானிருந்தேன். அது சரி. “உங்களில் இருக்கும் போதகர்களுக்கு மொத்தமாக வேதாகமம் தெரிந்ததை விட எங்களுக்கு அதிகமாக தெரியும். ஆனால் நாங்கள் எதை அறிந்து கொள்ள விரும்புகிறோமென்றால், எதற்காக காத்திருக்கிறோமேன் றால்: வேதாகமத்தை பிரத்தியட்சமாக்கி காண்பிக்கும் அளவுக்கு போது மான விசுவாசம் கொண்ட ஒரு மனிதனை எங்களால் கண்டு பிடிக்க முடியுமா? அதைதான் நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகி றோம். வேதாகமம் திரும்ப காட்சியில் வந்து உயிர்வாழ்வதை காண நாங்கள் வாஞ்சிக்கிறோம். உங்களால் முடிந்தால், உங்களிடம் அந்நி யோந்நிய ஐக்கியத்திற்கான வலது கை அடையாளம் இருக்கிறதா” என்றனர். நான் “இயேசு கிறிஸ்து மரித்தோரை எழுப்பினார்; அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதாவர்” என்றேன். ஆமென். அது சரி. 42. இப்பொழுது, அங்கே மோவாப் இருக்கிறான். இப்பொழுது பாருங்கள், மோவாப் செய்த முதல் காரியம் ... கவனியுங்கள், அவன் சென்று தன்னுடைய எல்லா மதிப்பிற்குரிய குழு தலைவர்களையும், எல்லா ஆலோசக புருஷர்களையும், அவர்களில் அனைவரையும், மற்றும் பிஷப்புகளையும், அருட்திருவாளர்களையும், கனதிற்குரிய அருட்திருவாளர்களையும், Ph.D- களையும்., B.B.D-களையும்.,மற்றும் நீங்கள் எவ்வாறு அழைக்க விரும்புகிறீர்களோ எல்லாரையும் அவன் அழைத்தான்; அவன் எல்லாரையும் அங்கே அழைத்து வந்தான், வந்து தேவனுக்கு தங்களுடைய மதிப்பிற்குரிய நபர்களை காண்பி க்க எண்ணினான். அந்த அதே பழைய சாத்தானின் ஆவியை பாருங் கள். பாருங்கள்? நல்லது இப்பொழுது, அவர்கள் அடிப்படைவாதிகளாயிருந்தனர்; அவர்கள் கூறினார்கள், “இப்பொழுது, நாம் பார்க்கலாம். ஏழு பலிபீடங்களை அவர்கள் மலையின் மேல் கட்டினார்கள், ஏழு பலி பீடங்கள். அதுதான் தேவனுக்கு சரியாய் தேவையாயிருந்தது. அவர்கள் ஏழு காளைகளை கொன்றனர், தேவனுக்கு தேவையான பழுதில்லா பலி அது. கவனியுங்கள், தேவனுடைய குமாரனின் வருகையை தெரியப்படுத்தும் ஏழு ஆட்டுகடாக்களை கொன்றனர், அடிப்படைவாதிகள். (எண்ணாகமம்-23:1-4) 43. இங்கே இந்த பள்ளத்தாக்கில் இவர்களிடமும் ஏழு பலிபீடங்கள், ஏழு காளைகள் மற்றும் ஏழு ஆட்டு கடாக்கள் இருந்தது. இந்த குழு வும் அந்த குழுவை போன்றே அடிப்படைவாதிகள்தான். தேவனு க்கு அடிப்படை உபதேசம் மட்டுமே போதுமானதாக இருந்திருந் தால், அவர் ஏன் இவர்களின் பலியை ஏற்றுக்கொண்டு அவர்களின் பலியை நிராகரித்தார்? அவர்களின் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரை க்க சென்ற போது, அவர்களின் எல்லா மதிற்பிற்குரிய நபர்களும் அங்கே நின்று, தங்களுடைய கரங்களை உயர்த்தி தேவனை மகிமை படுத்தினர். தேவனுக்கு அடிப்படையான உபதேசம் மட்டுமே போதுமானதாக இருந்திருந்தால், அவர் அந்த குழுவுக்கும் கடமைப் பட்டவராயிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் இந்த சபை எப்படி அடிப்படை உபதேசத்தை கொண்டிருந்ததோ அப்ப டியே அவர்களிடமும் ஏழு காளைகள், ஏழு பலிபீடங்கள், கர்த்தரின் வருகையை தெரிவிக்கும் ஏழு ஆட்டுகடாக்களும் இருந்தது. பாருங்கள்? ஆனால் வித்தியாசம் என்ன? வித்தியாசம் என்ன? அவர்களிடம் வெறும் எழுத்துகள் மட்டும்தான் இருந்தது, அவர்களிடம் வார்த்தை மட்டும்தான் இருந்தது. ஆனால் இந்த ஜனங்களை அற்புதங்களும் அடையாளங்களும் பின்தொடர்ந்தது; இவர்கள் குடிப்பதற்கென அடிக்கப்பட்ட கன்மலை இருந்தது. இவர்களின் சுகமளிதளுக்காக வெண்கல சர்ப்பம் இருந்தது. இவர்களுக்கு முன்பாக அற்புதங்களும் அடையாளங்களும் சென்றது, அடையாளங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தது. இவர்கள் மேல் அக்கினி ஸ்தம்பம் தொங்கிக்கொண்டே இருந்தது. இவர்கள் எல்லாவற்றையும் தவறாக செய்தனர் என்று என க்கு தெரியும். ஆனால் அவையெல்லாம்... இவர்களுக்கு முன்பாக இருந்த அடிக்கப்பட்ட கன்மலையை காண பாலாக் தவறிவிட்டான்; பரிகாரம் செய்யப்பட்டிருந்தது. தேவன் அற்புதங்களாலும் அடையா ளங்களாலும் இவர்களை உறுதிபடுத்திக் கொண்டே இருந்தார். அவர் “இவர்கள் என் ஜனங்கள்” என்று கூறிக்கொண்டே இருந்தார். (யாத்திராகமம்-17:6, எண்ணாகமம்-21:9, யாத்திராகமம்-13:22) 44. இப்பொழுது, வேதாகமத்தை போதிப்பது, தேவனுக்கு அடிப்ப டையான காரியங்களே போதுமென்றால், அதை செய்யும் எவருக்கும் அவர் கடமை பட்டிருகிறார்; ஆனால் சகோதரனே நீ தெரிந்துகொள்ள படுதலினால் அழைக்கப்பட்டாய், தேவன் தன்னுடைய சபையை அறிவார். தன்னுடைய சபையை அவர் அற்புதங்களாலும் அடையாள ங்களாலும் உறுதிபடுத்துவார். அது சென்று கொண்டே இருப்பதை கவனியுங்கள். இதோ இங்கே இயேசு வருகிறார்; இங்கே தன்னால் முடிந்த அளவிற்கு அடிப்படைவாதியாய் இருக்கும் பரிசேயனும் வருகிறான். அதே திராட்சை செடி ஆதியாகமத்தின் வழியாக, காயீன் வழியாக, இஸ்ரவேலின் பிள்ளைகள் வழியாக வருகிறது. எல்லாமே ஆதியாகமத்தில் தான் ஆரம்பித்தது, ஆதியாகமத்தில் இருக்கும் எல்லாமுமே புதிய ஏற்பாட்டில் இருப்பவைகளை குறிக்கிறது. தங்களால் முடிந்த அளவிற்கு உபதேசத்தின் மீது அடிப்படைவாதி களாயிருக்கும் பரிசேயர்கள் இங்கே இருகிறார்கள். அவர்கள் யேகோ வாவை விசுவாசித்து, தங்களுடைய பலிகளை செலுத்தினார்கள். இங்கே இயேசு வருகிறார், முற்றிலுமாக ஒரு விசுவாசி மற்றும் அடிப்படைவாதியும்கூட, ஆனால் தேவன் அவரை அற்புதங்களினா லும் அடையாளங்களினாலும் உறுதிப்படுதினார். அது சரி. இயேசு முன்னேறி சென்று பிரசங்கித்ததையும், வியாதியஸ்தர்களை சுகப்ப டுத்தியதையும், தரிசனங்கள் பார்த்ததையும் மற்றும் தீர்க்கதரிசனம் உரைத்ததையும் தேவன் நிரூபித்தார். அதாவது அதுதான் அவரின் சொந்த சபை என்று நிரூபித்தார். ஆனால் இவர்களோ சபையில் உணர்வற்று கடினமான அடிப்படைவாதிகளாக சபையில் அமர்ந்தி ருந்தனர். இதோ உங்களுடைய இரண்டு திராட்சை செடிகள். அவை கள் வளர்ந்துவருவதை கவனியுங்கள். 45. பரிசுத்த பவுலை பாருங்கள், கடைசி நாளை குறித்ததான தரிசனம் அவனுக்கு வந்தபோது, அவன் “கடைசிநாட்களில் கொடிய காலங் கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில் மனுஷர்கள் துணிகர முள்ளவர்களாயும், இருமாப்புள்ளவர்களாயும், தேவபிரியராயிரா மால் சுக போகபிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கி றவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரை பகை க்கிறவர்களாயும் (உங்களை பரிசுத்த உருளைகள் மற்றும் அவர்களு க்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியெல்லாம் அழைப்பார்கள்), தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர் களாயும் இருப்பார்கள், இப்படி பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று கூறினான். (2 தீமோ-3:1-5) அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள், உபதேசத்தில் அடிப்படையை கொண்டிருகிறீர்கள் ஆனால் வல்லமையிலோ வல்லமை இல் லாமல் இருக்கிறீர்கள். அவர்கள் தெய்வீக சுகமளித்தல் என்கிற ஒன்று இருப்பதையே மறுதளிகின்றனர்; அவர்கள் வரத்தின் வல்ல மையை மறுதளிக்கின்றனர். “தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருப்பார்கள், இப்படி பட்ட வர்களை விட்டு நீ விலகு” ஆமென். நீங்கள் அந்த நாளில்தான் இருக்கிறீர்கள். 46. சில நாட்களுக்கு முன்பு இங்கே கனடாவில், நான் சவாரி செய்து கொண்டிருந்தேன். அப்போதுதான் நான் ஆப்ரிக்காவிலிருந்து சகோ தரன் தோம் மற்றும் மற்றவர்களோடு வந்திருந்தேன். நான் அங்கிரு ந்து வந்தபோது, மிகவும் களைப்பாக இருந்ததால், நானும் சகோத ரன் பாக்ஸ்ட்டரும் வட கனடாவிற்குள் வேட்டைக்கு சென்றிருந் தோம். அந்நாளில் நான் ஒரு பழைய சாம்பல் நிற கரடியை துரத்திக் கொண்டிருந்தேன். அந்த கரடியை பிடிக்க எனக்கு வழி கிடைத்தது; நான் அதை சற்றே பார்த்துவிட்டு அதை போகும்படி விட்டுவிட் டேன். எனக்கு எப்படி வேட்டையாட பிடிக்குமென்று உங்களுக்கு தெரியுமா. நான் ... நல்லது, நான் அதை பார்த்துக்கொண்டே இந்த மலையின் கீழாக சவாரி செய்து இறங்கிகொண்டிருந்தேன். அது மிகவும் தூரத்தில் இருந்தது, அங்கே நீங்கள் இருநூற்று ஐம்பது மைல் தூரத்தில், அங்கே இருபத்தொரு குதிரைகள் மட்டுமே இருந் தது மற்றும் வெளியே செல்லும் வழி. அந்த இடம் சரியாக சாலையி லிருந்து ஏழுநூறு மைல் தூரத்திலிருந்தது. நாங்கள் எங்களிலிருந்து விடுப்படும்படியாக அப்பேர்ப்பட்ட வனாந்திரத்திற்குள் மிகவும் உள்ளே இருந்தோம். அந்த சாம்பல் நிற கரடியை நான் கவனித்தவாறே அதை மதிய நேரம் முழுவதும் பின்தொடர்ந்தேன். அங்கே சிறிது மழை ஆரம் பித்த போது, மழை பெய்ய ஆரம்பித்தபோது, நான் கொஞ்சம் தொலைந்து விட்டேன். நான் காடுகளில் வளர்கப்பட்டதால், “ஓ, இங்கிருந்து எப்படி வெளியே செல்வதென்று எனக்கு தெரியும்” என்று நினைத்தேன். எனவே நான் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தேன், ஏனெனில் அங்கே பின்தொடர்வதற்கு எந்த வழியும் இல்லை வேறெதுவுமே இல்லை. எனவே நான் பொதுவாக செல்ல வேண்டியிருந்தது. இருட்டாகிவிட்டது. 47. நல்லது, “நல்லது, அதிகமாக மழை வராததால் நல்ல கர்த்தருக்கு நன்றி, நான் அப்படியே இங்கே எங்காவது படுத்து இந்த இரவில் தூங்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆகவே நான் ஒரு சிறு துண் டின் மீது படுத்தேன். சிறிது நேரத்தில் நிலா வந்து பிரகாசிக்க ஆரம்பி த்தது. “அருமை. தொடர்ந்து சவாரி செய்து இந்த மலைகளில் எதா வது ஒன்றின் உச்சிக்கு சென்று நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடிப்பேன்” என்று நினைத்தேன். நான் தொடர்ந்து மேல்நோக்கி சவாரி செய்தபோது நான் ஒரு காட்சியை பார்த்தேன்; அது என்னை எப்பொழுதுமே தொந்தரவு செய்தது. அது ஒரு வேடிக்கையான அனுபவம். நான் சவாரி செய்து கொண்டிருந்தபோது நான் எரிந்து போன மரங்களிருக்கும் இடத்தி ற்கு வந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் காட்டு தீயினால் எரிந்து போன பல மரங்கள் அங்கே இருந்தது. எப்படியாய் சூரியனின் உஷ் ணம் அதிகமாகி அவைகளை எரித்து அவைகளின் மரப்பட்டைக ளையும் மற்றவைகளையும் அகற்றிவிட்டது. அந்த உயரமான ஊச லாடும் எல்லா பைன் மரங்களும் எறிந்துவிட்டிருந்தது. அவைகள் வெறு மனே ஒன்றுமில்லாமல் வெண்மையாக்கபட்ட ஒரு கூட்ட வெள்ளை மரங்களாய் நின்றுகொண்டிருந்தன. மேலும் அந்த நிலா அவைகளின் மீது பிரகாசித்துகொண்டிருந்தது. ம்ம்ம்ம். ஓ, அது பார்பதற்கு ஒரு பெரிய வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள் போலிருந்தது. நல்லது, ஏதோவொன்று அல்லது பரிசுத்த ஆவி என்னிடம் “ஒருநிமிடம் நில்” என்று கூறியது. நான் நின்றேன். என்னுடைய வயதான குதிரைகளைப் பாகிவிட்டதால் அதை நான் அங்கிருக்கும் ஒரு கிளையில் கட்டினேன். நான் அங்கிருந்த ஒரு மரத்துண்டின் மீது ஏறி சுற்றும்முற்றும் பார்த்தேன். நான், “நல்லது, தேவனே, நான் ஏன் இங்கிருக்கிறேன் என்று எனக்கு தெரியவி ல்லை. ஆனால் ஏதோவொரு காரியத்திற்காக நீர் என்னை இங்கே கொண்டுவந்தீர்” என்றேன். 48. நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். காற்று அங்கே பலமாக அந்த பழைய மரங்களின் மீது அடிப்பதை நான் கேட்டேன். உங்க ளுக்கு தெரியுமா, அந்த காற்று அடித்தபோது அந்த மரங்கள் ம்ம்ம் ம்ம்ம்ம் என்று முனங்கின. “ஒ, என்னே, என்னே ஒரு இடம், இந்த பூமிக்குள் இருக்கும் இந்த பழைய வெண்மையாக்கப்பட்ட இடம், எரிந்து செத்துப்போன இடம் என்று நினைத்தேன் ... “என்னே ஒரு இடம், பார்ப்பதற்க்கு கல்லறை போன்றிருகிறதே” என்றேன். நான் எடுத்தேன் – அந்த ம்ம்ம்ம்ம், ம்ம்மம்ம் என்ற சத்தத்தை கவனித் தேன். “நல்லது, கர்த்தாவே, இங்கே என்னை எதற்காக வைத்திருக் கிறீர்?” என்று நினைத்தேன். சரியாக அப்பொழுதே பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசி இந்த வேதவாக்கியத்தை எனக்கு கொடுத்தார். “பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது; முசுகட்டைபூச்சி விட்டதை பச்சைக்கிளி தின்றது. (யோவேல் -1:5) “ஆம், என்னிடமாக இது ஒரு முறை மகத்தான பச்சை மரமாக வந்தது, ஆனால் நெருப்பானது அதில் இருக்கும் எல்லா ஜீவனையும் எரித்துபோட்டுவிட்டது.” என்று நினைத்தேன். பாருங்கள்? “அது சரிதான். பாப்டிஸ்ட் விட்டதை மெதோடிஸ்டு தின்றது. மெதொடிஸ்டு விட்டதை பிரஸ்பிடேரியன் தின்றது. பிரஸ்பிடே ரியன் விட்டதை பெந்தேகோஸ்தே தின்றது” என்று நினைத்தேன். “ஓ, என்னே, அது மொத்தமாக ஒன்றுமே இல்லாமல் இருக்கிறது” என்று நினைத்தேன். “நல்லது, அந்த பழைய மரங்களை பற்றிய காரியம்தான் என்ன?” என்று சிந்தித்தேன். அவைகள் மிகவும் விறைப்பாக இருக்கிறது. “அவை ஏன் அந்த காற்றிற்கு வளைவதில்லை?” காற்று அடிக்கிறது; அவைகள் ம்ம்மம்ம் என்று முனுங்குகின்றதே தவிற வளைந்துகொ டுப்பதில்லை. “நல்லது, என்னே ஒரு அச்சுறுத்தும் காட்சி” என்று எண்ணினேன். “ஆம், அது எனக்கு பல இடங்களில் இருக்கும் இந்த பெரிய செங்குத்தான சபைகளை நினைப்பூட்டுகிறது, அந்த சபைகள் தங்க ளால் முடிந்த அளவிற்கு மரித்த நிலையிலிருக்கிறது. ஓ, நாங்கள் ஒரு காலத்தில் சபையாய் இருந்தோம் என்று அவர்கள் கூறலாம். ‘ஓ, எங்களிடமிருந்த சபையை ஆரம்பித்தவர்களை என்னால் காட்ட முடியும் ...” ஆனால் இப்பொழுது உன்னிடம் என்ன இருக்கிறது?” அதைதான் நான் அறிய விரும்புகிறேன். 49. என்ன காரியம்? ஒன்று விட்டதை, இன்னொன்று தின்றுவிட்டது. அது எல்லாவற்றையும் வெட்டி கீழே தள்ளிவிட்டது. நல்லது, நான் வேதாகமத்தை பார்த்தேன், அவர் “ஆனால் நான் திரும்ப அளிப்பேன், கர்த்தர் உரைக்கிறதாவது” என்றார். அது என்னே ஒரு கடுமையான வார்த்தை. காற்று பலமாக அடிக்கதொடங்கியது. “அவை அந்தவித மாகவே நடந்து கொள்ளும்வரையில், காற்றை அனுப்புவதால் என்ன பயன்?” என்று எண்ணினேன். நான் கீழே பார்த்தபோது, அங்கே கீழே ஒரு கூட்ட சிறிய மரங்கள் இருந்தது. இன்றைய உலகில் அவைகளை பொய்யர் --- அதுபோன்று ஏதோவொன்றை கூறி அழைப்பர். ஆனால் அவைகளோ பசுமையாகவும் வளைந்துகொடுக்கும் தன்மைகொண்டதாகவும் இருந்தது. ஒவ்வொருமுறையும் காற்றா னது அவைகளின் மீது படும்போது, அவைகள் முன்னும் பின்னும் ஆடி தங்களால் முடிந்த அளவிற்கு துள்ளி குதித்தன. நான் கூறினேன் “தேவனுக்கு ஸ்தோத்திரம், அவை சிதறியிருந்தாலும் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” என்று கூறினேன். வானத்திலிருந்து பரிசுத்த ஆவி எனப்படும் சடுதியாய் முழக்கம் போன்ற பெருஞ்சத்தம் வந்தது. அந்த பழைய பெரிய சபைகளால் முடிந்தது எல்லாம் உளறுவது மட்டுமே, “ம்ம்ம்ம்ம்ம், அற்புதங்க ளின் காலம் கடந்து போய்விட்டது. ம்ம்ம்ம்ம், தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று இல்லவே இல்லை. ம்ம்ம்ம்ம், அது எல்லாம் பிசாசுடை யது. ம்ம்ம்ம்ம், அதை விசுவசிக்காதே. அதனிடம் சென்று விடாதே”. ஆனால் எல்லா காலங்களிலும், தேவன் தனக்கான ஒரு வளர்ச்சியை கொண்டே இருக்கிறார், ஒரு சபை...? ... “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைகிறார்.” 50. அவருடைய எல்லா முந்தின மகிமையும் அதற்கு திரும்ப அளிக்கப்படும். முதலில் இருந்த எல்லாமே திரும்பவும் வரும். “எப்படியாயினும் எதற்காக தேவன் காற்றை அனுப்புகிறார்?” என்று எண்ணினேன். அந்த மரங்களை அசைப்பதற்காகவே. ஒவ்வொரு முறையும் நீங்கள் மரத்தை அசைக்கும்போது, அந்த அசைவு வேர்பா கத்தை தளர்வடைய செய்து, வேரானது மிகவும் ஆழமாக, மிகவும் ஆழமாக வளரும்படி செய்கிறது. ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியானவர் சபையில் விழும்போது, அதாவது பழைய பாணியி லான எழுப்புதல் கூட்டங்களில் விழும்போது, அது இந்தவி தமாக வேர்ப்பாகத்தை அசைக்கிறது. எதற்கெனில் அது நன்றாக வேர் விட்டு நன்றாக புதைந்து, இந்த பூமியில் வரவிருக்கும் புயலுக்கும் சோதனைகளுக்கும் தயார் நிலையில் இருப்பதற்காகவே. அல்லே லுயா! “அதின் எல்லா முன் காலத்தையும், பட்சித்துபோடபட்ட எல்லாவ ற்றையும் நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்,” ஒன்று ஞானஸ்நானத்தை வெளியே எடுத்துபோட்டது. மற்றொன்று சந்தோஷத்தை வெளியே எடுத்துபோட்டது. வேறொன்று பரிசுத்த ஆவியை வெளியே எடுத்துபோட்டது. இன்னொன்று சுகமளித்தலை வெளியே எடுத்துபோட்டது. மற்றுமொன்று வரங்களை வெளியே எடுத்து போட்டது. உங்களுக்கு தெரிந்த முதல் காரியம், உங்களிடம் ஒரு பெரிய செத்துப்போன மங்கலான புதர் மட்டுமேதான் நின்று கொண்டிருக்கிறதே தவிர வேறொன்றும் உங்களிடம் இல்லை. ஆனால் அதே போன்று, இங்கே கீழே எங்கேயோ, தேவனால் தனித்து வைக்கப்பட்டிருக்கிற ஜீவன் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த சபை, பூமியானது இங்கே இருக்கும்வரை, தன்னை பிரதிபலிக்கும் ஒரு சபையை தேவன் உடையவராகவே இருக்கிறார். “அதின் முன் காலத்தின் எல்லா மகிமையையும், நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார். பச்சைக்கிளி விட்டுவைத்த எல்லாவற்றையும் நான் திரும்ப அளிப்பேன். நான் சுகமளித்தலை திரும்ப அளிப்பேன். நான் பரிசுத்த ஆவியை திரும்ப அளிப்பேன். நான் சந்தோஷத்தை திரும்ப அளிப்பேன். முதலாம் சபையிடம் என்ன வெல்லாம் இருந்ததோ அதையெல்லாம் நான் திரும்ப அளிப்பேன். அதையெல்லாம் கடைசி நாளிலே நான் திரும்ப அளிப்பேன்” நாம் இங்கே அந்த திரும்ப அளிக்கப்பட்ட நாளில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சகோதரனே, இங்கே இந்த காரியத்தை விட்டுவிட்டு, உன்னால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக இங்கே வந்துவிடு. ஆமென். 51 “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.” ஆமென். சகோதரனே, இப்பொழுது பிரசங்கிக்கும்படி நான் நன்றாக உணருகி றேன், ஏறக்குறைய. நான் உங்களிடம் கூறுகிறேன், நான் மிகவும் நன்றாக உணருகிறேன். ஏன், சிந்தித்து பாருங்கள்: நாம் எந்த நாளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேவன் இங்கே இருந்து காரியங் களை மேலே கொண்டுவருகிறதை நாம் காண்கிறோம். அது எதோ கட்டுக்கதையல்ல. வேதாகமத்தை வாசியுங்கள். வேதவாக்கியங் களை ஆராய்ந்து அது சத்தியமா என்று பாருங்கள். அங்கே அது ஆதியாகமத்திலிருந்து வெளியே வந்தது. இங்கே இதுவும் அதியாகமத்திலிருந்து வெளியே வருகிறது. இங்கே இருக் கும் இது அடிப்படையை கொண்டது, இங்கே இருக்கும் இதுவும் அடிப்படையை கொண்டது. ஆனால் தேவன் இதை இது செல்லும் வழியிலெல்லாம் அற்புதங்களாலும் அடையாளங்களாலும் உறுதிப் படுத்தினார். அவர் இன்னமுமாக தன்னுடை சபையை அற்புதங்களா லும் அடையாளங்களாலும் உறுதிப்படுதுகிறார். “விசுவாசிக்கிறவர்க ளை இந்த அடையாளங்கள் உலகின் முடிவு பரியந்தம் வரை பின்தொடரும். என்னுடைய நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவா ர்கள்; வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சுகமடைவார்கள்.” பரலோகத்தில் தேவன் இருக்கும்வரை அவர் பரிசுத்த ஆவியை ஜனங்கள் மீது அனுப்பினார் என்பதை அடையா ளங்கண்டுகொள்ளும்படி ஒரு கூட்ட ஜனங்கள் இருப்பார்கள். ஆமென். (மாற்கு-16) ஓ, சகோதரனே அது உண்மையான காரியம், நீங்கள் சத்தியத்தை விட்டு விலகும்போது ... “எழுத்து கொல்லும், ஆனால் ஆவியோ உயிர்பிக்கும்” அது (2கொரி-3:16) சரி. எழுத்துகள் அது எல்லாம் சரிதான். ஆனால் வித்தானது வித்தாக மட்டுமே இருந்தால் என்ன பிரயோஜனம்? அதை புதைத்து அது அழுகும்படி விடுங்கள்? அது ஜீவனை, முழு சோளக்கதிரை வெளியே கொண்டு வரும். நாம் ஜெபிக்கலமா. 52. பரலோக பிதாவே, இன்றிரவு, நேரமானது மிக மிக அருகாமை யில் இருப்பதை நாங்கள் அறிகிறோம், நாங்கள் கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிகிறோம், அந்த பழைய மரங்களெல்லாம் சென்றுகொண்டிருக்க, இங்கே இந்த திராட்சை செடியானது இன்றிரவு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, பரிசுத்த ஆவியின் சான்றாக கனிகளை கொடுத்து எங்கள் மத்தியில் இருக்கி றதை நாங்கள் அறிகிறோம். நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்க ளாய் இருக்கிறோம், கர்த்தாவே. உம்முடைய நன்மைகளுக்காகவும் இரக்கங்களுக்காகவும் நாங்கள் எங்கள் கரங்களை உயர்த்தி உம்மை துதித்து உம்மை துதித்து துதித்துகொண்டே இருப்போம். உம்மு டைய வழிகள் எவ்வளவு அற்புதமும் எவ்வளவு மகத்துவமானவை களுமாய் இருக்கிறது. உம்மை எங்கள் முழு இருதயத்தோடும் துதித்து உமக்கு எங்கள் முழு இருதயத்தோடும் நன்றிகளை தெரிவிக் கிறோம். இப்பொழுதும், பிதாவே, இழக்கப்பட்டவர்களை நீர் இரட்சிக்கு ம்படி, வெளியே இருக்கிறவர்களை – உம்மை வெறுமனே வார்த்தை யின் கருத்தின்படி மட்டுமே அறிந்திருக்கிறவர்களை பரிசுத்த ஆவியி னால் நிரப்பும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். காயீன் வார்த்தையை விசு வாசித்தான், யூதாஸ் வார்த்தையை விசுவாசிதான், பிசாசும் வார்த்தையை விசுவாசிகிறான் என்பதை அவர்கள் அறியட்டும். ஆனால் ஒரு மனிதன் தேவ ஆவியினால் மறுபடியும் பிறக்கவேண் டும். தேவன் அவனுக்குள்ளாக வரும்போது, அவன் ஒரு புது சிருஷ் டியாகி வேதாகமத்தில் தேவன் எழுதின எல்லாமுமே சத்தியம் என்று விசுவாசிக்கிறான். ஓ பிதாவே, உம்முடைய ஜனங்கள் மீது இன்றிரவு நீர் இந்த ஆசிர்வாதங்களை தரும்படி, பலர் பரிசுத்த ஆவியினால் நிரப்பபடும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 53. நீங்கள் உங்கள் தலைகளை தாழ்த்தியிருக்கிற வேளையிலே, நீங் கள் விரும்பினால், நாம் ஜெபித்துகொண்டிருக்கும்போது, இங்கே ஜனங்கள் தேவனை தேடி ஜெபித்துகொண்டிருக்கும்போது, “சகோத ரன் பிரான்ஹாமே, நீங்கள் ஜெப வரிசையை தொடங்குவதற்கு முன்பு, என்னை உம்முடைய ஜெபத்தில், நான் பரிசுத்த ஆவியை பெற்றுகொள்ளும்படி நினைவுகூறுவீரா? நான் வெகு நாட்களாக கைகொண்டிருக்கும் என்னுடைய இந்த பழைய கோட்பாடுகளை நான் விட்டுவிட விரும்புகிறேன். நான் உண்மையாகவே மறுபடி யும் பிறக்க விரும்புகிறேன். காற்றானது அடிக்கும்போது, பரிசுத்த ஆவி என்னை எங்கெல்லாம் வழிநடத்துகிறதோ அதற்கெல்லாம் நான் வளைந்துகொடுக்க விரும்புகிறேன், நான் தெருவிலே சந்தோ ஷத்துடனும், என் ஆத்தும மகிழ்ச்சியோடும் செல்ல விரும்புகி றேன். நான் எவ்வளவாய் மறுபடியும் பிறக்க விரும்புகிறேன்!” என்று தன்னுடைய கரங்களை உயர்த்தி சொல்லகூடிய யாரவது ஒரு மனிதன் இருப்பானா என்று நான் வியக்கிறேன். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, உன்னை ஆசிர்வதிப்பாராக. சுற்றி பார்க்கிறேன், அங்கே பால்கனியில், ஓரங்களில் இருப்பவர்கள், இன்றிரவு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் ஜீவியத்தில் நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் யாராயிருந்தாலும் பர வாயில்லை; பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, கத்தோலிக், மஞ்சள், கரு ப்பு என நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் கரங்களை தேவனுக்கு முன்பாக உயர்த்தி “தேவனே, இதினாலே, நீர் எனக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தரும்படி வேண்டுகிறேன்” என்று கூறுங்கள். 54. இப்பொழுது, பார் நண்பனே, நீ ... பாப்டிஸ்டிர்கும் மெதோடி ஸ்டிர்கும் கூறுகிறேன், டாக்டர். ரெட்ஹெட் என் வீட்டிலிருந்தார். அவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா, அவர் இந்த உலகத்திலிருக் கும் ஒரு மிக பெரிய அடிப்படை சுவிசேஷ சங்கத்தின் தலைவரா வார். அவர் “சகோதரன் பிரான்ஹாமே, எனக்கு தெரியும், நீங்கள் ஒரு பாப்டிஸ்டு, நீங்கள் பல பெந்தேகோஸ்தேயினரை சந்தித்திருக்கிறீர் கள் என்று எனக்கு தெரியும்” என்றார். “அதற்கு எதுவும் சம்மந்தம் இருக்கிறதா?” என்றார். “நிச்சயமாக, ஒரு கூட்ட காட்டுத்தீயை அவர்கள் கொண்டிருக்கி றார்கள் – வெளியே கொண்டுவந்தார்கள்” என்றேன். அது சரி. அவர்க ளில் பலர் எங்கள் பாப்டிஸ்டில் இருப்பதுபோன்ற போலிகளை கொண்டிருகிறார்கள். ஆனால் “சகோதரனே, அது எல்லாவற்றிற்கும் பின்னாக, ஒரு உண்மையான அசலான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நா னம் இருக்கிறது” என்று கூறினேன். “நான் அதை பெற்றுகொள்ளமுடியுமா” என்று கேட்டார். “ஆம், ஐயா” என்றேன். “எப்பொழுது” என்றார். “சரியாக இப்பொழுதே” என்றேன். “இந்த சுவர் முழுவதையும் மூடுவதற்கு போதுமான அளவு பட்ட ங்கள் – மதிற்பிற்குரிய பட்டங்கள் என்னிடம் உண்டு – ஆனால் சகோதரன் பிரான்ஹாமே, அவைகளில் இயேசு எங்கே இருக் கிறார்?” என்று கேட்டார். “அவர் புதிய பிறப்பில் இருக்கிறார்” என்றேன். அவர் “எனக்கு அது வேண்டும்” என்றார். அவர் அங்கேயே முழங் காலிட்டு என் வீட்டு காபி மேஜையின் அருகே பரிசுத்த ஆவியை பெற்றுகொண்டார். ஆம், ஐயா. 55. ஓ, அது உங்கள் அனைவருக்குமேதான். நீங்கள் கத்தோலிக்கரா யிருந்தால், அது உங்களுக்குதான். நீங்கள் பாப்டிஸ்டாயிருந்தால் அது உங்களுக்குதான். நீங்கள் மெதோடிஸ்டாயிருந்தால், அது உங்களுக்குதான். நீங்கள் ஒரு பெந்தேகோஸ்தே போன்று போலி யாய் நடிப்பவரா, அது உங்களுக்குதான். அது சரி. அது உங்களுக்கு வேண்டுமானால், உங்களுடைய கரங்களை தேவனுக்கு நேராக உயர் த்தி “தேவனே, இந்த கூட்டத்தை விட்டுவிடதேயும், இந்த கூட்ட த்தை நான் பரிசுத்தஆவியை பெறும்வரை முடிக்கவிடதேயும்” என்று கூறுங்கள். இப்பொழுது, நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, உங்கள் தலைகளை தாழ்த்தியிருக்க, நாம் ஜெபிப்போம். கர்த்தராகிய இயேசுவே, இந்த இரவு எல்லாருக்கும் ஒரு சரியான தீர்மானத்தின் இரவாயிருக்கட்டும். அவர்கள் நிரூபனத்தை காணட் டும். காலம் மிக சமீபமாயிருக்கிறதை அவர்கள் காணட்டும். அவர்கள் உள்ளுணற்சியற்ற முறைமை என்னும் விருட்சத்திலிருந்து (tree of formality) கீழே இறங்கி, ஜீவனை பெற்று கொள்ளும் ஜீவ விருட்சத்தின் (Tree of life) மீது ஏறிக்கொள்ளட்டும், அங்கே அவர்கள் சகலத்தையும் விசுவாசிப்பார்கள்; தேவனுடைய வார்த்தையில் நடந்து “இந்த புத்தகத்திலிருக்கும் எல்லா வாக்குத்தத்தங்களும் என் னுடையது, ஒவ்வொரு நிரூபங்களும், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொருவரியும் என்னுடையது” என்று கூறட்டும். அதையே விசு வாசிக்கட்டும், அதையே ஜீவிக்கட்டும், அதன் மீதே நிற்கட்டும். கர்த் தாவே, இதை அருளும். இப்பொழுது, கரங்களை உயர்த்தியிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் அதை பெற்றுக்கொள்ளட்டும், பிதாவே, பரிசுத்த ஆவியினால் நிரப்பபடட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத் தில் கேட்கிறோம். ஆமென். ஆமென். 56. ஓ, என்னே, இப்பொழுது பாதியில் நிறுத்துவதற்கு வெறுக்கி றேன். நான் சற்றே... நான் ஒருவிதமாக...எனக்கு தெரியவில்லை; நான் நன்றாக உணருகிறேன். நான் சற்று வேடிகையாய் நடந்து கொள்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் – நான் – நான் சற்று வேடிக்கையாய் தான் இருக்கிறேன். நீங்கள் கூறலாம் ... ஒருவேளை நான் என் சரியான மனநிலையில் இல்லையென்று நீங்கள் எண்ண லாம். நான் சரியான மனநிலையில் இல்லையென்றால், என்னை தனிமையில் விட்டுவிடுங்கள். நான் இதற்கு முன்பாக இருந்ததை விட, இப்படி இருப்பதே எனக்கு திருப்த்தியளிக்கிறது. எனவே இந்த விதத்தில் நான் நன்றாக இருக்கிறேன். எனவே சற்றே – சற்றே என்னை தனிமையில் விட்டுவிடுங்கள். நான் இப்படியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது; என்றோ ஓர் நாளில் இயேசு வரும் போது, நான் அவருடன் சென்று விடுவேன் என்ற உணர்வு எனக்கிரு க்கிறது. இன்னொரு விதத்தில், அவரை சந்திக்க எனக்கு பயமாகவும் இருக்கிறது. இந்த விதத்தில், நான் நன்றாக உணருகிறேன். எனவே நான் இந்த விதத்திலேயே இருந்துவிடுகிறேன். ஆமென். இங்கே கலிபோர்னியாவில், சில நாட்களுக்கு முன்பு, நான் ஒரு குறியீட்டை கண்டேன். தெருவிலே ஒரு மனிதன் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்கு முன்பாக இந்த குறியீட்டை வைத்திரு ந்தான். அவன் “நான் கிறிஸ்துவிற்காக முட்டாள்” என்று கூறி நடந்து கொண்டிருந்தான். அவன் அப்படியே திரும்பும்போது, “நீ யாருக்காக முட்டாள்?” என்று கூறி ஒரு கேள்வி குறியுடன் ஒரு குறியீட்டை வைத்திருந்தான். ஆகவே நீங்கள் பிசாசிற்கான முட்டாளாகவும் இருக்ககூடும். மாறாக நான் கிறிஸ்துவிற்கே முட்டாளாயிருக்கி றேன், நீங்கள் இருக்க மாட்டீர்களா? ஆமென். அவருக்கு சேவை செய்யுங்கள். அவரை நேசியுங்கள். அவரை மகிழ்ச்சியாக்குங்கள், அவரை கனப்படுத்துங்கள், என்னிடம் இருக்கும் எல்லாவற்றைகொ ண்டும், என் குரலை கொண்டு, என்னிடம் இருக்கும் எல்லாவற்றை கொண்டும், கர்த்தராகிய இயேசுவை கனப்படுத்துங்கள் ... ஆமென். 57. ஒருவேளை நாளை இரவு சகோதரன் மூர் இங்கே இருப்பார். எனவே நாம் ஜெப வரிசைக்காக, வியாதியஸ்தர்களுக்கு ஜெபிப்பதற் காக அதிக நேரம் செலவிடலாம். சகோதரன் மூர் பிரசங்கிப்பார். அவர் சரியாக வந்துவிடுவார் என்று நாம் நம்புகிறோம். இன்னும் சில நாட்களில் இங்கிருந்து உடனடியாக நான் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதை அறிவேன். நேராக ஜூரிச், ஸ்விட்சர் லாந்து செல்லவேண்டும். அங்கே அவர்கள் ஒரு பெரிய அரங்கு நிறைய ஜனங்களை எதிர்ப்பார்கிறார்கள் (அந்த இடத்திற்கு பில்லி கிரகாம் சென்று கிறிஸ்துவை பற்றின சிந்தைக்கு அவர்களை கொண்டு வந்தார்). மேலும் யாரோ ஒருவர் அவர்களிடம் தேவன் இன்னமுமாக சுகமளிக்கிறார் என்று கூறியுள்ளார். எனவே அவர்கள் அதை காண வாஞ்சிக்கின்றனர். ஆகவே நாங்கள் அங்கே சென்று கர்த்தர் என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க போகிறோம். கர்த்தர் ஆசீர்வதிக்கப்படுவாறாக. 58. இப்பொழுது, அது வழக்கமாக ... நான் நினைக்கிறன் கடந்த இரவில், நான் வெளியே சென்று கொண்டிருந்தபோது “நம் ஜெப வரிசையில் எத்தனை பேர் இருந்தார்கள்?” என்று கேட்டேன். பையன்கள் என்னை வெளியே அழைத்து சென்று கொண்டிருந்த போது நான் இதை கேட்டேன். அவர்கள் “நல்லது, நீங்கள் ஜெப வரிசையே வைக்கவில்லை” என்றனர். “நீங்கள் சற்றே ஆரம்பித்தீர்கள் – ஜனக் கூட்டத்தலிருந்து ஜனங்கள் ... [ஒலி நாடாவில் காலியிடம் – ஆசி] இப்பொழுது, சிறிது – ஒரே நிமிடம் ஒரு சிறிய உண்மை. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால் என்னவாயிருக்கும்? அது உண்மையென்றால், அது உண்மையென்று நாம் அறிவோம், அப்படியானால் அவர் மரித்தோரிலில்லை. அவர் உயிரோடிருக்கி றார், உயிரோடு இருக்கிறார்தானே ? அப்படியானால் அவர் மரித்தோ ரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தாரானால், அப்போது அவர் என்ன செய்தாரோ அதையே இப்பொழுதும் செய்வார். அவர் ஆபேலில் இருந்தார். அவர் இஸ்ரவேலர்களோடு இருந்தார். அவர்களை வனாந் திரத்தினூடாக நடத்திய தூதன் அவர்தான். நீங்கள் அதை விசுவாசி க்கிறீர்களா? அந்த அக்கினி ஸ்தம்பம் தான் உடன்படிக்கையின் தூத னாயிருந்தார். கிறிஸ்துதான், மேசியாதான் உடன்படிக்கையின் தூதன் என்பதை யாவரும் அறிவர். இங்கே அவர் இஸ்ரவேலின் பிள்ளை களோடு வனாந்திரத்திலிருந்தார். இங்கே அவர் பூமியிலே மாம்ச சரிரத்தில் பிரத்தியட்சமானார். இங்கே இன்றைக்கு அவர் பரிசுத்த ஆவியின் வடிவத்திலிருக்கிறார். அதே இயேசு, அதே சபையில், அதே காரியங்களை செய்கிறார். அதே குற்றம் சாட்டுபவர்கள் அதே வார்த்தையை குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார்கள். அங்கே தான் – அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. 59. நான் அவர் பக்கமாக இருப்பதற்கு மகிழ்ச்சிக்கொள்கிறேன். நீங் கள் மகிழ்ச்சியாய் இல்லையா? இங்கே இருக்கும் கிறிஸ்தவர்களே ? இன்றிரவு, எத்தனைபேர் மறுபடியும் பிறந்தவர்கள் இருக்கிறீர்கள் என்று கேட்கிறேன், உண்மையாக கரங்கள் மேலே சென்றவர்கள் மறுபடியும் பிறந்தனர் என்று நான் நினைக்கிறேன். கரங்களை உயர்த் தாதவர்கள், ஜெபிப்பதற்காக கரங்களை மேலே உயர்த்துங்கள். அது சரியென்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் ஆசிர்வதிக்கப்பட்டிருப் பதே என்னுடைய ஜெபம். இப்பொழுது, வழக்கமாக பில்லி ஜெப அட்டைகளை கொடுப் பான். அவன் எந்த வரிசையில் கொடுத்தான் என்று நான் அறிந்தால் ... ? ... அது எந்த ... ? “உ” வரிசை. சரி. அவன் சற்று நேரத்திற்கு முன்பு ஜனங்களுக்கு “உ” வரிசை ஜெப அட்டைகளை கொடுத்தான். ஒரே சமயத்தில் அவர்களில் அநேகரை எங்களால் அழைக்க முடியாது. ஆனால் நாங்கள் ... என்னுடைய ஊழியம், நான் நினைக்கிறேன், இங்கே அமெரிக்காவில் என்னுடைய ஊழியம் அவ்வளவு வெற்றிக ரமாக இல்லை, அதற்கான காரணம் என்னவெனில், அமெரிக்க ஜனங்கள் தங்கள் மீது கைகளை வைக்கவேண்டுமென அதிகமாக எதிர்ப்பார்கிறார்கள். ஏன்? அவர்கள் அந்தவிதமாகத்தான் போதிக்கப் பட்டிருகிறார்கள். அந்தவிதமாகத்தான் அவர்களிடம் பதிவு செய்யப் பட்டிருகிறது. அது யூத முறைமையாகும் (பாருங்கள்?). அது வெறும் ஒரு முறைமையே. அதை நீங்கள் வேதாகமத்தில் பார்க்கலாம், கைகளை வைப்பதை (அது முற்றிலும் சரியே). 60. நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்கட்டும். யவீரு “வந்து, என் பிள்ளை மேல் கைகளை வையும் அப்பொழுது அவள் ஜீவிப்பாள். அவள் மரித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை நான் அறிவேன், ஆனால் நீர் வந்து, அவள் மேல் உம்முடைய கைகளை வைத்தால் (அவன் ஒரு யூதன்), வந்து அவள் மேல் உம்முடைய கைகளை வையும், அப்பொழுது அவள் ஜீவிப்பாள்” என்றான் (மாற்கு-5:22). ஆனால் ரோமானியனிடமோ, அது போன்ற முறைமைகள் எதுவுமி ல்லை. அவன் “இல்லை, இல்லை என் வீட்டிற்குள் நீர் வருவதற்கு கூட நான் பாத்திரன் அல்ல, நான் அதிகாரம் பெற்ற ஒரு மனிதன் என்பதை அறிவேன்; ஒருவனை “போ” என்றால் போகிறான், ஒருவனை “வா” என்றால் வருகிறான் “எனவே, நான் ... (இது போன்ற வார்த்தைகளில்), உம்மைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கி றேன், அதாவது நீர் வியாதிக்கு கட்டளையிடுகிறீர் அது உமக்கு கீழ்ப்படிகிறது. நீர் வார்த்தையை பேசினால் மாத்திரம் போதும்; என் வேலைக்காரன் ஜீவிப்பான்” என்றான். அவன் செய்யவேண்டியது அவ்வளவுதான். அதுதான் ரோமன். அவன் “வார்த்தையை பேசும்” என்றான். (மத்தேயு-8:5-10) (ஆனால் யூதர்களுக்கோ; அவர்கள் மேல் நீங்கள் கைகளை வைக்க வேண்டும்) அதினால்தான் என்னிடம் யாரோவொருவர் சில நாட்களுக்கு முன்பாக கூறினார், “சகோதரன் பிரான்ஹாமே, உம்முடைய கூட்டங் களில் ஒரு பிழை உண்டு” என்றார். “நீங்கள் ஐந்து பேருக்கு ஜெபிப்ப தற்குள்ளாக, சகோதரன் ராபர்ட்ஸ் ஐநூறு பேருக்கு ஜெபித்துவி டுவார்” என்றார். நான் “ஆம், ஆனால் சகோதரன் ராபர்ட்ஸ், தேவன் அவரிடம் என்ன கூறினாரோ அதை அவர் செய்கிறார்; என்னிடம் தேவன் என்ன கூறினாரோ அதை நான் செய்கிறேன்” என்றேன். புரிகிறதா? நான் சகோதரன் ராபர்ட்ஸாக முடியாது, அதேபோன்று சகோதரன் ராபர்ட்ஸும் நானாக முடியாது. ஆகவே நாங்கள் இருவரும் கர்த்த ரையே சேவிக்கிறோம். அவ்வளவுதான். 61. எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன், முழு காரியமே இதுதான், நீங்கள் எப்படி விசுவாசிகிறீர்களோ அப்படிதான் நடக்கும். அது தனி ப்பட்டவர்களை சார்ந்தது. அது – அது உங்களை பொருத்தது. அது கல்வாரியில் முடிவுபெற்ற தேவனுடைய கிரியையின் மீது நீங்கள் வைத்துள்ள விசுவாசமாயிருக்கிறது. இப்பொழுது, சகோதரன் ராபர்ட்ஸ் வேகமாக பேசக்கூடியவர். அந்த மனிதர் சுகமளித்தல் வரத்தை தவிற வேறெந்த வரத்தையும் கொண்டவர் என்று உரிமை கோருவதில்லை என்று நான் நினைக்கி றேன். அந்த பிரசங்கம், அதின் அர்த்தம் அவர் யாரையேனும் சுகமாக் குகிறார் என்றல்ல. அதின் அர்த்தம் அவர் சுகமளித்தலை பிரசங்கி க்கிறார். அவர் மட்டுமல்ல நூற்றுகனக்கான, நூற்றுகனக்கான, நூற்று கனக்கான மற்ற மனிதரும் உலகத்தை சுற்றி சுகமளித்தலை பிரசங்கி க்கின்றனர். இப்பொழுது, அவர்கள் யாவரும் பிரசங்கிகள்; பிரசங்கிக்க அவர்களுக்கு போதிக்கபட்டிருக்கிறது. எப்படி பிரசங்கிக்க வேண்டு மென்று அவர்களுக்கு தெரியும். நான்? என்னுடையது தரிசனங்களை பார்ப்பது. பாருங்கள்? அது சற்றே – சற்றே ஊழியத்தின்மற்றொரு வடிவமாயிருக்கிறது. தேவன் “சிலர் அபோஸ்தலராகவும், சிலர் தீர்க்கதரிசிகளாகவும், சிலர் போதகர்களாகவும், சிலர் சுவிசேஷகர்க ளாகவும், சிலர் அந்நிய பாஷை வரத்தையும், அந்நிய பாஷை பேசுகி றவர்களாகவும், அற்புதங்களை செய்கிறவர்களாகவும் மேலும் பல் வேறு வரங்களும் இருக்கும்” என்று கூறியுள்ளார். அவையாவும் சபையில் கிறிஸ்து இயேசுவை பிரத்தியட்சமாக்கும்படி அளிக்கப்ப ட்டிருக்கிறது. அது சரி. அது அதற்காகத்தான். (1 கொரி-12:8-10) 62. இப்பொழுது – இன்றிரவு இருக்கும் ஜெப அட்டைகள், எங்களால் முடிந்தவரை எத்தனை பேருக்கு ஜெபிக்க முடியும் என்று பார்க்கலாம். எனக்கு தெரியவில்லை, இங்கிருக்கும் யாரையுமே எனக்கு தெரியாது, இங்கே முன்னாக அமர்ந்திருக்கும் இந்த இரண்டு அல்லது மூன்று பேரை தவிற வேறு யாரையும் எனக்கு தெரியாது. ஏனெனில் இந்த பையன்கள் ஒலிநாடாவை பதிவு செய்கின்றனர், கூட்டத்தின் மற்ற காரியங்களையும் பார்த்துக்கொள்கிறார்கள். யாரா வது பரிசுத்த ஆவி என்ன கூறினார் என்பதை அறிந்துகொள்ள விரும்பினால், இங்கிருக்கும் பையன்களை அவர்கள் சந்திக்கலாம், சந்தித்து அங்கே சரியாக என்ன கூறப்பட்டது என்பதை அறிந்துகொ ள்ளலாம் --- அவர்களிடம் அவர் என்ன கூறினார் என்று. அல்லது யாருக்காவது செய்தி அல்லது வேறெதுவும் வேண்டுமானால், ஏன், அவர்களிடம் அதை வாங்கிக்கொள்ளலாம். இப்பொழுது, நாம் கொஞ்சம் கொஞ்சம் பேராக அழைக்கபோகி றோம். ஏனெனில் அவர்களிடம் நான் நேரம் எடுத்துகொள்ளபோகி றேன். நான் கவனித்ததுண்டு, நான் ஜெபித்து கொண்டிருக்கிறேன். நீங்கள் இதை அறிந்துக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகி றேன். அதாவது தேவன் அதை எனக்கு வேறுவிதமாக ஓர் நாளில் தருவார்: ஒரு குறிப்பிட்ட நபர் ஜெபவரிசையில் வரும்போது (அப் போதுதான் எனக்கு அவர் அறிமுகமே ஆகிறார் ... அது ரேடியோவி லும் மற்றவைகளிலும் இருக்கிறது) அறிந்துகொள்வார், ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையை கவனித்துக்கொண்டிருப்பாள், அப்போதுதான் அது சரியான நேரமாயிருக்கும். சரியாக அந்நேரத்திலிருந்து நான் வியாதியஸ்தர்கள் மேல் என் கைகளை வைக்க ஆரம்பித்து அவர்களு க்காக ஜெபிக்க ஆரம்பிப்பேன். அவர் அழைக்கிற விதமாக செய் வேன். இப்பொழுது, அது பல வாரங்களாக பல மாதங்களாக பார்க்க ப்பட்டு வருகிறது. எனவே அது – அது அப்படியாகத்தான் இருக்கும். தேவன் அதை அறிவார், ஆனால் இன்னுமில்லை. 63. எனவே இப்பொழுது, இன்றிரவு நாம் அழைக்கும்போது, இப் பொழுது இங்கே மேலே சிலரை வரும்படி அழைப்போம். இப் பொழுது, அங்கே நூறு ஜெப அட்டைகள் இருக்கிறதென்று அவர் கள் கூறுகின்றனர். எனக்கு – எனக்கு யாரை அழைப்பது என்று தெரி யவில்லை. யாருக்குமே தெரியாது. நாம் ... அது ஒரு வினோதமான காரியம்: நாங்கள் முதன் முதல் ஜெப அட்டைகளை கொடுக்க ஆரம்பித்த போது, முதலாவதாக, அவர்களை வரிசைபடுத்த முயற்சி த்தேன். ஓ, எல்லாவிதமான ஒழுங்கினமும் மற்றவைகளும் அங்கே இருந்தது; உங்களால் வரிசைபடுத்தவே முடியாது. அப்போது, நாங் கள் ஒவ்வொரு ஊழியக்காரரிடமும் நூறு அட்டைகளை அனுப்பி னோம். முதலாவதாக வந்த ஊழியக்காரர் தன்னுடைய குழுவை அழைத்துவந்தார் – அது ஒரு கூட்டத்திற்கு போதுமானதாக இருந் தது – மூன்றிலிருந்து ஐந்து இரவுகளுக்கு. பின்பு ஊழியக்காரர்களுக்கு இடையே சச்சரவு ஏற்பட்டது. அப் போது என்னோடு கூட ஒரு மனிதனை கூட்டிக்கொண்டு அவர்களு க்கு கொடுக்க சென்றேன். அவன் ஜெப அட்டைகளை விற்றான் என்று எனக்கு தெரிய வந்தது. அவன் அந்த ஒரு இரவு மட்டுமே இரு ந்தான்; அவ்வளவுதான். 64. அப்போது – அப்பொழுதிலிருந்து நாங்கள் வேறொரு பிரச் னையை சந்தித்தோம். அப்போது நாங்கள் கண்டறிந்தோம், நான் சென்று என் சகோதரனை அழைத்துவந்தேன். அப்போதிலிருந்து, அவன் கீழே சென்று இருபது முதல் இருபத்தைந்து அட்டைகள் அல் லது எத்தனை அட்டைகளாக இருந்தாலும் அதை கொடுத்தபிறகு அவன் கூறுவான்... “எனக்கு அந்த அட்டை வேண்டாம். அவன் அந்த அட்டை எண்ணை அழைக்கவேமாட்டான். நான் – அவன் பதினைந்து, இருபது, அதிகபட்சமாக இருபத்தி ஐந்து வரைதான் அழைப்பான். என்னே, எனக்கு – எனக்கு – எனக்கு அந்த அட்டை வேண்டாம்” என்று யாரேனும் கூறினால், அவர்களுக்கு அட்டை கிடைக்காது. நல்லது, நான் கூறினேன், “நீ என்ன செய்யவேண்டுமென்று நான் கூறுகிறேன். நீ சென்று உன்னுடைய அட்டைகளை நன்றாக குலுக்கி கலந்து வைத்துவிட்டு பின்பு அவர்களுக்கு ஒவ்வொன்றாக கொடு” என்றேன். நல்லது, அவர்கள் அதை பார்த்து, அது இருபதுக்குள்ளாக இல்லையென்றால், நல்லது, அவர்கள் அதை கீழே போட்டு விடுவா ர்கள்; அது அவர்களுக்கு வேண்டாம். 65. எனவே நான் கூறினேன், “நாம் என்ன செய்யலாம் என்று உனக்கு கூறுகிறேன். ஒரு சிறு பிள்ளையை நம்மிடம் அழைத்துவந்து எங்கி ருந்து தொடங்கவேண்டும் என்று எண்ண சொல்லுவோம். பின்பு அவர்கள் பிள்ளை எழுந்து நின்று எண்ணட்டும் 1,2,3,4,5 ...என்று”. அந்த பிள்ளை எங்கே முடிக்கிறதோ அங்கிருந்து நாம் தொடங்கு வோம். பார்ப்பதற்கு அது விசித்திரமானது. ஜனங்கள் தங்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு எந்த எண் கிடைத்ததோ அதிலிருந்து எண்ண ஆரம்பிக்கும்படி செய்தனர். எனவே அதுவும் செயல்படவி ல்லை ... ? ... ஆனால் அதுவும் அதேபோன்றுதான் இருந்தது... ஆகவே அதற்காக நான் ஜெபித்து கர்த்தரிடம் கேட்டேன். பின்பு நான் – நான் இன்னொரு காரியத்தையும் செய்தேன் – நான் கூட்டங்க ளுக்கு சென்று, ஒரு கூட்ட மனிதர்களை அழைத்து அவர்களிடம் எல்லா அட்டைகளையும் கொடுத்துவிடுவேன். போதுமான அட் டைகளை கொடுத்துவிடுவேன். ஆனால் அவர்கள் குறைகூற ஆரம்பித்தனர், “சகோதரன் பிரான்ஹாமின் கூட்டங்களுக்கு நீங்கள் முதல் நாளே வரவில்லையென்றால், பின்பு எப்பொழுதும் வந்து விடாதீர்கள்: எல்லா அட்டைகளும் கொடுக்கபட்டாயிற்று. அதில் அவர் பாதியை கூட முடிக்கவில்லை” என்றார்கள். அதுதான் அடுத்த பிரச்சனை. 66. பின்பு அன்றிலிருந்து, அதை செய்வதற்கென நாங்கள் கண்டறிந்த ஒரே வழி, ஒவ்வொரு நாளும் புதிய அட்டைகளை கொடுப்பதே. அது எல்லா நபர்களும் பீடத்தண்டை வரும்படி சந்தர்பத்தை அளித்தது. ஒரு முறை நீங்கள் அட்டை வாங்க தவறவிட்டால், உங்களுக்கு திரும்பவும் வாய்ப்பு கிடைக்கும். ஆகவே ஒரு நபர் வரும்போது, அந்த நபருக்கு அது முதல் நாளாய் இருக்கலாம், இரண்டாம் நாளாய் அல்லது ஒருவேளை அந்த நபர் வந்து பத்து நாள்கூட ஆகி இருக்கலாம் அல்லது ஏதேனும் அவசரமான பிரச்ச னையாகவும் இருக்கலாம், எல்லாருக்கும் சமமான உரிமையே அளிக்கப்படும். ஆனால் இப்பொழுது அவை எல்லாவற்றிலும் – அவர்கள் அட்டைகளை கொடுத்தபிறகு – எங்கிருந்து ஆரம்பிக்க போகிறது என்று அவர் களுக்கு தெரியாது. யாருக்குமே தெரியாது, தேவனுக்கு மட்டுமே தெரியும். நான் இந்த விதமாக மேடைக்கு வருவேன், வந்து என் மனதிற்கு எது வருகிறதோ அதை நான் கூறுவேன், “நல்லது, நாம் இங்கிருந்து தொடங்குவோம்” என்பேன். சில நேரங்களில் நான் இங்கொன்றுமாக அங்கொன்றுமாக, வேறெங்கா வது ஒன்று என்று தேர்ந்தெடுப்பேன். செய்ய வேண்டிய ஒரே காரி யம் ஆவியானது ஜனங்கள் மீது அசைவாடும்படி செய்வதே; அவை எப்படியாயினும் எல்லார் மீதும் அசைவாடும். பாருங்கள்? எனவே அது – நீங்கள் கவனியுங்கள். இங்கே மேடையில் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு பேர் சுகமாகும்போது, அங்கே இருபத்தை ந்து அல்லது முப்பது பேர் கூட்டங்களில் சுகமடைவார்கள். நீங்கள் ஜெப அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு தேவையான ஒரே ஒரு காரியம் அது கர்த்தராகிய இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதே. எப்படியாயினும் அதுதான் அதை செய்கிறது. பாருங்கள்? 67. இப்பொழுது, நாம் அப்படி செய்யும்போது, அது எல்லாருக்கும் சரி பங்காக இருக்கிறது, எல்லா நபருக்குமே சமமாயிருக்கிறது. ‘ஏனெனில் நாம் அந்த உண்மையான சகோதரர்களாய் இருக்க வேண்டும் – தேவனுக்கு முன்பாக நாம் எல்லாவற்றின் மீதும் நேர் மையாயிருக்க வேண்டும். நீ உன் சகோதரனிடம் நேர்மையாக இல்லாவிட்டால் தேவனிடமும் உன்னால் நேர்மையாக இருக்க முடியாது. அதுதான் காரியம். புரிகிறதா? நீங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் அப்படி செய்யும் போது தேவனிடமும் நீங்கள் நேர்மையாய் இருப்பீர்கள்: அவரை நீங்கள் எப்படி நடத்தவேண்டுமென விரும்புகிறீர்களோ அப்படியே உங் கள் சகோதரனையும் நடத்துங்கள். 68. இப்பொழுது, இன்றிரவு, நாம் ஒரு சில ஜனங்களை மேலே அழைப்போம். நாம் பார்க்கலாம் ... நாம் சரியாக எண் 50-ல் இருந்து ஆரம்பிக்கலாம். அது எப்படி இருக்கும் ? என்னிடம் இது இருக்கி றதா ... யாரிடமாவது ஜெப U-50 இருக்கிறதா? ஒருவேளை நான் மீதமானவர்களை அழைக்கவில்லை ... உங்களிடம் U-50 இருக்கி றதா? எல்லாம் சரி. யாரிடம் U-50 இருக்கிறது என்று தேடி பாருங்கள். உங்களுடைய ஜெப அட்டைகளை பார்த்து யாரிடம் U-50 இருக்கி றது என்று தேடி பாருங்கள். ஜன கூட்டத்தில் அது இருகிறதா? U-50, யாரவது பாருங்கள் – ஒருவேளை அது காது கேளாத வாய் பேசமுடி யாத நபரிடம் இருக்கலாம். ஒருவேளை ஏழுந்து நிற்க முடியாத யாரி டமாவது இருக்கலாம். U-50. இருக்கிறதா? ஒருவேளை நான் தவறான எண்ணை எடுத்துவிட்டேன் என்று நினைக்கிறன். தவறா னதை எடுத்துவிட்டேன் என்று நான் நினைக்கிறன். U-50, இங்கே U-50 இருக்கிறதா? அங்கே ஜன கூட்டத்தில், ஓ, இருக்கிறது. நல்லது, இங்கே வாருங்கள். பரவாயில்லை. இங்கே வாருங்கள் ... என்னை மன்னிக்கவும். அங்கே ஜனக்கூட்டத்தில், U-50, இங்கே சீக்கிரம் வாருங்கள். U-51, யாரிடம் U-51 இருக்கிறது? அது – அந்த பெண் இங்கே இருக்கிறாரா? இப்பொழுது, நாம் ... U-52, யாரிடம் U-52 இருக்கிறது, நீங்கள் ஏழுந்து நிற்கமுடியுமா? அல்லது 52, இங்கே ஜன க்கூட்டத்தில் எங்காவது இருக்கிறதா? U-52. எல்லாருமே உங்கள் பக்கத்தில் இருப்பவரின் அட்டையை பாருங்கள், ‘ஏனெனில் அது காது கேளாத நபரிடம் இருந்தால் அவரால் கேட்க முடியாது, பின்பு அவர் வரிசையில் தன்னுடைய இடத்தை இழந்துவிடுவார். U-52, இங்கே இருக்கிறதா? சரி, இரண்டு ... 69. சரி அடுத்து 53? பரவாயில்லை, அவர்கள் அங்கிருந்து வருகிறா ர்கள். சரி 53, யாரிடம் 53 இருக்கிறது? இங்கிருக்கும் இந்த சீமாட்டியி டம். 54, யாரிடம் U-54 இருக்கிறது, உங்கள் கரத்தை உயர்த்த முடியுமா? 54? 55, யாரிடம் U-55 இருக்கிறது? சரி, 56? 57? 58, யாரிடமாவது 58? அது சரி. 59, 59? யாரிடமாவது 59 இருக்கிறதா ? அங்கே ஜனக்கூட்டத்தில், அங்கே தூரத்தில், உங்களிடம் 59 இருக்கிறதா? உங்களிடம் 59 இருக்கிறது? நீங்கள் அதை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி. 60, யாரிடம் 60 உள்ளது ? சரி, 60, 61? உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள் ... 62, 62, யாரிடம் 62 உள்ளது, அது 62 – என்று குறிப்பிட பட்டுள்ளதா? 63, 63 இருக்கிறதா ... ? இங்கே கட்டிலில் அமர்ந்திருக்கும் இந்த சீமாட்டியை பாருங் கள். சீமாட்டியே, உங்களிடம் அட்டையிருக்கிறதா? உங்களிடம் ஜெப அட்டை இருக்கிறதா? உங்களிடம் இல்லையா. 63, 6—இங்கே கையில் கொம்பை வைத்திருக்கும் இந்த கண் தெரியாத சீமாட்டி, அவளிடம் ஜெப அட்டை இருக்கிறதா? யாரவது சென்று பாருங்கள்? 63, 63, 64? சரி. 65, 65? சரி, நீங்கள் சரியாக இங்கே வாருங்கள். எழுந்து நிற்க சிரமமாயிருக்கும் மனிதன் யாரேனும் இருந்தால், அந்த மனிதனுக்கு படுத்துக்கொள்ள ஒரு சிறிய மெத்தையை அல்லது எதையாவது கொடுங்கள். அம்மனிதனை அழைக்கும்வரை அல்லது யாரவது அவரை எப்படியாவது அழைத்து வரும்வரை. ஏனெனில் அம்மனிதன் மிகவும் பலவீனமாயிருக்கிறார். 70. சரி, பின்பு நாம் காத்திருப்போம், ஒரே நிமிடம், அந்த மனிதனு க்கு கொடுக்கும்வரை, அம்மனிதன் ... நல்லது, வேறு யாரையாவது அழைக்க நமக்கு நேரமிருக்கிறது, இன்னொரு குழுவை, அழைப்ப தற்கு. சரி, ஐயா. இப்பொழுது, நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப் போம், நல்ல கர்த்தர் நமக்கு உதவி செய்ய விரும்புகிறார். அவரு டைய நாமத்திற்கென அவருடைய ஆசிர்வாதங்கள், அவருடைய மகத்தான, அற்புதமான எஜமானின் ஆசிர்வாதங்கள் இங்கே இன்றி ரவு கூடியிருக்கும் இந்த கூட்டத்தின் மேல் வருவதாக. பையன்கள் தயாராகி கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்கு விருப்பமானால் ஒரு சிறிய ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோம். அன்பான நேச பிதாவே, உம்முடைய இரக்கங் களை இப்போதே எங்கள் மீது அனுப்பும், கர்த்தாவே, ஒரு அபிஷேக த்திலிருந்து, அதாவது பிரசங்கிக்கும் அபிஷேகத்திலிருந்து இதற்கு மாறுவது என்பது எவ்வளவு கடினமென்று நான் உணருகிறேன். இதுவரை, ஊழியமானது தரிசனங்களை பார்ப்பதின் ஊடாக வந்தது என்பதை உணருகிறேன். நான் ஜெபிக்கிறேன், அன்பான பரலோக பிதாவே, நாங்கள் தகுதியற்றவர்கள் என்பது எங்களுக்கு தெரியும், இங்கே எங்கள் மத்தியில் உம்முடைய பிரத்தியட்சமாகுதலை காண நாங்கள் தகுதியற்றவர்கள். பிதாவே, நாங்கள் தகுதியற்றவர்கள். எங்கள் தகுதியில்லா காரியங்களை நாங்கள் அறிக்கை செய்து, எங்கள் பிரதான ஆசாரியரும் எங்கள் மத்தியஸ்தருமாகிய உம்மை விசுவாசிக்கிறோம். எனவே நீர் தேவனுடைய தூதனை இன்றிரவு அனுப்பி, உம்முடைய ஒவ்வொரு ஊழியக்காரரையும் அபிஷேகி ப்பிரா? அவர்களுடைய இருதயங்கள் விசுவாசிக்கும்படி அபிஷேகி யும், பிதாவே. மேலும் இந்த ஜனக்கூட்டத்தில் தேவனுடைய மகிமை விளங்கும்படி, உம்முடைய ஊழியகாரனின் கண்களை அபி ஷேகியும், கர்த்தாவே, நீர் கூறினதை காணவும், உரைக்கவும் அல்லது அவர்களிடம் நீர் என்ன கூருகிறீரோ அதை பேசவும் அபிஷேகியும். இப்பொழுதும், கர்த்தாவே, என்னுடைய பேதமையான வழியி லும் என்னுடைய இருதய தாழ்மையிலும், என்னால் முடிந்த அளவி ற்கு சிறந்த முறையில் அவர்களுக்கு சுவிவேஷத்தை பிரசங்கித்தேன். பிதாவே, அதை நீர் இன்றிரவு கனப்படுத்துவீரா? இந்த வியாதியில் இருக்கும் ஜனங்கள் அறிந்துக்கொள்ளும்படி, நான் அவர்களிடம் கூறியதை, அதாவது நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, உம்மு டைய மரணத்தின்போது அவர்களை சுகமாக்கினீர் என்பதை அவர் கள் அறிந்துகொள்ளும்படி நீர் இதை செய்வீரா? பிதாவே, அவர்கள் அதை பெற்றுகொள்ளட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கி றோம். ஆமென். 71.இப்பொழுது, ஜனங்களே, உங்கள் அனைவரிடமும் நான் ஒன்றை கேட்கப்போகிறேன். சற்று காலதாமதமாகிவிட்டது என்பதை அறி வேன், இந்த மைதானத்தின் பராமரிப்பாளர்களுக்கு, என் சகோதரர்க ளுக்கு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்களை நான் அறி யேன், நம்முடைய கூட்டத்தை அனுமதித்த இந்த நகரத்திற்கும், பல நன்றான ஜனங்கள்... இன்றிரவு, என்னுடைய பிரசங்கத்தில் நான் ஏதோவொன்றை கூறியிருக்கலாம் – நான் ஒரு முழு பிரசங்கியல்ல, நான் கூடுதலாக வைக்கபட்டிருக்கும் உதிரி டயர் (spare tire). சகோத ரன் மூரும் மற்றவர்களும் இல்லாத நேரத்தில் அவர்களுக்கு பதிலாக இடத்தை நிரப்பக் கூடியவன். நான் அடிப்படையை குறித்து பேசும்போது ஜனங்களின் உணர்வுகளை காயப்படுத்தும் எண்ணத் துடன் நான் பேசவில்லை. பாருங்கள்? நீங்கள் அடிப்படையையும், அதனோடு கூட சேர்ந்த ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும். பாரு ங்கள்? உங்களுடைய உணர்வுகளை காயப்படுத்த நான் எண்ண வில்லை. நான் அதை செய்யமாட்டேன், ஏனெனில் நீங்கள் என் சகோதரர், நான் உங்களை நேசிக்கிறேன். தேவன் அறிவார் (நான் பொய் கூறுகிறேனா இல்லையா என்று). இங்கே நான் பிசாசுகளை அணுகுகிறேன். நீங்கள் அதை உணருகிறீர்களா. எந்த விதத்திலும் பிசாசுகளுக்கான எதிர்ப்பு சக்தி என்னிடம் இல்லை. இரத்தம் மட்டுமே என்னை பாதுகாக்கும். பாருங்கள்? இன்றிரவு தேவன் தம்முடைய மகிமைக்காக அந்த ஆசிர்வாதங்களை தரவேண்டி நான் ஜெபிக்கிறேன். 72. இப்பொழுது, இங்கே முதன் முறை வந்தவர்கள் யார், உங்களு டைய கரங்களை நான் காணட்டும். கூட்டங்களில் முதன் முறை வந்தி ருக்கிறீர்களா? என்னே, அவர்களை பாருங்கள். முதன் முறை வந்தவர்களே, உங்கள் வருகையால் நாங்கள் மகிழ்ச்சி அடை கிறோம். அது மிகவும் கடினம். இந்தவிதமாக நாம் கலந்திருக்கும் போது உங்களுக்கு ஒரு நன்றான பொதுவான கூட்டங்கள் கிடைக் காது. ஆனால் ஒரு நிமிடம், என்னோடு சிறிது நேரம் ஒத்து போவீர் கள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒரே நிமிடம், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இன்றிரவு இங்கே நின்றிரு க்கிறார் என்றால், அதாவது காணக்கூடிய சரீரத்தில் நின்றிருக்கிறார் என்றால் அவர் என்ன செய்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர் பூமியில் இருந்தபோது எதை செய்தாரோ அதையே மீண்டும் செய்வார். அது சரிதானே? வேதாகமம் கூறுகிறது, “அவர் மாறாதவர்” என்று. அது சரிதானே? (மல்கியா-3:6) இப்பொழுது, அதுதான் சத்தியம் என்பதை நாம் அறிவோம். நல்லது, நம்மால் அதை மறுதலிக்க முடியாது, ஏனெனில் வேதாகமம் அவ்வாரே கூறுகிறது. இப்பொழுது, இயேசு, இங்கே பூமியிலிருந்த போது, அவர் என்ன செய்தார் என்று நாம் காண்கிறோம். இப்பொழுது, புதிதாக வந்தவர்களுக்கு இதை கூறுகி றேன். அவர் ஒரு சுகமளிப்பவராக வரவில்லை. அவர், தான் ஒரு சுகமளிப்பவர் அல்ல என்று கூறினார். அது சரிதானே? “என்னால் தானாகவே எதையும் செய்யமுடியாது. இந்த கிரியைகளை செய்வது நானல்ல; என்னில் வாசமாயிருக்கும் என் பிதாவே இந்த கிரியைக ளை செய்கிறார்” என்றார். அது சரிதானே ? எனவே இயேசு எதை யுமே செய்யவில்லை. 73. தன்னிடமாக வந்த எல்லா வியாதியஸ்தர்களையும் இயேசு சுகப் படுத்தினாரா? அதிலிருந்து அது பத்து லட்சம் மைல் தூரம். அப் போஸ்தலர்கள் எல்லாரையும் சுகபடுத்தினார்களா? இல்லை, ஐயா. அவர்கள் யாரையுமே சுகப்படுத்தவே இல்லை. அவர்கள் மூலமாய் தேவன் எல்லாரையும் சுகப்படுதவில்லை. இயேசு பெதஸ்தா குளத் தினூடாக செல்வதை பாருங்கள். இங்கே இன்றிரவு இருப்பவர் களை காட்டிலும் அங்கே மிக அதிகமான திரளான ஜனக்கூட்டம் அதாவது முடமானவர்கள், படுத்த படுக்கையாய் இருந்தவர்கள், குரு டர்கள், சூம்பினவர்கள் என எல்லாருமே அந்த குளம் கலக்கப்பட காத்திருந்தனர். இயேசு சரியாக அதிநூடாக நடந்து சென்றார், அந்த ஒரு கூட்ட ஜனங்களினூடாக நகர்ந்து சென்றார், அவர்களில் ஒருவ ரையும் அவர் சுகப்படுத்தாமலே நகர்ந்து சென்றார். அவர்கள் அனை வரையும் கடந்து படுக்கையில் படுத்திருந்த ஒரு மனிதனிடம் சென் றார். அந்த மனிதன் அந்த நிலையில் இருந்தான் என்பதை அவர் அறி ந்திருந்தார். அவனை சுகபடுத்திவிட்டு, வெளியே சென்று விட்டார். (யோவான்-5:2-9) யூதர்கள் அவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இன்றிரவு, மேக்கனில் அவர் படுக்கையிலிருக்கும் ஒரு மனிதனை மட்டும் சுகப டுத்திவிட்டு, இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேரை அப்படியே முடமாகவும், குருடாகவும், படுத்த படுக்கையிலும் விட்டுவிட்டு தேவனுடைய குமாரன், இரக்கம் மிக்க தேவன் என்று கூறினால், அவர் கேள்வி கேட்கப்படுவாரா? நிச்சயமாக அவரிடம் கேள்வி கேட்கப்படும். இரக்கம் நிறைந்தவராய் இருந்து, குருடாகவும், முடமாகவும், படுத்த படுக்கையாய், சூம்பினவர்களாய், கை கால் பின்னினவர்கலாய் படுத்திருக்கும் ஜனக்கூட்டத்தினூடாக நகர்ந்து, அவர்களை சுகப்படுத்தாமல் கடந்து சென்றால், நிச்சயமாக அவர் கேள்வி கேட்கப்படுவார். ஆனால் அவர் அப்போது என்ன கூறினார்? அவர் அந்த யூதர்களிடமாக திரும்பி “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய் செய்யமாட்டார்: அவர் எவைகளை செய்கிறாரோ, அவைகளை குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.” (யோவான் 5:19) என்றார். 74. இப்பொழுது, அவர் “நான் செய்தவைகளை நீங்களும் செய்வீ ர்கள், அதை காட்டிலும் அதிகமாக, ஏனெனில் நான் பிதாவினிடம் செல்கிறேன்” என்றார். அது சரிதானே? இப்பொழுது, இன்றிரவு இயேசு இங்கே இருப்பாரானால் அதையே செய்வார். அவரால் முடியும் ... இப்பொழுது, சுகமளித் தலை பொறுத்தவரை, அவர் கல்வாரியில் அதற்கான விலை கிரயத்தை செலுத்திவிட்டார். உங்களுக்கென தேவனால் செய்ய முடி ந்தது என்னவெனில், ஒவ்வொரு நபரும் ஏற்கனவே சுகமாகிவிட்ட னர். நீங்கள் சுவிசேஷத்தை மட்டும் பிரசங்கிப்பீர்களானால், அல்லது ஏதோ அடையாளம் அல்லது அற்புதம் ஏற்கனவே செய்யப்பட்டிருந் தால், அதை ஏற்றுக்கொள்வது உங்களிடம்தான் இருக்கிறது. உங்களு க்கு புரிகிறதா? அதை ஏற்றுக்கொள்வது உங்களை பொருத்தது. பின்பு, தேவன் கீழே இறங்கி வந்து அதை வார்த்தையில் பிரசங்கிக்கு ம்போது நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லையெ ன்றால், நானோ அல்லது நீங்களோ அவ்வாறு பிரசங்கித்து ஜனங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், நாம் “அவர்களை தனியே விட்டுவிடுங்கள்” என்று கூறுவோம். ஆனால் தேவன் அப்படி கூறமாட்டார். அவர் அதை விரும்புவதில்லை, இல்லை. அவர் கீழே வந்து, அவர் வார்த்தையை அனுப்பிய பிறகு, அவர் அடையா ளங்களையும், அற்புதங்களையும், தீர்க்கதரிசிகளையும், தீர்க்கதரி சனங்களையும் மற்ற எல்லாவற்றையும் அனுப்புகிறார். ஏனெனில் ஜனங்களை தம்மிடமாக சேர்த்துக்கொள்ள. அது சரிதானே? இப்பொழுது, இன்றிரவு அவர் இங்கே வந்து, அதே காரியங்களை சபையில், இந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் செய்வாரானால், அதா வது அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே காரியத்தை திரும்ப வும் செய்வாரானால், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களா, அதை நீங்கள் இந்த இடத்திலேயே ஏற்றுகொள்வீர்களா? 75. சரி, உங்களுடைய ? சரி அந்த சீமாட்டியை இங்கே அழைத்து வாருங்கள். இப்பொழுது, பொறியாளர் இந்த ஒளிக்கருவியை பார்ப் பாரானால் ... பாருங்கள், என்னுடைய சத்தம், ‘ஏனெனில் சில நேரங் களில் எனக்கு தெரியாது, என்னுடைய சத்தம் எவ்வளவு அதிகமாக அல்லது எப்படி கேட்கிறது என்று எனக்கு தெரியாது, நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் கருதுகிறேன். அதை அதற்கேற்றார் போல் சரி ப்படுத்துங்கள். இப்பொழுது, இங்கே ஒரு சீமாட்டி நிற்கிறாள். என்னண்டையில் நிற்கிறாள். நான் சற்றே ... நான் ஒரு மனிதன், இவள் ஒரு பெண். இந்த சீமாட்டியை என் ஜீவியத்தில் ஒருபோதும் நான் கண்டதே இல்லை. அதேபோன்று – ஒருவேளை, என்னை அவர்கள் ஜீவியத் தில் கண்டிருக்கமாட்டார்கள். ஒருவேளை கூட்டத்தில் எங்காவது அமர்ந்து பார்த்திருக்கலாம். எனவே எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் அந்நியராய் இருக்கிறோம், அது சரிதானே சீமாட்டியே? நாம் அந்நியர்கள், ஆம். ஒருவேளை பல மைல்கள் வித்தியாசத்தில் நாம் பிறந்திருக்கலாம், பல மைல்கள் பல வருட கால இடைவேளையில் பிறந்திருக்கலாம். ஆனால் இங்கே இன்றிரவு, நாம் முதன்முறை சந்திக்கிறோம். இப்பொழுது, இந்த பெண்ணிடம் இயேசு என்ன செய்திருப்பார் ... இந்த பெண் எதற்காக இங்கே இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது. தேவனுக்கு தெரியும் ஆனால் எனக்கு தெரியாது. இயேசு இங்கே இருந்தால், அவர் என்ன செய்திருப்பார் மேலும் இந்த பெண்ணிடம் அவர் என்ன கூறியிருப்பார்? அவருடைய குணாலக் க்ஷனம் எப்படியிருந்திருக்கும்? இப்பொழுது, அந்த பெண் இங்கே இருக்கலாம். அவளுக்கு உள்ளான பிரச்சனை ஏதும் இருக்கலாம். அவளுக்கு பண பிரச்சனை இருக்கலாம். அவள் வியாதியாய் இருக்க லாம். தேவனை தேடிக்கொண்டும் இருக்கலாம். எங்கே எது நடந்தது என்று அவள் தெரிந்துக்கொள்ள விரும்பலாம் அல்லது ஏதோவொ ன்று அல்லது அதை பற்றி – எனக்கு தெரியாது. என்னால் உங்களிடம் கூற முடியாது. ஆனால் அவருக்கு தெரியும். 76. இப்பொழுது, சுகமளித்தலுக்காக தேவனால் செய்ய முடிந்த ஒரே காரியம். நல்லது, அவர் “உனக்காக நான் கல்வாரியில் மரித்தபோதே அதே செய்துவிட்டேன்” என்பார். அது சரிதானா, மத குருக்களே, ஊழியக்காரர்களே? அவர் ... அங்கேதானே அவர் எப்பொழுதும் நடந்த எல்லா சுகமளித்தலையும் செய்தார் – செய்யமுடிந்த எல்லா சுகமளித்தலையும் அங்கே செய்தார், அது சரிதானே. விலைகிரயமா னது செலுத்தப்பட்டாயிற்று. ஜனங்கள் அதை விசுவாசிப்பதற்கு இப் பொழுது நாம் ஏதோவொன்றை செய்யவேண்டியிருக்கிறது. நீங்கள் ... அங்கே விளிம்பில் நிற்ப்பவர்கள் உங்கள் எல்லாருக்கும் புரிகி றதா? புரிந்தால், உங் கள் கரங்களை உயர்த்துங்கள், உங்களுக்கு புரிந் தால்? அது ஜனங்களை புரிந்துகொள்ளும்படி செய்யக்கூடியதான ஒன்று, (நன்றி) அதாவது அவர், அதாவது அவர் இங்கே இருக்கிறார். அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது. வார்த்தையை பிரசங்கி ப்பதால் மட்டும், ஏதோ வரத்தினால் அல்லது ஏதோவொன்றினால் அல்லது மற்றது .... 77. இப்பொழுது, அவர் இங்கே நின்றிருந்தால், பிதா அவருக்கு காண் பித்திருந்தால், அவருக்கு இந்த பெண்ணை பற்றி தெரிந்திருக்கும். இப்பொழுது, அவர் என்ன செய்வார்? இப்பொழுது, நான் கற்பனை செய்து பார்கிறேன், சமாரியாவில், அந்த சமாரிய ஸ்திரீயிடம் என்ன செய்தாரோ அதையே செய்வார். அவர் சென்று கிணற்றினண்டை யில் அமர்ந்தார். அவள் அவரிடம் வந்து, அங்கே வந்து, குவளையில் தண்ணீர் நிரப்ப தொடங்கினாள். அவர் “எனக்கு தண்ணீர் கொடு” என்றார். ஏன் என்று ஆச்சரியமா? அவள் “ஏன், யூதர்களாகிய உங்களுக்கு சமாரியர்களிடம் அப்படி கேட்பது வழக்கமில்லையே” என்றாள். அவர் “ஆனால் நீ யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்தால், நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய்.” என்றார். பாருங் கள்? நான் தண்ணீர் கொடுத்தால் நீ திரும்பவும் இங்கே வந்து தண் ணீர் எடுக்க தேவையில்லை” என்றார். அவள் தொடர்ந்து உரையாடி கொண்டே இருந்தாள். இப்பொழுது, என்னுடைய நேர்மையான கருத்து என்னவென் றால், அங்கே அவர் என்ன செய்துக்கொண்டிருந்தார் என்றால்: அவ ளுடைய ஆவியோடு தொடர்பு கொண்டிருந்தார் (பாருங்கள்?), அவளிடம் இருப்பது என்னவிதமான ஆவி என்று கண்டறிந்து கொண்டிருந்தார். ஆகவே, அவர் அவளோடு பேசினார், அவளு டைய பிரச்சனை எங்கே இருக்கிறது என்று கண்டுக்கொள்ளும் வரை அவர் அவளோடு பேசினார். பின்பு, அவர் பிரச்சனையை கண்டறிந்த பின்னர், அது என்னவென்று அவளிடம் அவர் கூறினார். அவர் “உன் புருஷனை அழைத்து வா” என்றார். அவள் “எனக்கு புருஷன் இல்லை” என்றாள். அவர் “உனக்கு ஐந்து” என்றார். ஏன், அவள் “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். இப்பொ ழுது, நான் அறிவேன்: மேசியா வரும்போது, மேசியா வரும்போது இவைகளை செய்வார் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீர் ஒரு தீர்க்கதரிசியாக தான் இருக்க வேண்டும்” என்றாள். அவர் “உன்னுடன் பேசிகொண்டிருக்கிற நானே அவர்” என்றார். அது சரிதானே? “பேசிகொண்டிருக்கிற நானே அவர்”. (யோவான் – 4:8-25) 78. இப்பொழுது, அங்கே எது அடையாளமாயிருந்தது? அவளிடம் என்ன பிரச்சனை இருக்கிறது என்றும், அவளின் பிரச்சனை எங்கே இருந்தது என்றும் கூறுவதுமே அடையாளமாயிருந்தது. அதுதான் மேசியாவின் அடையாளமாயிருந்தது. இன்றைக்கு இருக்கும் நன்கு படித்தவர்களிடமும், படித்த பிரசங்கிகளிடமும் அது என்னவாய் கருதப்படுகிறது? மனதை படிப்பதென்றும், குறி சொல்கிறதென் றும், பெயெல்செபூல் என்றுமே கருதப்படுகிறது. அந்நாளிலும் தெரு க்களில் அவ்வகுப்பு ஜனங்களால் அவ்வாறே கருதப்பட்டது. அவர் கள் சுற்றி பார்த்து “நல்லது, நாம் – அவர்களுடைய நினைவுகளை அவர் அறிந்திருக்கிறார் என்று எங்களால் மறுதலிக்க முடியாது” என்றனர். இயேசு – அவர் ஜனங்களின் மனதை படித்தாரா? ஜாக்கிரதயாயிரு ங்கள். ஆம். நினைவுகளை பகுத்தறிவதற்கும், மனதை படிப்பதற்கு மான வித்தியாசத்தை நீங்கள் என்னிடம் கூறினால், நீங்கள் அதை இங்கே மேடையில் வைக்க விரும்புகிறேன். வைத்துவிட்டு நினைவுகளை பகுத்தறிவதற்கும் அல்லது மனதை படிப்பதற்குமான வித்தியா சத்தை என்னிடம் கூறுங்கள். இப்பொழுது பிசாசு செய்வதுபோன்று அல்ல, இந்த சில பிசாசின் வித்தைகளை போன்று ... கை ஜோசியம் பார்த்துவிட்டு மற்ற எல்லாவற்றையும் யூகிப்பது போன்று, அது போன்று, அது பிசாசு. பிசாசிடம் இருக்கும் எல் லாமே, அவன் தேவனிடமிருந்து காப்பி அடித்தான். 79. ஆனால் தேவன், தன்னுடைய தீர்க்கதரிசிகளிலும், தன்னுடைய ஞானதிருஷ்டிகாரர்களிலும் இருக்கிறார். இந்த காரியங்கள் தேவ னால் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும் என்பதை அறிவர். அவர் பல காரியங்களை தம்முடைய ஊழியக்காரர்களுக்கு வெளி ப்படுத்துகிறதில்லை. கல்லின் மீது அமர்ந்திருந்த வயதான யாக்கோ பை பாருங்கள். அங்கே அமர்ந்திருந்தபோது, அவனுடைய பிள்ளை யின் மேல்சட்டை அவனிடம் எடுத்துவரப் பட்டது ... அவன் ஒரு தீர் க்கதரிசி என்பதை நீங்கள் அறிவீர்கள். அவனுடைய மேல் சட்டை யை எடுத்து வந்து “உம்முடைய குமாரனை மிருகம் கொன்று போட் டது” என்றனர். அது பொய். அதற்கான வித்தியாசம் அவனுக்கு நாற் பது ஆண்டுகளாக தெரியவேயில்லை. (ஆதியாகமம் -37:31-35) ஈசாக்கை பாருங்கள், முழுவதுமாக பார்வையில்லாமல் அங்கே அமர்ந்திருந்தான், இதோ யாக்கோபு வந்து “நான் ஏசா” என்றான். அவன் ஏசா என்பதால், அவனை அவன் ஆசீர்வதித்தான். – அவன் ஒரு தீர்க்கதரிசி ... (ஆதியாகமம்-27:18-22) இங்கே – இந்த எலியாவை பாருங்கள், அங்கே அமர்ந்திருந்த போது – சூனேமியாள் வந்து அவன் பாதத்தில் விழுந்தாள். அவன் “தேவனால் அவள் இருதயம் வியாகுலபட்டிருக்கிறது ஆனால் தேவன் அதை என்னிடம் கூறவில்லை” என்றான். அவர்களுக்கு எல்லா காரியங்களுமே தெரியாது. தேவன் அவர்களுக்கு என்ன அறிவிக்கிறாரோ அது மட்டுமே அவர்களுக்கு தெரியும். அவர்கள் தவறே செய்ய முடியாத ஜனங்கள் அல்ல. (2 இராஜா-4:27) “எலியா நம்மை போன்று பாடுள்ள மனிதன்” என்று வேதாகமம் கூறுகிறது. அவனுடைய ஏற்ற இரக்கங்கள், வேறுபாடுகள். 80. இப்பொழுது, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என் றால், இன்றிரவு அவர் அபிஷேகம் செய்கிறார் – அதற்காக நான் உறுதியுடன் போராடுகிறேன், அதாவது அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததால், அவர் பூமியில் எப்படி இருந்தாரோ அப்படியே இங்கே வந்து பிரத்தியட்சம் ஆவார் என்று. பின்பு அவ்வேளையிலி ருந்து அது உங்களை பொருத்தது, அதை விசுவாசிப்பது உங்களை பொருத்தது. இந்த பெண்ணிற்கு நானும், எனக்கு இந்த பெண்ணும் முற்றிலு மாக அந்நியர்களாயிருக்க, ஏதோவொன்று இங்கே வந்து என்னை அபிஷேகித்து, இவள் என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாள் அல்லது எதுவாயிருந்தாலும் அதை எனக்கு தெரியப்படுத்தினால், பின்பு அது உங்களை பொருத்தது. அது இயற்கைக்கு மேற்பட்ட வல்லமையிலிருந்து வர வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்பு அதை நீங்கள் என்னவாக விசுவாசிக்கிறீர்கள் என்பது உங் களை பொருத்தது. அது என்ன – உங்களிடம் என்ன இருக்கிறது – எவ்வாறு அதை நீங்கள் அணுகுகிறீர்கள், என்பதுதான் நீங்கள் எதை பெற்றுக் கொள்ள போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும். அது சரி. 81. அவரை பெயெல்செபூல் என்று நினைத்தவர்கள், அவருடைய வாயினில் அவரை அடித்தனர், எந்தவித வல்லமையையும் அவர்கள் உணரவில்லை. ஆனால் அவருடைய வஸ்த்திரத்தின் ஓரத்தை தொட்ட ஸ்திரீ, சுகமானதினால் ஓடிபோனாள். (மாற்கு-5:27:34) அது உங்களுடைய அணுகுமுறையை பொருத்தது, அது சரி. எந்த விதத்தில் நீங்கள் அதை அணுகுகிறீர்கள். இப்பொழுது, கர்த்தராகிய இயேசு தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் ஏதோவொன்றிற்காக காத்திரு க்கிறீர்கள்” என்று நீங்கள் கூறலாம். உண்மையாகவே நீங்கள் கூறு வது சரிதான். நிச்சயமாக, இந்த அபிஷேகம் வரும்வரை நான் காத்தி ருக்கிறேன், ஆனால் அவர் இங்கே இருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், தேவனுடைய மகிமைக்காக எல்லா ஆவிகளையும் என்னுடைய கட்டுப்பாட்டிற்க்குள் எடுத்து கொள் கிறேன். இப்பொழுது, பயபக்தியாய் இருங்கள், அப்படியே அமர்ந்திரு ங்கள், ஏனெனில் இன்றிரவு இந்த கூட்டத்தில் தவறான பொல்லாத ஆவிகள் இருக்கிறது. பாருங்கள்? எனவே அப்படியே அமர்ந்திரு ங்கள், ‘ஏனெனில் உங்களுக்கு நினைவிருக்கிறதா, அவைகள் ஒரு வரை விட்டு வெளியேறும்போது, அவை சரியாக இன்னொருவருக் குள் சென்றுவிட கூடும். எனவே இப்பொழுது, , இந்த பெண்ணின் பிரச்சனை என்னவென்று அறிவதற்கும், எதற்காக இந்த பெண் இங்கே இருக்கிறாள் என்று அறிவதற்கும், நான் இந்த பெண்ணுடன் சிறிது நேரம் பேச போகிறேன். எனவே நான் பேசும்போது பயபக்தி யாகவும் அமைதியாகவும் இருங்கள். இப்பொழுது, சகோதரியே, உங்களை எனக்கு தெரியாது, நான் உங்களிடம் தனிப்பட்ட நபராக திரும்புகிறேன். ஜனக் கூட்டத்துடன் பேசியபிறகு, உங்களிடம் நான் தனிப்பட்ட நபராக திரும்புகிறேன். நம்முடைய எஜமானன் கிணற்றண்டையில் இருந்த பெண்ணிடம் செய்தது போன்று உங்களிடம் நான் பேசுவதற்கென திரும்புகிறேன். அதே காட்சி மறுபடியும், ஒரு மனிதனும், ஒரு பெண்ணும் (பாருங்கள்?) அதே விதாமாக. 82. இப்பொழுது, நீங்கள் என் அம்மாவை முழுவதுமாக நினைவு படுத்துகிறீர்கள். அந்த லியோவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர் கள்? சரியாக – என்னுடைய – என் தாயாரை போன்று, என் தாயை போன்ற தோற்றத்தில் இருக்கும், ஒரு சிறிய அயர்லாந்து பெண். எனக்காக அவள் ஜெபித்துக்கொண்டிருக்க கூடும், ஏனெனில் இந்த நேரங்களில் நான் கூட்டங்களுக்கு செல்வேன் என்று அவளுக்கு தெரியும். அவள் எனக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். நான் ஒரு விதமான வஞ்சகனாயிருந்தால், யாரோ ஒருவரை வஞ் சித்து, போலியாக நடித்து, கர்த்தராகிய இயேசுவைவிட்டு விலகுகிற வனாய், ஒரு இருதயமற்ற கொடூரமானவனாயிருப்பேன், அதை நான் செய்யமாட்டேன், சீமாட்டியே. நான் அப்படி இருப்பேன் என்று நீங்கள் நம்பவேண்டாம், அதாவது ... [சீமாட்டி, “நீர் தேவனு டைய மனுஷன்” என்கிறாள் – ஆசி] நன்றி, என் சகோதரி. நன்றி. நீங்கள் அவ்வாறு கூறினதால், நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர் களோ, அதை நிச்சயமாக தேவன் கனபடுத்துவார். 83. இப்பொழுது, நீங்கள் என்னை உங்களுடைய சகோதரனாக பாருங்கள், அது என்னெவென்று அறிந்து – அதாவது நான் உங்களு டைய சகோதரன். “தேவனுடைய மனிதனாய் இருக்கிறேன்” என்று நீங்கள் கூறியதற்கு நன்றி. நீங்கள் அப்படி கூறியதற்கு நான் தகுதியற் றவன், ஆனால் நீங்கள் அப்படி கூறியதற்கு தேவன் உங்களை கனப்படுத்துவார், ‘ஏனெனில் அவரே அந்த வாக்கியங்களை ஏற்படு த்தினார். இப்பொழுது, உங்களை எனக்கு தெரியாது ... கர்த்தராகிய இயேசு, அவருடைய பரிசுத்த பிரசன்னம், அதில்தான் நாம் இப்பொ ழுது இருக்கிறோம், உங்களுக்கு இங்கே என்ன வேண்டுமென்றும், எதற்காக நீங்கள் மேடைக்கு வந்தீர்களென்றும் என்னிடம் கூறுமா னால், நல்லது பின்பு, அவர் – உங்களுக்கு அது உண்மையா பொய்யா என்று தெரி யும். அப்போது நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பி, “ஆம், அது தேவனிடத்திலிருந்து வருகிறது என்று நான் விசுவாசிக்கி றேன், ஏனெனில் அங்கே நிற்கும் அந்த சிறிய மனிதனுக்கு என்னை பற்றி ஒன்றுமே தெரியாது’ என்பீர்கள். எனவே இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, உங்கள் முழு இருதயத்தோடும், நான் உங்களுக் காக பார்க்க ஆரம்பிக்கும்போது, உங்களுக்காக என்ன பார்க்கமுடியு மென்று பார்க்கிறேன்—அவர் என்னிடம் ஏதேனும் கூறுவாரா என்று பார்க்கிறேன். அவர் எதுவும் சொல்லாமலும் போகலாம். ஒரு வேளை சொல்லவும் கூடும். அவர் கூறுவாரானால், நான் அவருக்கு மிகவும் நன்றி கூறுவேன். 84. ஆனால் நான் இப்பொழுது பார்க்கிறேன், அருகில் நிற்கும் இந்த பெண், இந்த பெண்ணிடம் ஒரு சோகமான வேடிக்கையான ஆவி இருக்கிறது. கவலை மற்றும் பயப்படும் ஆவி அது. இந்த பெண் முழுவதுமாக பதட்டமாகவும், மன அமைதி இல்லாமலும் இருக்கி றாள். இவள் நரம்பு தளர்ச்சி நிலையை குறித்து மிகவும் கவலைப்ப டுகிறாள். மேலும் இவள்... அது இவளின் உடல் நிலையை சார்ந்த, அதாவது இவளின் உடல் நிலையை குறித்து கவலைகொள்கிறாள், ஏனெனில் இவள் ஒரு பரிசோதனைக்கு செல்லலாம் என்றும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள், ஒரு கூடத்தில், ஒருவிதமான மருத்துவம் சார்ந்த கூடத்தில், புற்றுநோய் மருத்துவமனையில். உங்களுடைய புற்று நோயை பற்றி நீங்கள் கவலை படுகிறீர்கள். இங்கே வருவதற்கு முன்பு நீங்கள் ஜெபித்தீர்கள். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு வெளிபடுத்தப்பட்டது, அதாவது நீங்கள் இங்கே வந்து, நான் உங்களுக்காக ஜெபித்தால், அவர்கள் உங்களிடம் புற்று நோயை கண்டறியமாட்டார்கள் என்று. நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், நீங்கள் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் அல்ல. நீங்கள் புளோரிடாவிலிருந்து வருகிறீர்கள், அது உண்மைதானே? உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை நீங்கள் பெற்றுகொள்ள போகிறீர்கள். இப்போதே அது உங்களிடம் இருக்கி றது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை பெற்றுகொள்வீர்க ளாக, இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக சகோதரியே. களிகூர்ந்து, மகிழ்ச் சியோடு செல்லுங்கள். வேண்டுமானால் இந்த வழியாக செல்லுங்கள். சகோதரன் வுட் வந்து அழைத்து செல்லுங்கள் ... நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறவர்களுக்கு யாவும் கைக்கூடும். ஓ, நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமென நான் ஆசை ப்படுகிறேன், சரியாக இப்போதே, அது எப்படி இருக்குமென்று, அது எப்படி இருக்குமென்று, இங்கே கர்த்தராகிய இயேசுவின் பிரச ன்னத்தில் இருப்பது எப்படி இருக்குமென்று. ஐந்து நிமிடத்திற்கு முன்பு நான் ஜன கூட்டத்தை பார்த்ததற்க்கும் இப்பொழுது பார்பதற் கும் என்னே ஒரு வித்தியாசம். நான் ஏதோ சும்மா சொல்லுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது உங்களையும் தேவனை யும் சார்ந்தது. கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னம் சரியாக இப்பொ ழுது இங்கே இருக்கிறது. 85. இப்பொழுது, ஒரு பொல்லாத ஆவி ஜனக்கூட்டத்தில் அசைவா டிக்கொண்டிருக்கிறது. இங்கே அமர்ந்திருக்கும், இங்கே நின்றுகொ ண்டிருக்கும் இந்த பெண்ணிடம் வருகிறது. இப்பொழுது, ஒரே நிமிடம், அது உதவிக்காக கதறகூடிய ஆவியாயிருக்கிறது. இங்கே நின்றிருக்கும் இந்த பெண் ... இங்கே நாற்காலியின் மேல் கால் வைத்து அமர்ந்திருக்கும் இந்த பெண். இப்பொழுது, நீங்கள் இருவரும், இந்தவிதத்தில் இதை ஒரு நிமிடம் பாருங்கள், இந்த இருண்ட கோடு உங்கள் இருவருக்குமிடையே இருக்கிறது. இங்கிரு க்கும் இந்த பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தொண்டையில் அறுவை சிகிச்சை பெற்றிருக்கிறாள். அங்கே அமர்ந்திருக்கும் அந்த பெண்ணிற்கும் புற்றுநோய் இருக்கிறது. அந்த பெண்ணிடம் அவ ளின் காலில் ஏதோ தவறுள்ளது, மேலும் அவளுக்கு மார்பக புற்று நோயிருக்கிறது. தேவன் ஒருவரால் மட்டுமே உங்கள் இருவரில் யாரோ ஒருவருக்கு சுகமளிக்க முடியும். இப்பொழுது, உங்களுக்கு, அந்த ஆவிகள் ஒருவரிலிருந்து ஒருவ ருக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் என் அருகாமையில் இருப்பதால், உங்களிடம் நான் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன். இப்பொழுது, அது இன்னமுமாக இரண்டு பேருக் கும் இடையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது, விசு வாசமாயிருங்கள், இருவருமே, ஏனெனில் நீங்கள் இப்பொழுது சரியாக தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் பதட்டமாகவும் இருக்கிறீர்கள். உங்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. என்னால் பார்க்க முடிகிறது அவர்கள் – உங்கள் தொண்டையில் இந்த இடத்திலிருந்து நீங்கள் பேசுகிறீர்கள், அதாவது அறுவை சிகிச்சைக்காக அவர்கள் எங்கே கிழிதார்களோ அங்கிருந்து உங்கள் சத்தம் வருகிறது. நீங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல. நீங்கள் இங்கே கீழே இருந்து வந்திருக்கிறீர்கள், புளோரிடா என்னும் இடத்திலிருந்து. உங்களுடைய பெயர் திருமதி. இ.எம். ராபின்சன், நீங்கள் மெல்ரோஸ், புளோரிடாவிலிருந்து வருகி றீர்கள். நீங்கள் சுகமடையும்படி நான் உங்கள் மீது கைகளை வைக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள். சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய குமாரன் கர்த்த ராகிய இயேசுவின் நாமத்தினால் ... சாத்தானே உன்னை நான் கடிந்து கொள்கிறேன், இந்த ஜனங்களிடமிருந்து வெளியே வா. அவர்கள் சென்று இயேசுவின் நாமத்தில் சுகமடையட்டும். ஆமென். செல்லு ங்கள். ஆமென். 86. விசுவாசமாயிருங்கள்; நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்லாம் சரி, சீமாட்டியே, உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறா யா? நான் உனக்கு அந்நியனாய் இருக்கிறேன், ஆனால் நாம் இருவ ருமே தேவனுக்கு அந்நியர்களல்ல. ஓ, என்னே. ஓ, அவர் எவ்வளவு அருமையானவர், எவ்வளவு அற்புதமானவர்: சமாதான பிரபு, இராஜாதி இராஜா, நித்திய பிதா, அந்த மகத்தான “இருக்கிறேன்” என்பவர் (the great I AM), சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, பிரகாசிக்கும் விடிவெள்ளி நட்சத்திரம். பரலோகத்திலும் பூமியிலு மிருக்கிற எல்லா வல்லமையும் அவருடைய கரங்களில் இருக்கிறது. அவர் தம்முடைய ஜனங்களின் மத்தியில் நின்று, கைகளை விரித்த வராய், அதாவது விரும்புகிறவர் யாராயிருந்தாலும் அவர்கள் வந்து இலவசமாய் பானம் பண்ணும்படி நின்று கொண்டிருக்கிறார். இங்கே வரிசையின் முடிவில் அமர்ந்து என்னை பார்த்துக்கொண் டிருக்கும், சிறிய சீமாட்டியே, உங்களுக்கு பித்தப்பை கோளாறு இருக்கிறது, ஆம் தானே? இயேசு உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு பித்தப்பைக்குள்ளாக இர த்த கசிவு இருக்கிறது. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங் கள் விசுவாசிக்கிறீர்களா? அதை உங்கள் முழு இருதயதுடனும் ஏற்றுகொள்வீர்களா? அங்கிருந்து உங்கள் கை குட்டையை அசைத்து காட்டுங்கள், சீமாட்டியே. ஆம், அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். அது சரி. எழுந்து நில்லுங்கள்; இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கிவிட் டார். ஆமென், ஆமென். 87. சகோதரியே, உங்களுக்கு புற்று நோயிருக்கிறது. அந்த புற்று நோய் மார்பகத்திலிருக்கிறது. அது சரிதானே? உங்கள் பரிசோதனையை என்னால் பார்க்க முடிகிறது, அது உங்கள் மார்பகத்தில் இருப்பதை நான் பார்கிறேன். அதை எடுத்துபோடும்படி இயேசு இங்கே இருக்கிறார் என்று உங்களால் விசுவாசிக்க முடிகிறதா? அருகில் வாருங்கள். பாருங்கள், இங்கே இருக்கும் ஏதோவொன்று நீங்கள் அங்கே இல்லை என்பதை அறிந்திருந்தது, நின்றுக்கொண்டிருப் பதை மட்டுமே அறிந்தது. இயேசு, “விசுவாசிக்கிறவர்களை பின் தொடரும் அடையாளங்க ளாவன, வியாதியஸ்த்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்போது அவர்கள் சொஸ்த்தமடைவார்கள்” என்றார். (மாற்கு-16:17) நாங்கள் விசுவாசிகள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்பொழுது, என்னு டைய சகோதரியிடமிருந்து அவளுடைய ஜீவனை எடுத்த இந்த பிசாசை நான் இயேசுவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன். சாத்தா னே, இந்த பெண்ணை விட்டு வெளியே போகும்படி உனக்கு நான் ஜீவிக்கிற தேவனைகொண்டு ஆணையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சீமாட் டியே. சென்று விசுவாசத்துடன் இருங்கள், உங்கள் முழு இருதயத்து டனும் விசுவாசியுங்கள். ஓ, எவ்வளவு அருமையானது. 88. சீமாட்டியே, இப்படி பாருங்கள். நாம் அந்நியராயிருக்கிறோம்.. என்னை உங்களுக்கும், உங்களுக்கு என்னையும் தெரியாது. அநேக மாய் ஜீவியத்தில் நாம் முதன்முறை சந்திக்கிறோம். தேவன் நம் இருவரையும் அறிவார், ஆம் தானே? இப்பொழுது, கர்த்தர் என்னை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா; நான் கூறிய அனை த்தும் சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும்? பின்பு, உங்களுக்காக நான் ஏதோவொன்றை செய்தால், என்னால் முடிந்தால் நான் செய்வேன் என்று உங்களுக்கு தெரியும். என்னை நீங்கள் அவ்விதமாக, தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசித்தால், என்னால் முடிந்த எதைவேண்டுமானாலும் உங்களுக்காக நான் செய்வேன். ஆனால் சகோதரியே என் வரம் வரம்பிற்குட்பட்டதே. அவ்வளவுதான். ஆனால் அந்த வரம் தேவன் இங்கே இருக்கிறார் என்றும் அவர் விரும்புகிறார் என்றும் அறிவிக் கிறது. நிச்சயமாக, அவர் இந்த காரியங்களை நான் செய்யும்படி அனு மதித்தால், தேவனை பற்றின சில கருத்துகளை நான் அறிந்துக் கொள்வேன், ஆம் தானே? நான் தேவனை பற்றின கருத்துகளை அறி ந்துக்கொள்ள விரும்புகிறேன், அறிந்துக்கொள்ள வேண்டும், நாம் அந்நியர்களாய் இருப்பதால்... ஆனால் இங்கே, நீங்கள் உங்களுக்காக வரவில்லை. நீங்கள் இங்கே ஒரு பையனுக்காக வந்திருக்கிறீர்கள்; அது உங்கள் மகனுக் காக வந்திருகிறீர்கள். அது ஏதோவொன்று ... அவனுடைய தலை பரிசோதிக்கப்டுவதை நான் காண்கிறேன். அது ஒரு ... மருத்துவர் அது ஒரு வளர்ச்சியில்லாத செல் என்று கூறினார் அல்லது மூளை சார்ந்த ஏதோவொன்று. நீங்கள் ஒரு பிரசங்கியாரின் மனைவி. உங்க ளுடைய கணவன், அவரின் தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிட்டது, மேலும் அவருடைய பற்களுக்கிடையே சந்து விழுந்துவிட்டது ... அது சரிதானே? மகத்துவமும் சர்வவல்லமையுள்ள தேவனே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, உம்முடைய நாமத்தினால் நான் ஆசீர்வதி க்கும் இந்த பெண்ணின் மீது உம்முடைய ஆசீர்வாதங்களை அனு ப்பும். அவளுடைய வாஞ்சைகள் நிறைவேறட்டும். இயேசு கிறிஸ்து வின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் ஆமென். ஆமென்; விசுவா சமாயிருங்கள்; சந்தேகபடாதீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 89. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சகோதரியே? உங்கள் முழு இருத யத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்கள் விசுவாசித்தால், அது உங்களுக்காகத்தான். தேவன் விசுவாசிகளை கனப்படுத்து கிறார். அது சரிதானே? “ஆனால் விசுவாசிக்கிறவர்களுக்கு ... “ நான் உங்களிடம் ஒன்றுமே கூறாமல், உங்கள் மீது கைகளை வைத்தால், எப்படியாயினும் நீங்கள் சுகமாகிவிடுவீர்கள் என்று விசுவாசிக்கிறீர் களா? விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள்? அவ்விதமான விசுவாசத்தை நான் விரும்புகிறேன். தேவனிடம் விசுவாசமாயிருங்கள். இப்பொழுது, அது என்னை பெலவீனமடைய வைக்கிறது. உங்க ளுக்கு புரிகிறதா? நான் என் அருகிளில்லை. ஆனால் என்னால் – என்னால் – என்னால் – என்னால் முடியவில்லை – என்னால் அதை விளக்கமுடியவில்லை. உங்களுக்கு புரிகிறதா? இப்பொழுது, என் மேல் இருக்கும் அது, இதற்காகவே நான் அந்த ஒளி பெருக்கியின் மேல் என் கையை போடுவதே இல்லை. புரிகிறதா? நீங்கள் சற்றே அசைந்தீர்கள், உங்களுக்கு தெரிகிறதா. ஆகவே நீங்கள் மிகவும் பயபக்தியாய் வரவேண்டுமென நான் விரும்புகிறேன். (பாருங்கள்?), விசுவா சியுங்கள். இப்பொழுது, இப்படி பாருங்கள், எனவே தேவனால் உங்க ளுக்கு சொல்லமுடியும் – உங்களை ஊக்கப்படுத்தும் ஏதோவொன்றை சொல்லமுடியும். உங்களுடைய பிரச்சனை தலையிலிருக்கிறது; உங்களுக்கு தலையில் பிரச்சனையிருக்கிறது. உங்களுக்கு சமீபத்தில் ஏதோ கோளாறு இருந்தது. ஒருவிதமான – மாரடைப்பு ஏற்ப்பட்டது. உங்களுக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டது. சமீபத்தில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டது. அவர் உங்களை சுகமாக்கபோகிறார் என் பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். ஓ தேவனே, சமாதான பிரபுவே, நித்திய பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்தி னால் நான் ஆசீர்வதித்த இந்த பெண்ணின் மீது உம்முடைய ஆசீர்வா தங்களை அனுப்பம், இவளுடைய சுகமளித்தளுக்காக அனுப்பும். இயேசுவிற்காக கேட்கிறேன். ஆமென். 90. எல்லாம் சரி. இப்பொழுது விசுவாசமாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். வாருங்கள், ஐயா. நீங்கள் ஒவ் வொருவரும் விசுவாசிக்கிறீர்களா? அங்கே மீண்டுமாக விசுவாசம் கொண்டிருங்கள். இப்பொழுது, உங்களால் விசுவாசிக்க முடிந்தால், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அங்கே பெருங்குடல் பிரச்சனையுடன் அமர்ந்திருக்கும் சிறிய சீமாட்டியே, கர்த்தராகிய இயேசு உங்களுக்கு சுகமளிப்பார் என்று நீங்கள் நினைகிறீர்களா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படி யானால் நீங்கள் சுகத்தை பெறுவீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகபடுத்துவார். அங்கே அமர்ந்திருக்கும் அந்த சீமாட்டியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; உங்கள் கையின் கீழே ஒரு கட்டியிருக்கிறது, இருக் கிறதா? ஆம். மேலும் உங்களுக்கு இருதயக்கோளாறும் இருக்கிறது. ஆம் தானே? நீங்கள் அனைவரும் உங்கள் கைகளை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள், இயேசு உங்களை நேசிக்கிறார், அவர் உங்களு க்கு சுகத்தை அளிப்பார். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஜீவிக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். பாருங்கள், உங்களுக்கு ஜெப அட்டையே தேவையில்லை; உங்களுக்கு விசுவாசம்தான் தேவை. ஆமென். இப்பொழுது நான் உங்களுக்கு சத்தியத்தைதான் கூறினேன் என்று நீங்கள் விசுவாசிக்கும்படி உங்களுக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் கண்டு விசுவாசியுங்கள். உலகத்தின் முடிவு பரியந்தம் அவரை நோக்கி பாருங்கள். இப்பொழுது, ஐயா, நாம் அந்நியராயிருக்கிறோம்; நான் அவரு டைய ஊழியக்காரன் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தரு டைய ஊழியக்காரன் என்று? உங்களுக்கும் எனக்கும் நடுவே ஒரு மேஜை வருகிறது, அதிலிருந்து நீங்கள் பின் செல்லுங்கள்; உங்களு க்கு வயிறு கோளாறு இருக்கிறது. இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகமளிப்பார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வயிற்றில் ஒருவிதமான எரிச்சல், புண் போன்ற, அது வயிற்று புண். அவர்கள் அது வயிற்றின் திண்டிளிருக்கிறது என்கிறார்கள். வயிற்றின் அடிபாக த்தில். நீங்கள் பதட்டமாய், மன அமைதியில்லாமல், எல்லா நேரங்க ளிலும் கவலை படுகிறவராய் இருக்கிறீர்கள். நீங்கள் ஆழ்ந்து யோசி க்கும் நபர்; நீங்கள் எப்பொழுதும் நடக்காத ஒன்றை யோசித்து கவலைப்படுகிற வராய் இருக்கிறீர்கள். அதை நீங்கள் அடைவதற்கு முன்னரே, ஒருபோதும் நடைபெறாத காரியங்களை திட்டமிடுகிற வர். அதுதான் உங்கள் இயல்பு. உங்கள் வயிறு உங்களுக்கு சுகமாகி விட்டது. சென்று உங்களுக்கான இரவு உணவை வாங்கி புசியுங்கள், ‘ஏனெனில் உங்களுடைய விசுவாசம் உங்களை இரட்சித்தது. தேவ னுக்கு ஸ்தோத்திரம். ஆமென். 91. அவ்விதமாகதான் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். ஐயா, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? வேறெ ந்த நோயும் ஜனங்களை கொல்லாத அளவிற்கு கொன்ற நோய் உங் களுக்கிருக்கிறது. இருதய கோளாறு. இன்றிரவு, தேவன் அதிலிருந்து உங்களுக்கு சுகமளிப்பார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்தி, “கர்த்தராகிய இயேசுவை நான் ஏற்றுகொள்கிறேன்” என்று கூறுங்கள். இங்கே என்னிடம் வாருங் கள். சாத்தானே, தேவனை கொண்டு உனக்கு நான் ஆணையிடுகி றேன்; உன் முகம் கிழிக்கபட்டது, இந்த மனிதனை விட்டு வெளியே வா. நீங்கள் இயேசுவின் நாமத்தினால் சமாதானத்துடன் செல்லுங் கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. இப்படி பாருங்கள், சீமாட்டியே. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நாம் அந்நியராயிருக்கிறோம், ஆனால் நீங்கள் பெண்களுக்கான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருகிறீர்கள், பெண்க ளுக்கான பிரச்சனை. அந்த பிரச்சனை மிகவும் அதிகமான கோழை யை வெளியேறும்படி செய்தது, அது எதிலிருந்து வந்ததென்றால். நிச்சயமாக அதை பார்க்க மட்டுமே முடியும் (அது எங்கே சம்பவித் தது என்று உங்களுக்கு தெரியும், அது அங்கே – ஒரு இரகசிய இடத் தில்) தேவன் மட்டுமே அதை அறிவார். அது என்ன, உங்கள் அடி வயிற்றில் உங்களுக்கு சீழ் வடிகிறது. முக்கியமாக உங்கள் இடது பக்கத்தில் உங்களுக்கு வலியிருக்கிறது. எனவே, இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகமளிப்பார். உங்களுடைய விசுவாசம் உங்களை சுகப டுத்தும். இப்பொழுது, உங்கள் வழியே நீங்கள் சென்று, களிக்கூர்ந்து “நன்றி, தேவனே” என்று கூறுங்கள். 92. சிறிய பையனே, தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று நீ விசு வாசிக்கிறாயா? அப்படியானால் போய் உன் இரவு உணவை சாப்பிடு. உன்னுடைய வயிற்று பிரச்சனை போய்விட்டது. உங்களுடையதும் தான் தாயாரே. உடனே இவனுடன் சென்று பயணம் செய்து தேவனை துதியுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசு வாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் அந்த சிறுநீரக பிரச்சனையை சுகப்படுத்தி உங்களை குணமாக்குவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் சுகப்படுத்திவிட்டார். முன்னேறி செல்லுங்கள், “ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத் திரம்” என்று சொல்லிக்கொண்டே முன்னேறி செல்லுங்கள். நீங்கள் ஒரு காரியத்திற்காக எப்பொழுதுமே பதட்டமாயிருக்கிறீர் கள், எப்பொழுதுமே மன கவலையுடன் இருக்கிறீர்கள். உங்களுக்கு வயிற்று கோளாறும் இருக்கிறது. இப்பொழுது, உங்கள் வழியே முன்னேறி செல்லுங்கள், “கர்த்தராகிய இயேசுவே, நன்றி” என்று கூறிக்கொண்டே சென்று சுகத்தை பெற்றுகொள்ளுங்கள். எல்லாம் சரி. சீமாட்டியே வாருங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசி க்கிறீர்களா? நிச்சயமாக நீங்கள் தொல்லைகுட்பட்டிருக்கிறீர்கள்; ஒரு காலை வேளையில் நீங்கள் எழுந்தபோது, ஒருவிதமான மடக்க முடியாத, கீழ்வாதம் வந்தது. வயிற்று கோளாறும் கூட; நரம்பு தளர்ச்சியே அதற்கு காரணம். நீங்கள் ஏப்பம் விடும்போது உங்கள் வாயிலிருந்து அமிலம் வரும்படி செய்கிறது. அது உண்மை, ஆம் தானே? பிதாவாகிய தேவனே, உம்முடைய குமாரன் இயேசுவின் நாமத்தினால் என்னுடைய கரங்களை இவள் மேல் வைத்து, இந்த பிசாசை கடிந்து கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் போ என்று கூறுகிறேன். ஆமென். சகோதரியே, தேவனை துதிக்கொண்டும், களி கூர்ந்துகொண்டும், மகிழ்ச்சியாக, தேவனுக்கு நன்றி கூறிக்கொ ண்டே செல்லுங்கள். ஆமென்! 93. என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர் களா என் சகோதரனே? உங்களுடைய பிரச்சனை என்னவென்று தேவன் என்னிடம் கூறினால், அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் கீழ்படிவீர்களா? நீங்கள் கீழ்வாதத்தினால் தெருவின் ஓரத்தி ற்கு செல்வதை நான் பார்க்கிறேன்; உங்களுக்கு கீழ்வாதம் இருக்கி றது. உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள் – இந்தவிதமாக உங்களுடைய கால்களை மேலும் கீழுமாக உயர்த்துங்கள். இப்பொழுது, களிகூர்ந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் சுகமாகி மேடைய விட்டு கீழே செல்லுங் கள். செல்லுங்கள் ... ஆம், சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. நாம் அனைவரும் “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல் வோமாக. இப்பொழுது, எல்லாம் சரி. சீமாட்டியே, எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் செல்வதை நான் பார்க்கிறேன் – குருடான நிலையில் – குரு டான ஆவி உங்கள் கண்களை தாக்குகிறது. தேவன் உங்கள் பார் வையை திரும்ப அளித்து உங்களை சுகப்படுத்துவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதற்காக ஒரு நிமிடம் உங்கள் தலையை தாழ்த்துங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, பார்வையி ல்லாதவர் மேல் இரக்கமாயிரும். இந்த பெண்ணிற்கு பார்வையை திரும்ப அளியும், கர்த்தாவே, இந்த கண்களை கூடுமானால் சாத்தான் சீக்கிரமாக குருடாக்கி விடுவான் என்பதை அறிகிறோம். ஆனால் இப்பொழுது நான் இரக்கத்துடன் கேட்க்கிறேன், என்னுடைய கரங்களை இவள் மேல் வைத்தவாறு, உம்முடைய பிரதிநிதியாக, இவளின் பார்வை இவளுக்கு இயேசுவின் நாமத்தில் திரும்ப வரு வதாக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, உங்களுடைய வழியே களிகூர்ந்து, அங்கே நோக்கி பாருங்கள். இப்பொழுது, உங்களால் பார்க்க முடிகிறதா? அதற்காக உங்களு டைய கரங்களை உயர்த்தி கர்த்தரை துதியுங்கள். ஆமென். 94. சீமாட்டியே, நீங்கள் வருவீர்களா. வலிப்பு நோயிருக்கிறது ... இந்த சிறிய சீமாட்டிக்கு. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. அப்பொழுதே அது உங்களை விட்டு போய்விட்டது. தேவனிடம் விசுவாசமாயிருங்கள்; அது மீண்டும் வராது. அவரை விசுவாசியு ங்கள்; சகோதரியே, உங்களுடைய விசுவாசம் அப்பொ ழுதே அதை தொட்டு விட்டது. தேவனிடம் விசுவாசமாயிருங்கள்; விசுவாசி யுங்கள். சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய தீர்க்கத ரிசி என்பதால் எனக்கு கீழ்படிவீர்களா? உங்களுக்கு என்ன கோளாறு இருக்கிறது என்று நான் கூறினால், நான் அவருடைய ஊழியக்காரன் என்று எனக்கு கீழ்படிவீர்களா? உங்களுக்கு கீழ்வாதம் இருக்கிறது. அது சரிதானே, அது உண்மைதானே? அது உண்மையென்றால் உங்க ளுடைய கரத்தை உயர்த்துங்கள். களிகூர்ந்துக்கொண்டே மேடையை விட்டு செல்லுங்கள்; இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துவார். ஆமென். விசுவாசமாயிருங்கள். ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நாம் அந்நியர்களாயிருக்கி றோம் என்று நான் நினைக்கிறேன்; உங்களுக்கு என்னையும், எனக்கு உங்களையும் தெரியாது. நான், அநேகமாய், என் ஜீவியத்தில் உங் களை நான் கண்டதே இல்லை. ஆனால் தேவன் உங்களை அறிவார், அது உண்மைதானே? தேவன் உங்களுடைய பிரச்சனை என்ன வென்று எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் கர்த்தராகிய இயேசு வினிடத்திலிருந்து வரும் சுகமளித்தலை ஏற்றுக்கொள்வீர்களா? உங் களுடைய மீதமுள்ள ஜீவியத்திலும் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த மனிதனை ஒரு நிமிடம் நான் பார்க்க விரும்புகிறேன். பாருங்கள், உங்களை நான் அறியேன், உங்களை நான் பார்த்ததே இல்லை, ஆனால் நீங்கள் ஒரு வியாதிப்பட்ட மனிதன் என்பதை அறிகிறேன் அல்லது நீங்கள் இந்த நிலையில் இருக்கமாட்டீர்கள்; நீங்கள் ஒல்லி யாகவும் ஏழ்மையாகவும் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு கருத்த நிழல் உங்கள் மேல் நகர்வதை நான் காண்கிறேன்; அது புற்றுநோய். ஒன்று, இரண்டு மூன்று – மூன்று அறுவை சிகிச்சை நடந்ததை நான் காண்கிறேன். இந்த புற்று நோய்க்காக மூன்று அறுவை சிகிச்சை நடந்தது. அது உண்மை. ஆனாலும் அது உங்களுக்கு எந்த நன்மை யையும் செய்யவில்லை. மேலும் நீங்கள் தோல்வியடைகிறவராய், ஏழ்மையாகி கொண்டே போகிறீர்கள். உங்களுடைய பிரச்சனை என்னவென்பதை நான் கூறுகிறேன். என்னை தேவனுடைய தீர்க்க தரிசி என்று ஏற்றுக்கொள்வீர்களா? உங்களிடம் ஒரு பழக்கம் இருக் கிறது, புகை பிடிக்கும் பழக்கம், அதினால்தான் உங்களுக்கு புற்று நோய் வந்தது. அந்த காரியங்களை தூக்கி எறிந்து விடுங்கள். இனி ஒருபோதும் அதை செய்யவே செய்யாதீர்கள். வீட்டிற்கு சென்று சுகமாகுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த பிசாசை நான் கடிந்துக் கொள்கிறேன். அல்லேலுயா! நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏழுந்து நில்லுங் கள், நீங்கள் அனைவரும். சர்வ வல்லமையுள்ள தேவனே, கர்த்தரா கிய இயேசுவின் நாமத்தில் ஒவ்வொரு பிசாசையும், அசுத்த ஆவிக ளையும் நான் கடிந்துக்கொண்டு, அவைகளை வெளியே துரத்து கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில்.